என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோதுகின்றன.
- அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது.
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன.
பங்கேற்கும் 8 அணிகளில் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது யார் என்பதை இங்கு பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா: அலிசா ஹீலி தலைமையில் களம் காணும் ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் அனைத்திலும் திடமான ஒரு அணியாக வலம் வருகிறது. 7 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 8-ஆக உயர்த்த கங்கணம் கட்டுகிறது. 2024-ம் ஆண்டில் இருந்து 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 16-ல் வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதில் டெல்லியில் நடந்த ஆட்டத்தில் 412 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் ஹீலியுடன் எலிஸ் பெர்ரி, பெத் மூனி, ஆஷ்லி கார்ட்னெர், தாலியா மெக்ராத், ஜார்ஜியா வோல், லிட்ச்பீல்டு, மேகன் ஸ்கட், சுதர்லாண்ட் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே ஆஸ்திரேலிய அணியில் அணிவகுத்து நிற்கிறார்கள். கோப்பையை வெல்ல அவர்களுக்கே பிரகாசமான வாய்ப்பு என்பதில் மாற்று கருத்து இல்லை.
இந்தியா: சொந்த மண்ணில் ஆடுவது இந்தியாவுக்கு அனுகூலமாகும். இதுவரை எந்த உலகக் கோப்பையும் வெல்லாத இந்தியா இந்த முறை இறுதிதடையை வெற்றிகரமாக உடைப்ேபாம் என கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூளுரைத்துள்ளார். 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை முன்னேறியதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். உலகின் 'நம்பர் ஒன்' பேட்டரான ஸ்மிர்தி மந்தனாவைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி உள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 பந்தில் சதம் விளாசி சாதனை படைத்தார். 2025-ம் ஆண்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (928 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
மேலும் இந்த ஆண்டில் இந்திய அணி ஆடிய 14 ஆட்டங்களில் 10-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் ஒரு முறை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். மந்தனாவுடன், 5-வது முறையாக உலகக் கோப்பையில் கால்பதிக்கும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ரிச்சா கோஷ், ரேணுகா சிங், சினே ராணா, கிரந்தி கவுட் உள்ளிட்டோர் நெருக்கடியை திறம்பட கையாண்டு ஒருங்கிணைந்து செயல்படும் பட்சத்தில், கோப்பையை கையில் ஏந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.
இங்கிலாந்து: 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி நாட் சிவெர் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. ஆல்-ரவுண்டரான நாட் சிவெர் தான் அந்த அணியின் முதுகெலும்பு. 2017-ம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி உச்சிமுகர்ந்த போது, அந்த தொடரில் 2 சதங்கள் அடித்தார். 2022-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போது கூட அதிலும் செஞ்சுரி கண்டார். அண்மை கால தடுமாற்றத்தை சமாளித்து இங்கிலாந்து மீண்டெழுவதற்கு அவர் கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். மற்றபடி சோபி எக்லெஸ்டோன், சார்லி டீன், டாமி பீமோன்ட், டேனி வியாட், விக்கெட் கீப்பர் அமெ ஜோன்ஸ், ஹீதர் நைட், அலிஸ் கேப்சி நம்பிக்கை அளிக்கிறார்கள்.
நியூசிலாந்து: கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை சொந்தமாக்கிய நியூசிலாந்து, இப்போது 50 ஓவர் உலகக் கோப்பைக்கு குறி வைத்துள்ளது. கேப்டன் சோபி டிவைன் உலகக் கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அனுபவமும், இளமையும் கலந்த அணியாக நியூசிலாந்து திகழ்கிறது. சுசி பேட்ஸ், லியா தஹூதஹூ, அமெலியா கெர், மேடி கிரீன், ஜார்ஜியா பிளிமெர் பலம் சேர்க்கிறார்கள். கடந்த 6 மாதங்களாக நியூசிலாந்து எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. ஆனாலும் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்து இங்குள்ள சூழலுக்கு ஏற்ப பழக்கப்படுத்திக் கொள்ள 2 வாரம் சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டனர். எப்படியும் அவர்கள் டாப்-4 அணிக்குள் ஒன்றாக அரைஇறுதியை எட்டி விடுவார்கள் என்பதே நிபுணர்களின் கணிப்பு.
தென்ஆப்பிரிக்கா: கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களில் அரைஇறுதிக்கு வந்திருந்த தென்ஆப்பிரிக்கா இந்த முறை மேலும் ஒரு அடி முன்னேறி முதல்முறையாக இறுதி சுற்றை எட்டுவோம் என்று கூறியுள்ளது. இந்த தடவை தாங்கள் மிகவும் வலுவான அணியாக இருப்பதாக கேப்டன் லாரா வோல்வார்ட் கூறுகிறார். அவருடன், 'ஹாட்ரிக்' சதம் அடித்துள்ள தஸ்மின் பிரிட்ஸ், நடினே டி கிளெர்க், மரிஜானே காப் ஆகியோர் அந்த அணியின் கவனிக்கத்தக்க வீராங்கனைகளாக உள்ளனர். இவர்கள் ஜொலிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்காவின் வீறுநடை அமையும்.
மற்ற அணிகளான இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம் இதுவரை அரைஇறுதிக்கு கூட நெருங்கியதில்லை. அவர்களை பொறுத்தவரை அது தான் அவர்களின் முதல் குறி. இதில் சொந்த மண்ணில் பெரும்பாலான ஆட்டங்களில் விளையாடும் சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை அதிர்ச்சி வைத்தியங்களை அளிக்க ஆயத்தமாகிறது.
- ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது.
- எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் திலக் வர்மாவின் அதிரடியான ஆட்டம் ஆசிய கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தது. 53 பந்தில் 69 ரன்கள் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்த அவர் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.
