என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிய கோப்பை ஊதியத்தை வழங்கிய SKY
- இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
- ஒரு போட்டிக்கு சூர்யகுமார் யாதவுக்கு ரூ.4 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
துபாய்:
துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதி போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில்146 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் ஆடிய இந்தியா 147 ரன் இலக்கை 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் எடுத்தது. 19.4 ஓவரில்5 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி தொடரில் 3-வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்கள்.
இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான எனது ஊதியத்தை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கூறியுள்ளார்.
அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆசிய கோப்பையில் சூர்யகுமாரின் ஊதியம் ரூ. 28 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.






