என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • டெஸ்ட் தொடரில் 3-0 என வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.
    • 3வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    ஜமைக்கா:

    ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது.

    முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3-0 என வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா. குறிப்பாக, 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்னுக்கு ஆல் அவுட்டானது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் தனது அணியை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா போன்ற ஜாம்பவான்களை அழைத்து ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாக தலைவர் டாக்டர் கிஷோர் ஷாலோ கூறுகையில், அணியின் நலனைக் கருத்தில் கொண்டு மூத்த வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    • முதலில் விளையாடிய நியூசிலாந்து 173 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா 152 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    ஜிம்பாப்வேயில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நியூசிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் ராபின்சன் 75 ரன்களும் பெவோன் ஜேக்கப்ஸ் 44 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் க்வேனா மபாகா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 18.3 ஓவரில் 152 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது.

    • இங்கிலாந்து அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
    • இங்கிலாந்து வெற்றி சதவீத புள்ளிகள் ஐந்து அளவு குறைந்திருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து- இந்தியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி வீரர்கள் தாமதப்படுத்தியதாகக் குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக 3-வது நாள் இறுதியில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஓவர்களை எதிர்கொள்ள தாமதப்படுத்தியதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டி மோதலில் ஈடுபட்டனர்.

    ஆனால் இந்தப் போட்டி ஐந்து நாள் முடிவடைவதற்குள்ளே மூன்றாவது செஷனில் போட்டி முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஓவர்களை தாமதப்படுத்தியதாகக் கூறி இங்கிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 10% அபராதமும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

    இதனால் இங்கிலாந்து வெற்றி சதவீத புள்ளிகள் ஐந்து அளவு குறைந்திருக்கிறது. இதன் மூலம் இரண்டாவது இடத்திலிருந்த இங்கிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்திற்கு சரிந்திருக்கிறது.

    இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் நேர்மையாக ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகின்றேன். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமேதான் ஓவர்களைக் குறைவாக வீசினார்கள். இந்த விஷயத்தில் இரண்டு அணிகளுமே தவறு செய்தது. ஆனால் ஒரு அணிக்கு மட்டும் தற்போது அபராதம் விதிக்கப்பட்டிருப்பது என்னால் நம்பவே முடியவில்லை.

    என்று மைக்கேல் வாகன் கூறினார்.

    • ஒலிம்பிக்கில் 2028, ஜூலை 12 முதல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளது.
    • 2028 ஜூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது.

    லாஸ்ஏஞ்சலஸ்:

    லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக, 1900-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்-2028ல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவத்தில் நடைபெறும்.

    தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக அணிகளுக்கு இடையே போட்டி நடக்கும். பதக்கத்துக்கான போட்டிகள் ஜூலை 20 (பெண்கள்) மற்றும் 29 (ஆண்கள்) ஆகிய தேதிகளில் நடைபெறும்.

    ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி முறையே இரவு 9.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் தொடங்கும். ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும்.

    அனைத்துப் போட்டிகளும் லாஸ் ஏஞ்சல்சில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 5ஆவது இடத்தில் உள்ளார்.
    • ரிஷப் பண்ட் 8ஆவது இடத்தையும், சுப்மன் கில் 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, இந்தியா முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது. 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 170 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் சதம் விளாசினார். 2ஆவது இன்னிங்சில் 40 ரன்கள் சேர்த்தார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

    கேன் வில்லியம்சன் 2ஆவது இடத்திலும், ஹாரி ப்ரூக் 3ஆவது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் முறையே 5, 8 மற்றும் 9ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

    • இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
    • வெற்றிக்காக ஜடேஜா இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

    லண்டன்:

    இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

    இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்துப் பேசினர்.

    பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்நிலையில், இங்கிலாந்து மன்னருடனான சந்திப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:

    மன்னர் சார்லசைச் சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம், 'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?' என கேட்டார்.

    இதற்கு, 'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்தோம்.

    மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான். போட்டி 5-வது நாள் கடைசி வரை சென்று 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

    • இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
    • உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார்

    இந்திய கிரிக்கெட் அணி யின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக பணியாற்றியவர் ரோகித்சர்மா. அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரும் ஏற்கனவே 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தனர்.