இது குறித்து திலக்வர்மா கூறியதாவது:-
எனது வாழ்க்கையில் மிக சிறந்த இன்னிங்ஸ். ஆட்டத்தில் மிகுந்த அழுத்தம் இருந்தது. எந்த வரிசையிலும் விளையாட நான் தயாராக இருந்தேன். பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்கள். சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. நெருக்கடியான நிலையிலும் ஷிவம் துபே பேட்டிங் செய்த விதம் நாட்டுக்கு முக்கியமானது.
இவ்வாறு திலக்வர்மா கூறியுள்ளார்.
- சஞ்சு சாம்சன் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது வீழ்த்தினார்.
- அப்ரார் தனது பாணியில் அதனை கொண்டாடினார்.
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்த போது சஞ்சு சாம்சன் விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமது வீழ்த்தினார். அப்போது அப்ரார் தனது பாணியில் அதனை கொண்டாடினார்.
இதனையடுத்து போட்டி முடிந்த பிறகு சஞ்சு சாம்சனை சக வீரர்களான அர்ஷ்தீப் சிங், ஜித்தேஷ் சர்மா, ரானா ஆகியோர் அப்ரார் ஸ்டைலில் கலாய்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
- இந்தத் தொடரில் இந்திய அணி நடந்து கொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது.
இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்.
தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் என்னுடன் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார். கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுத்துள்ளார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி அவர் அப்படி நடந்துகொண்டார். அது பரவாயில்லை.
நான் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மிகவும் அவமரியாதையாக நடந்துகொண்டனர். என் வாழ்வில் இது நடப்பதை நான் பார்ப்பது இதுவே முதல் முறை. இந்தத் தொடரில் நடந்தவை மிகவும் மோசமானவை, இது ஒரு கட்டத்தில் நிற்க வேண்டும் என்று நான் நம்புகிறேன், ஏனென்றால் இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல
இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ ஒரு குழந்தை இதைப் பார்த்தால், நாம் அவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அனுப்பவில்லை. மக்கள் எங்களை முன்மாதிரியாக நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் இப்படி நடந்துகொண்டால், நாங்கள் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கவில்லை
ACC-க்கு தலைவர் ஒருவர் இருந்தால் அவரிடம் கோப்பை வாங்குவதுதான் முறை. நீங்கள் அதை அவரிடமிருந்து வாங்காமல், வேறு எப்படி வாங்குவீர்கள்?
நான் இதை மீண்டும் சொல்கிறேன். என்ன நடந்ததோ அது தவறு. அது நடந்திருக்கக்கூடாது. எனவே அதைச் செய்தவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சல்மான் ஆகா கூறியுள்ளார்.
- பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது.
- இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது.
மும்பை:
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தான் மோதிய 7 ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வென்றது. பாகிஸ்தானை மட்டும் இந்திய அணி 3 தடவை வீழ்த்தி முத்திரை பதித்தது.
இந்திய அணிக்கு 9-வது முறையாக ஆசிய கோப்பை கிடைத்தது. இதற்கு முன்பு 1984, 1988, 1991, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு தொகை அளிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய அணியின் வெற்றி மிகவும் சிறப்பானது. ஆசிய கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21 கோடி பரிசு வழங்கப்படுகிறது. பரிசு தொகை வீரர்கள், அணி ஊழியர்கள் என அனைவருக்கும் பிரித்து வழங்கப்படும். தோல்வியை சந்திக்காமல் ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன்.
- என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர்.
துபாய்:
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.
2 நாட்களில் இரண்டு தொடர்ச்சியான நல்ல ஆட்டங்கள். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். மேலும் என்னால் எதுவும் சொல்ல முடியாது. நான் அதை நன்றாகச் சுருக்கமாக கூறியுள்ளேன் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
- இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
- ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணி கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதனால் ஒரு ஜென்டில்மேனாக அவர் பரிசளிப்பு விழாவில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
ஆசிய கோப்பை எங்களிடம் வழங்க மறுக்கப்பட்டது தொடர்பாக நவம்பர் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தில் முறையிடப்படும். விரைவில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தேவ்ஜித் சாய்க்கியா கூறியுள்ளார்.
- இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
- ஒரு போட்டிக்கு சூர்யகுமார் யாதவுக்கு ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
துபாய்:
துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில்146 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் ஆடிய இந்தியா 147 ரன் இலக்கை 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. 19.4 ஓவரில்5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் 3-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான எனது ஊதியத்தை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார்.
அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பையில் சூர்யகுமாரின் ஊதியம் ரூ. 28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது.
- மிதுன் மனாஸ் 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார்
இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி 70 வயதான நிலையில் பதவி விலகினார்.
அதைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ.யின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவராக சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் 37ஆவது தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வாகியுள்ளார்.
அதே சமயம் பிசிசிஐ துணைத் தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா ஆகியோர் நீடிக்கின்றனர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்க இருக்கும் மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் கூட ஆடியது கிடையாது. 157 முதல் தர போட்டியில் விளையாடி 9714 ரன் எடுத்துள்ளார். இதில் 27 சதம் அடங்கும்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான மிதுன் மனாஸ் ஐ.பி.எல். போட்டி யில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடி இருக்கிறார்.
- ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
- கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
இதனிடையே, இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, "பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
- இந்தப் போட்டியில் நேபாளம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
- இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
- இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
புதுடெல்லி:
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது. இதன்மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய அணி ஆசிய கோப்பையை 9வது முறையாகக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். விளைவு ஒன்றுதான் - இந்தியா வெற்றி பெற்றது! நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.






