என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை.
    • பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.

    இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 23-ம் தேதி) துவங்குகிறது. அந்த வகையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதே போன்று கே.எல். ராகுல் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பது அவரின் உடல்நிலையை பொருத்தே முடிவு செய்யப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

    மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். முன்னதாக முகமது சிராஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது விடுவிக்கப்பட்டு, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

    நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்:

    ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ராஜத் படிதர், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் ஆகாஷ் தீப்.

    • விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
    • இரண்டாவது குழந்தைக்கு விராட் - அனுஷ்கா தம்பதி பெயர்சூட்டியது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார்.

     


    அதில், "பிப்ரவரி 15-ம் தேதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்பும், நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா," என்று குறிப்பிட்டுள்ளார்.



    • ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார்

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும். இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
    • இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்தார்.

    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

    இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

    இந்த வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என ஐ.பி.எல். சேர்மன் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரை மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    நடப்பு ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை இரு கட்டங்களாக வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் அட்டவணையை பி.சி.சி.ஐ விரைவில் அறிவிக்கும் எனவும், பாராளுமன்ற பொதுத்தேர்தல் அட்டவணை வெளியானதும் 2வது கட்ட அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    • அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
    • 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    சென்னை:

    சென்னை:

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார்.

    37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார்.

    இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது.

    500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    • 15 சர்வதேச போட்டியில் மட்டுமே மனோஜ் திவாரிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது
    • ரெய்னா, கோலி, ரோகித் ரன்கள் குவிக்க முடியாமல் தவித்தனர் என்றார் மனோஜ்

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர், மனோஜ் திவாரி (Manoj Tiwary).

    வலது கர பேட்ஸ்மேனான திவாரி, அவ்வப்பொது லெக் ப்ரேக் பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். சிறப்பான பேட்ஸ்மேனாக இருந்தும் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் மட்டுமே அவரால் பங்கேற்க முடிந்து.

    2011 டிசம்பரில் தனது முதல் சர்வதேச சதத்தை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மனோஜ் பதிவு செய்தார். ஆனால், அதற்கு பிறகு அவர் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    தற்போது 38 வயதாகும் மனோஜ், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து பேட்டியளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனியை சந்திக்க நேர்ந்தால் நான் நிச்சயம் சில கேள்விகளை எழுப்புவேன். மேற்கிந்திய அணிக்கு எதிராக சதம் அடித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் "பிளேயிங் லெவன்"  வீரர்களில் என்னை சேர்க்கவில்லை.

    என் மீது தவறு ஏதும் இல்லாத போதும் என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என அவரிடம் கேட்பேன். குறிப்பாக, ஆஸ்திரேலியா-இந்தியா போட்டியில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோகித் சர்மா உட்பட பலரும் ரன்களை குவிக்க முடியாமல் தவித்தனர். நான் அந்த காலகட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தேன்.

    ஆனால், அந்த போட்டிக்கு என்னை தவிர்த்தார் தோனி. அது ஏன் என அவரிடம் கேட்பேன்.

    14 போட்டிகளில் தொடர்ந்து நான் புறக்கணிக்கப்பட்டேன்.

    தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் போது அதை எவரேனும் அழித்தால், அந்த நடவடிக்கையே விளையாட்டு வீரரை கொன்று விடும்.

    வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் நானும் கோலி அல்லது ரோகித் போன்று சிறப்பான வீரராக உருவெடுத்திருக்க முடியும்.

    தற்போது நான் இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. 

    இவ்வாறு திவாரி கூறினார்.

    12 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடிய மனோஜ் திவாரி, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முழு நேர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    • புனே அணி உ.பி.யை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.
    • பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.

    பஞ்ச்குலா:

    12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி அகமதா பாத்தில் தொங்கியது.

    அதை தொடர்ந்து பெங்களூர், புனே, சென்னை, நொய்டா, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், பாட்னா, டெல்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற்று தற்போது 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் 129 ஆட்டங்கள் முடிந்தன.

    ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ், அரியானா ஸ்ட்லர்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூர் புல்ஸ், உ.பி. யோதாஸ், யு மும்பா, தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.

    புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 6 வெற்றி, 13 தோல்வி, 2 டையுடன் 42 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் இருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் 2 வெற்றி, 19 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை முடிக்கும் ஆர்வத்தில் உள்ளன.

    நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் புனே-உ.பி. (இரவு 8 மணி), அரியானா-பெங்களூரு (இரவு 9 மணி), அணிகள் மோதுகின்றன.

    புனே அணி உ.பி.யை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. உ.பி. அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அரியானா அணி பெங்களூரை வீழ்த்தி 4-வது இடத்தை பிடிக்கும் ஆர்வத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. அன்று எலி மினேட்டர் ஆட்டங்களும், 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்களும், மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டியும் நடக்கிறது.

    ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். மற்ற 4 அணிகளான டெல்லி, குஜராத், அரியானா, பாட்னா ஆகியவை எலி மினேட்டரில் ஆடுகின்றன.

    • 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
    • 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி

    ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.

    சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.

    இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.

    2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இரு அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 22 வயதே ஆகும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 214 ரன்கள் குவித்தார்.

    மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இந்த போட்டியில்தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆகியுள்ளார். அவர் முதல் இன்னிங்சில் 62 ரன்களும், 2-வது இன்னிங்சில் 68 ரன்களும் எடுத்து இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். குறிப்பாக சர்பராஸும் - ஜெய்ஸ்வாலும் இணைந்து 2-வது இன்னிங்சில் 5-வது விக்கெட்டுக்கு 172 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

    இதேபோன்று இந்த டெஸ்டில் அறிமுகமான விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியில் சீனியர் ஆட்டக்காரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களே சிறப்பான ஆட்டத்தை விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளனர். இவர் 2-வது இன்னிங்சில் சிறப்பான ஒரு ரன் அவுட் செய்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில் இவர்கள் 3 பேரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஸ்டோரியாக வைத்து இந்த நாட்களில் குழந்தைகள் என பதிவிட்டிருந்தார். இது தற்போது வைரலாகி வருகிறது.

    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.
    • பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

    ராஞ்சி:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முடிவடைந்துள்ள 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு ஏற்கனவே 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் அந்த போட்டியிலிருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதனால் 4-வது டெஸ்ட் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4-வது போட்டியின் முடிவை பொறுத்தே அவர் கடைசி போட்டியில் இடம்பெறுவாரா இல்லையா என்பது தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    • 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக தனது 11 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துவிட்டார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் கூறியுள்ளார்.

    ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இதில் 14 பவுண்டரி, 12 சிக்சர்கள் அடங்கும்.

    இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக், ஜெய்ஸ்வால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் நான் எனது வாழ்வில் அடித்த ஒட்டு மொத்த சிக்சர்களை ஜெய்ஸ்வால் ஒரே இன்னிங்சில் அடித்துவிட்டார் என்று பெருமையாக கூறியுள்ளார். அலெஸ்டர் குக் விளையாடிய 161 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 சிக்சர்கள் மட்டுமே விளாசியுள்ளார்.

    • 3-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 -1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

    இந்த தொடரில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரமின் உலக சாதனையை சமன் செய்தார்.

    இந்நிலையில் ஜெய்ஸ்வால் தான் இந்திய அணியின் புதிய சேவாக் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கொண்டுள்ளது. அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு பவுலிங் அட்டாக்கை சேவாக் அடித்து நொறுக்கியதை போலவே யசஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடக் கூடிய வீரராக திகழ்கிறார்.

    என்று கூறியுள்ளார்.

    இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ரஞ்சி நகரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

    ×