    ரோகித் சர்மா, வீராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தது ஆச்சரியமானது. ஏனென்றால் ஆஸ்திரேலிய பயணத்தில் இருவரது ஆட்டமும் மோசமாக இருந்ததால் தொடர் முடிந்த பிறகே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து பயணத்துக்கு சற்று முன்பு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

    கோலி, ரோகித் சர்மா இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் முடி வில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இந்த நிலையில் கோலி, ரோகித் சர்மா ஓய்வு தொடர் பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறிய தாவது:-

    ஓய்வு பெறுவது ஒரு வீரரின் சொந்த முடிவு. கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்த முடியாது.

    நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ரோகித் சர்மா, வீராட் கோலி இல்லாததை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓய்வு பெறும் முடிவை இருவரும் தாங்களாகவே எடுத்தனர். எந்த வீரரையும் ஓய்வு பெற சொல்லக்கூடாது என்பது பி.சி.சி.ஐ. யின் கொள்கையாகும். ஓய்வு அவர்களின் விருப்பமே. ஓய்வு பெறுமாறு அவர்களை கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்த வில்லை.

    அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்போம். நாங்கள் எப்போதும் அவர்களை புகழ்பெற்ற பேட்ஸ்மேன்களாக கருதுவோம். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது எங்களுக்கு மிகவும் நல்லது.

    இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.

    • இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

    லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.

    ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. இறுதிவரை போராடிய ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த டெஸ்டில் கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழந்ததும் துக்கம் தாங்காமல் தரையில் அமர்ந்தார். அப்போது இங்கிலாந்து அணி வீரர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

    இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி குறித்து முகமது சிராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "சில போட்டிகள் மட்டுமே எப்போதும் உங்களுடன் இருக்கும். அது அந்த போட்டியின் முடிவுகளால் அல்ல, அதிக உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடத்தினால்" என்று பதிவிட்டுள்ளார்.

    • எம்.எஸ்.தோனி செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
    • எம்.எஸ்.தோனி தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    எம்.எஸ்.தோனி செல்லப்பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனது வீட்டில் நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில், வளர்ப்பு நாய்களுடன் எம்.எஸ்.தோனி கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை அவரது மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
    • இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீராங்கனைகளுக்கான டி20 தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் ஹீலி மேத்யூஸ் 2-ம் இடத்திலும், இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 9-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    அதேசமயம் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஒரு இடம் பின் தங்கிய 10-ம் இடத்தையும், டேனியல் வையட் ஹாட்ஜ் ஒரு இடம் முன்னேறி 13-வது இடத்தையும், இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 இடங்கள் பின் தங்கி 14-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் சதியா இக்பால் முதல் இடத்தில் தொடரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் அனபெல் சதர்லேண்ட் ஒரு இடம் முன்னேறி 2-ம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனை ரேனுகா சிங் 5 இடங்கள் பின் தங்கி 11-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், ராதா யாதவ் 3 இடங்கள் முன்னேறி 15-ம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய அணி அறிமுக வீராங்கனை ஸ்ரீ சாரணி 49 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். 

    • இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
    • இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

    இதேபோல இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், இங்கிலாந்தின் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மன்னரை சந்தித்தது குறித்து பிசிசிஐ தலைவர் சுக்லா கூறியதாவது:- லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி தொடர்பாக நாங்கள் மன்னருடன் கலந்துரையாடினோம்... முகமது சிராஜ் ஆட்டமிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மன்னர் கூறினார்; இல்லையெனில், இந்தியா இந்தப் போட்டியில் வென்றிருக்கலாம்... இந்திய அணி போராளிகள் என்பதை நிரூபித்துள்ளது... நாங்கள் தொடரை வெல்வோம் என மன்னரிடம் சுக்லா கூறியுள்ளார்.

    • முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய சோயிப் பஷீருக்கு மாற்றுவீரராக லியாம் டாசன் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

    பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராவ்லி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டாங், கிறிஸ் வோக்ஸ்.

    ×