என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீடியோ: இங்கிலாந்து மன்னரை நேரில் சந்தித்த இந்தியா ஆடவர், மகளிர் அணியினர்
    X

    வீடியோ: இங்கிலாந்து மன்னரை நேரில் சந்தித்த இந்தியா ஆடவர், மகளிர் அணியினர்

    • இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
    • இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

    இதேபோல இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் ஆடவர் மற்றும் மகளிர் அணிகள், இங்கிலாந்தின் மன்னர் சார்லஸை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மன்னரை சந்தித்தது குறித்து பிசிசிஐ தலைவர் சுக்லா கூறியதாவது:- லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி தொடர்பாக நாங்கள் மன்னருடன் கலந்துரையாடினோம்... முகமது சிராஜ் ஆட்டமிழந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மன்னர் கூறினார்; இல்லையெனில், இந்தியா இந்தப் போட்டியில் வென்றிருக்கலாம்... இந்திய அணி போராளிகள் என்பதை நிரூபித்துள்ளது... நாங்கள் தொடரை வெல்வோம் என மன்னரிடம் சுக்லா கூறியுள்ளார்.

    Next Story
    ×