என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது.
    • இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

    ராஜ்கோட்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன்ஷா ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

    முதல் இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றி உற்சாகத்துடன் களம் இறங்கும் இந்திய அணி தொடரை வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா ஆகியோர் பேட்டிங்கிலும், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல் உள்ளிட்டோர் பந்து வீச்சிலும் அட்டகாசமாக செயல்பட்டு வெற்றிக்கு உதவினர். ேகப்டன் சூர்யகுமார் யாதவ் இரு ஆட்டத்திலும் (0, 12 ரன்) சோபிக்கவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்திலாவது ரன் மழை பொழிவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு முதல் இரு ஆட்டத்திலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவர் உடல்தகுதியுடன் இருக்கிறார். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் இடம் பிடிப்பாரா? இல்லையா? என்பதை பயிற்சியாளர் கம்பீரும், கேப்டன் சூர்யகுமாரும் தான் முடிவு செய்வார்கள் என இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோட்டாக் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

    இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் ஜோஸ் பட்லர் (68 மற்றும் 45 ரன்) தவிர மற்றவர்களின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் இரு ஆட்டத்திலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மிரளுகிறார்கள். இதே போல் பந்து வீச்சும் சீராக இல்லை. முந்தைய ஆட்டத்தில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் கூறுகையில், 'நாங்கள் விக்கெட்டுகளை கைப்பற்றவே முயற்சிக்கிறோம். அதனால் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது குறித்து கவலையில்லை. ஆட்டத்தில் நாங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அதைத் தான் பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லமும் விரும்புகிறார்' என்று குறிப்பிட்டார். தொடரில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம்.

    ராஜ்கோட் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு இதுவரை நடந்துள்ள 5 ஆட்டங்களில் 4-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஜனவரியில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் சதத்தால் 228 ரன்கள் குவித்து எளிதில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் நடப்பு தொடரில் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. இரவில் பனிப்பொழிவில் பந்து வீசுவது சிரமம் என்பதால் 'டாஸ்' வெல்லும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
    • விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இவர் கிரிக்கெட்டின் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மை காலமாக கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கவாஸ்கர் ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ஆனால் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்பதால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.

    மேலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதற்கும் மேலாக ரோகித்தை ஓய்வு பெறுமாறு கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அந்தத் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தொடர்ந்து இந்திய அணி மீதும் தன் மீதும் முறையற்ற விமர்சனத்தை வைத்ததாகவும் இது எங்களுடைய மனதை பாதிக்க வைத்திருக்கிறது என்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றது. இதனால் கவாஸ்கரை பிசிசிஐ நிர்வாகிகள் கண்டிக்கும் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருப்பதாக தெரிகிறது.

    எனினும் ரோகித் சர்மா இந்த புகாரை அவரே முன்வந்து அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் பயிற்சியாளராக இருந்த கம்பீர்தான் இதனை தூண்டி விட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    கவாஸ்கர் எல்லை மீறி வீரர்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியாளரையும் அவர்களிடம் இருக்கும் குழுவையும் சேர்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது.
    • இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

    • துபாயில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
    • பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1000 ஆகும்.

    மும்பை:

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நேரப்படி 2 மணியும் இந்திய நேரப்படி 1.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும். துபாயில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. வரும் நாட்களில் இது குறித்து தகவல் கிடைக்கும் என்று ஐசிசி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளுக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ. 1000 ஆகும். பிரீமியம் வகை 1500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் போட்டிக்கு நான்கு நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வினோத் காம்ப்ளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது.
    • அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்பிளி. மது போதையால் தனது வாழ்க்கையை தொலைத்த வினோத் காம்ப்ளி, தற்போது எழுந்து நிற்கவே கஷ்டப்படுகிறார். இந்த சூழலில் தானேவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வினோத் காம்ப்ளி வீடு திரும்பியிருக்கிறார்.

    இந்த நிலையில் வினோத் காம்ப்ளி இரண்டாவது மனைவியான ஆண்ட்ரியா அவரை விவகாரத்து செய்ய இருந்ததாக கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வினோத் காம்பிளிக்கு மது பழக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அவரை விட்டு பிரிய நான் முடிவெடுத்தேன். ஆனால் நான் அவரை விட்டு சென்றால் வினோத் காம்ப்ளியால் தனியாக வாழ முடியாது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவருக்கு உதவி செய்ய யாருமே இருக்க மாட்டார்கள்.

    வினோத் காம்ப்ளி ஒரு குழந்தை போன்றவர். அவரை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கின்றது. அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதுபோல் ஒரு சூழ்நிலையில் ஒரு நண்பரை கூட என்னால் பிரிந்து செல்ல முடியாது. அப்படி இருக்கும்போது வினோத் காம்ப்ளி நண்பரைவிட என் வாழ்க்கையில் மேலானவர்.

    ஆனால் என் வாழ்க்கையில் பல சமயங்களில் வினோத் காம்ப்ளியை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நான் பலமுறை நினைத்து இருக்கிறேன். ஆனால் நான் அப்படி சென்றால் எனக்கு அது கவலையை கொடுக்கும். வினோத் காம்ப்ளி சாப்பிட்டாரா? இல்லையா? அவர் சரியாக படுத்து தூங்குகிறாரா? இல்லையா? இப்போது அவர் எப்படி இருக்கின்றார் என்றெல்லாம் எனக்கு தோன்றும்.

    உடனடியாக நான் அவர் எப்படி இருக்கிறார் என்று பார்க்க சென்று விடுவேன். வினோத் காம்ப்ளிக்கு நான் முக்கியம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னுடைய மகனும் எங்கள் குடும்ப நிலையை பற்றி புரிந்து கொண்டிருக்கிறார். உனக்கு தந்தையும் நான் தான், தாயும் நான் தான் என்பதை மகன் கிறிஸ்டியானோவிடம் சொல்லி புரிய வைத்திருக்கின்றேன். வினோத் காம்ப்ளியின் தந்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்.

