என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் அரைசதம் அடித்தார்.
- ஆனால் இரண்டு இன்னிங்சிலும் ஒரேயொரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா அரைசதம் அடித்து கடைசி வரை போராடினார். முதல் இன்னிங்சிலும் 72 ரன்களும், 2ஆவது இன்னிங்சில் 61 (ஆட்டமிழக்கவில்லை) ரன்களும் அடித்திருந்தார்.
முதல் இன்னிங்சில் 1 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார். மொத்தமாக 6 இன்னிங்சில் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி "இந்த தொடரில் ஜடேஜா என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் பேட்டிங்கில் அற்புதமாக இருக்கிறார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை, அவர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இப்படி இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அசத்தினாலும் முக்கியமான பந்துவீச்சு துறையில் அவர் தடுமாறிவிட்டார் என்று கருதுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது.
- அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக்கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்டில் இந்தியா வென்றது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கு முன்பாக ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கேப்டன் பதவி செயல்பாடு குறித்து டோனியிடம் இருந்து சுப்மன் கில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
சுப்மன் கில் தற்போதுதான் கேப்டன் பதவியில் தனது ஆரம்ப கட்டத்தில் இருக்கிறார். அவரிடம் சிறப்பான கேப்டனாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது. அவர் போட்டி குறித்து நன்கு சிந்திக்க கூடியவராக இருக்கிறார்.
மேலும் அவர் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதால் நிச்சயம் அடுத்தடுத்த தொடர்களில் அவர் கேப்டன் ஷிப் குறித்தும் படிப்படியாக கற்றுக்கொள்வார்.
ஒரு கேப்டன் தனது அணியில் உள்ள வீரர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை முற்றிலுமாக புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். முன்னாள் கேப்டனான தோனி ஒரு அணியை எவ்வாறு கையாள வேண்டும், வீரர்களிடம் இருந்து திறனை எவ்வாறு வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதை முழுமையாக தெரிந்து வைத்திருப்பவர்.
எனவே டோனியிடம் இருந்து அறிவுரைகளை சுப்மன் கில் கேட்டுப் பெறவேண்டும். தோனியை விட வீரர்களை சிறப்பாக கையாளும் கேப்டனை நான் பார்த்தது கிடையாது. எனவே அவரிடம் இருந்து சுப்மன் கில் பெற்றுக் கொள்ளும் அறிவுரைகள் அவரது கேப்டன் பதவி செயல்பாட்டை நிச்சயம் மேம்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை.
- முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைவிரலில் காயம் அடைந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய மட்டும் வந்தார்.
இந்த நிலையில் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சந்தேகம் நிலவுகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரையான் டென்டஸ்சாட் கூறியதாவது:-
4-வது டெஸ்டில் ரிஷப் பண்ட் விளையாடுவார். ஆனால் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது பற்றி உறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. கீப்பிங் தான் அவர் குணமடைவதில் கடைசிப் பகுதி. அவர் கீப்பிங் செய்ய முடியுமா என்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால், அடுத்த டெஸ்டில் பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையும் செய்வார் என்றார்.
- கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது.
- வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் உலகின் பணக்கார விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 2023-24-ம் நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.9,741.7 கோடி வருவாய் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐ.பி.எல்.லின் பங்களிப்பு ரூ.5,761-ஆக உள்ளது.
சர்வதேச போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் உள்பட ஐ.பி.எல் அல்லாத ஊடக உரிமைகளை விற்றதன் மூலம் ரூ.361 கோடி கிடைத்தது. கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.30 ஆயிரம் கோடிக்கு இருப்பு உள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வட்டியை ஈட்டுகிறது. ஸ்பான்சர்ஷிப்கள், ஊடக ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி நாள் வருவாய் உள்ளிட்டவை மூலம் கணிசமான வருவாய் வருகிறது.
