என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    3-வது டி20: மஹேதி ஹசன் அபார பந்து வீச்சு- 132 ரன்னில் அடங்கிய இலங்கை அணி
    X

    3-வது டி20: மஹேதி ஹசன் அபார பந்து வீச்சு- 132 ரன்னில் அடங்கிய இலங்கை அணி

    • இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார்.
    • வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அணி 3 வடிவிலான தொடரிலும் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகள் டி20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவரில் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பதும் நிசங்கா 46 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் மஹேதி ஹசன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    Next Story
    ×