    என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார். 

    • ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத ஜெய்ஸ்வாலை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள்.
    • அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன்.

    ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமடைந்து வந்த சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகி விளையாடாத போதிலும் ஜெய்ஸ்வாலை நம்பி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுத்த ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    அந்தப் பையன் ரன்களுக்காக பசியுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கதையை பார்க்கும் போதெல்லாம் அவர் இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது.

    அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத அந்த பையனை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள். அவர் நிறைய கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய கண்களில் வித்தியாசமான அணுகுமுறை தெரிகிறது.

    இது தான் இந்திய கிரிக்கெட்டின் அழகாகும். நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஏதேனும் ஒரு பவர் உங்களை நாட்டுக்காக விளையாடச் சொல்லும். அதைத் தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் செய்துள்ளார்.

    என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.

    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம்.

    இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் ஏதுமின்றி அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன்:-

    பில்சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஒவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், பிரைடன் கார்ஸ். 

    • விராட் கோலிக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.
    • விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வருவதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பியது.

    இதன் காரணமாக தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். மேலும் தனது பேட்டிங்கில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதற்காக முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கருடன் இணைந்து அவர் பயிற்சி எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி போட்டியில் விளையாட இருக்கும் முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலியை வேறொருவரின் தலைமைக்கு கீழ் விளையாட வைக்காமல் அவருக்கு கேப்டன் பதவியை வழங்க டெல்லி மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்து அவரிடம் கூறியது.

    ஆனால் அதனை மறுத்த விராட் கோலி அந்த பதவி வேண்டாம் என்றும் சாதாரண ஒரு வீரராக விளையாட விருப்பப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார். தற்போது உள்ள சூழலில் டெல்லி அணியில் எந்தெந்த வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அதன் காரணமாக தானும் அணியில் ஒரு அங்கமாக இணைந்து சாதாரண வீரராக விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறியுள்ளாராம்.

    • 2025-ம் ஆண்டுக்கான பிக்பாஷ் கோப்பையை ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வென்றது.
    • இறுதி போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி வீரர் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய 23 வயதான இளம் வீரர் மிட்செல் ஓவன் அதிரடியாக விளையாடினார். இதனால் ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இதன்மூலம் பிக்பாஷ் தொடரில் அதிகவேக சதம் அடித்த கிரெய்க் சிம்மன்ஸ் (39) சாதனையை ஓவன்(39) சமன் செய்தார். 2014-ம் ஆண்டு நிகழ்த்தி இந்த சாதனையை ஓவன் 11 ஆண்டுகளுக்கு பிறகு சமன் செய்துள்ளார்.

    • முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
    • இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் தகுதி பெற்றது.

    இந்நிலையில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேசன் சங்கா 67 ரன்கள் குவித்தார். ஹோபார்ட் ஹரிகேன்ஸ் தரப்பில் கேப்டன் எல்லீஸ், ரிலே மெரிடித் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக மிட்செல் ஓவன்- காலேப் ஜூவல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய ஓவன் 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    • இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
    • ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற 6-வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த ஒருநாள், டெஸ்ட், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர் , வீரங்கனைகள் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 3 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்தது. அதன்படி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா, இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக், ஜோரூட் ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

    இறுதியில் இந்த விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா தட்டிச் சென்றார். இவர் கடந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இதன் மூலம் ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ராவும் இணைந்துள்ளார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் (2004), கவுதம் கம்பீர் (2009), சேவாக் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2018) ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர்.

    • ரஞ்சி டிராபியில் மும்பைக்காக களமிறங்கிய ரோகித், மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் எனறு சிறுவன் உருக்கமாக கூறியுள்ளார்.

    இந்திய அணியின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படுபவர் ரோகித் சர்மா. கடந்த ஆண்டுகளில் இறுதியில் இருந்து இவரது கேப்டன்ஷிப் மற்றும் பேட்டிங் மோசமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்தும் பார்ம் இல்லாத காரணத்தால் கடைசி டெஸ்ட்டில் தாமாகவே வெளியேறினார்.

    இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருடன் ரோகித் ஓய்வு அறிவித்து விடுவார் என தகவல்கள் வேகமாக பரவியது. இதனையடுத்து இந்த கருத்துக்கு ரோகித் சர்மா முற்றுப்புள்ளி வைத்தார். எனது ஓய்வு அறிவிப்பை நான் தான் முடிவு செய்வேன் என திட்டவட்டமாக கூறினார்.

    இந்திய அணியின் பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை வெளிப்படுத்தாத நிலையில் அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடினர்.

    அந்த வகையில் மும்பை அணிக்காக களமிறங்கிய ரோகித் சர்மா, மீண்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவர் ஓய்வு அறிவிக்க உள்ளார் என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம் என்றும் வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள் என்றும் 15-வது வயது சிறுவன் கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சமீப காலங்களில் நீங்கள் நன்றாக விளையாடாததை பொருட்படுத்த வேண்டாம். வெறுப்பவர்கள் வெறுக்கத்தான் செய்வார்கள். ஆனால் உங்களின் தலைமை பண்பு சிறப்பாக உள்ளது. தயவுசெய்து ஓய்வு அறிவித்துவிடாதீர்கள். நான் கிரிகெட் பார்ப்பதற்கு காரணமே நீங்கள்தான். உங்கள் ERA-ல் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்.

    இவ்வாறு சிறுவன் கூறியுள்ளார்.

    ×