இந்த வருவாயில் 59 சதவீதம் ஐ.பி.எல் போட்டி தொடரில் இருந்து வந்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி தொடர், கிரிக்கெட் வாரியத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற நாங்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினோம்.
- சிலர் கவுன்ட்டி போட்டியில் கூட விளையாடினார்கள்.
வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது. பிங்க் பாலில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்னில் சுருண்டது.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட் கிரிக்கெட்டை மீட்டெடுக்க, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்த முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. டி20 லீக்குகளில் இடம் பிடிப்பதற்காf, தேசிய அணியை ஒரு படிக்கல்லாக பயன்படுத்துகின்றனர் என லாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லாரா கூறியதாவது:-
நாங்கள் முதல்-தர கிரிக்கெட்கள் விளையாடினோம். சில வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடிப்பதற்காக கவுன்ட்டி கிரிக்கெட்டில் கூட விளையாடினார்கள். தற்போது லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை பெறுவதற்னாக படிக்கல்லாக வெஸ்ட் இண்டீஸ் அணியை பயன்படுத்துகின்றனர். இது வீரர்களின் தவறு கிடையாது
இவ்வாறு லாரா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோஸ் பூரன், டி20 லீக்குகளில் விளையாடுவதற்காக 29 வயதிலேயே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 4ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
- தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால், பும்ரா கட்டாயம் விளையாட வேண்டும் என்கிறார் இர்பான் பதான்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதல் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் 2ஆவது போட்டியில் அவரை கட்டாயம் களம் இறக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் 2ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3ஆவது போட்டியில் பும்ரா விளையாடினார். அதில் இந்தியா தோல்வியடைந்தது.
4ஆவது போட்டி வருகிற 23ஆம் தேதி ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம். ஆனால் இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தால் தொடரை இழந்துவிடும். இருந்தபோதிலும், பும்ரா களம் இறக்கப்படுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த நிலையில் 4ஆவது போட்டியில் பும்ரா களம் இறக்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-
எல்லா அணிகளும் அவர்களுடைய சிறந்த வீரர் விளையாட வேண்டும் விரும்பும். ஆனால் அது அந்த வீரருடைய பணிச் சுமையை சார்ந்தது. அவர் சோர்வாக இருப்பதாக உணர்கிறாரா? மற்ற ஏதும் சிக்கல் உள்ளதா? என்பதை பொருத்தது. 3ஆவது போட்டிக்கும், 4ஆவது போட்டிக்கும் இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. இது குணமடைவதற்கு போதுமானதை விட அதிகமான நாட்களாக இருக்கும்.
இது தொடரை தீர்மானிக்கும் போட்டி. காயம் இல்லையனெ்றால், அவர் கட்டாயம் விளையாட வேண்டும். ஐசிசி சாம்பியன்ஷிப்பில், இதுபோன்ற முக்கிய சூழ்நிலையில், மாற்றம் செய்வது அணி நிர்வாகம் அல்லது பந்து வீச்சாளர்களுக்கு சிறந்தது அல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பை கொடுக்கும்.
இவ்வாறு இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
- லார்ட்ஸ் டெஸ்டில் பும்ராவுக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் தொடர்ந்து பவுன்சர் வீசினர்.
- காயப்படுத்த வேண்டு என்ற திட்டத்தில் அவ்வாறு பந்து வீசினர் என கைஃப் குற்றச்சாட்டு.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா 112 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 35 ரன்கள் சேர்த்தது. பும்ரா 54 பந்துகள் சந்தித்து 5 ரன்கள் எடுத்தார்.
பும்ரா பேட்டிங் செய்யும்போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ச்சியாக பவுன்சர் வீசி பும்ராவுக்கு நெருக்கடி கொடுத்தனர். இறுதியாக பென் ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைஃப் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கைஃப் கூறுகையில் "பும்ராவுக்கு எதிராக பவுன்சர் வீச வேண்டும் என்பது பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரின் திட்டம். பும்ரா அவுட்டாகவில்லை என்றால் கைவிரல் அல்லது தோள்பட்டையை காயப்படுத்த வேண்டும். அவர்கள் பேட்டிங் செய்ய கடினமாக இருக்கும் முக்கியமான பந்து வீச்சாளரை காயப்படுத்த இதுதான் பந்து வீச்சாளர்கள் மனநிலையில் நிலைத்திருக்கும். இந்த திட்டம் பின்னர் அவர்களுக்கு வேலை செய்தது. பும்ரா ஆட்டமிழந்தார்.
