என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 259 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து
- இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.
- இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக டாமி பியூமாண்ட் மற்றும் ஆமி ஜோன்ஸ் களமிறங்கினர். இதில் ஆமி ஜோன்ஸ் 1 ரன்னிலும் டாமி பியூமாண்ட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து எம்மா லாம்ப்- நாட் ஸ்கைவர்-பிரண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எம்மா லாம்ப் 39 ரன்னிலும் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 41 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த சோபியா டங்க்லி- ஆலிஸ் டேவிட்சன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து அசத்தினர். ஆலிஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய சோபியா 83 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