இவ்வாறு பும்ரா தெரிவித்தார்.
- பென் ஸ்டோக்ஸ் லார்ட்ஸ் மைதானத்தில் 44 ஓவர்கள் வீசினார்.
- 5 விக்கெட் வீழ்த்தியதுடன், ரிஷப் பண்ட்-ஐ ரன்அவுட் ஆக்கினார்.
நான் கேப்டனாக இருக்கும்போது பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என இங்கிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டனாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. தனது உடல்நிலை ஒத்துழைக்காததால் டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார். அடிக்கடி காயம் ஏற்படுவதால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் கடின முயற்சியால் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்வார். பெரிய அளவில் பந்து வீசமாட்டா். ஆனால் இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இரண்டு இன்னிங்சில் சேர்த்து 44 ஓவர்கள் வீசினார். முதல் இன்னிங்சில் 2 விக்கெட், 2ஆவது இன்னிங்சில் 3 விக்கெட் என 5 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்களுக்கு மேல் வீசினார்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னதாக நான் கேப்டனாக இருக்கும்போது, அதிக ஓவர்கள் வீச வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதும் பென் ஸ்டோக்ஸ் எனது பேச்சை கேட்கவில்லை என ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜோ ரூட் கூறியதாவது:-
நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால் இது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் முயற்சி செய்து வருகிறேன். இதை அவரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அவர் எப்போதும் எனது பேச்சை கேட்கவில்லை. நான் கேப்டனாக இருக்கும்போது, அவர் என்னுடைய பேச்சை கேட்கவில்லை.
இப்போது அவர் செய்தது நம்பமுடியாத முயற்சி. நாங்கள் முன்னோக்கி செல்வதற்கான நல்ல அறிகுறி. ஏனென்றால் அவர் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு அந்த மனநிலையும், போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பமும் உள்ளது. அவரை எங்கள் கேப்டனாக கொண்டிருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்.
இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
- 2019ஆம் ஆண்டில் இருந்து டி20 கிரிக்கெட் மட்டுமே விளையாடி வருகிறார்.
- இதுவரை 84 டி20 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அந்த்ரே ரஸல். 37 வயதான இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகள் அவருடைய சொந்த ஊரான ஜமைக்காவில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் விளையாடிய பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
அந்த்ரே ரஸல் 2019ஆம் ஆண்டில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 84 போட்டிகளில் விளையாடி 1078 ரன்கள் அடித்துள்ளார். 61 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், ரஸல் ஓய்வு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாதிப்ப ஏற்படுத்தும்.
முன்னதாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதிலேயே ஓய்வை முடிவை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த்ரே ரஸல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார். 56 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் அடித்துள்ளார். 70 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
அடுத்த தலைமுறை கரீபியன் கிரிக்கெட்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் வகையில், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை உயரிய நிலையில் முடிக்க விரும்புகிறேன் என ரஸல் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.
- சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்
இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
- இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக டாமி பியூமாண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் களமிறங்கினர். இதில் ஆமி ஜோன்ஸ் 1 ரன்னிலும் டாமி பியூமாண்ட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து எம்மா லாம்ப்- நாட் ஸ்கைவர்-பிரண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எம்மா லாம்ப் 39 ரன்னிலும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த சோபியா டங்க்லி- ஆலிஸ் டேவிட்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினர். ஆலிஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சோபியா 83 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார்.
- வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 வடிவிலான தொடரிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவரில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.






