என் மலர்
விளையாட்டு
- 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார்.
- 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான புரோ லீக் 5-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 45-வது நிமிடத்தில் அமெரிக்காவின் ஆஷ்லி செஸ்சா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.
கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க 'பெனால்டி ஷூட் அவுட்' முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தீபிகா குமாரி, லால்ரெம்சியாமி கைகொடுக்க இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது....
- 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
- இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது.
பஞ்ச்குலா:
10-வது புரோ கபடி 'லீக்' போட்டியில் நேற்று நடந்த 126-வது 'லீக்' ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் 74-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பை இழந்த அந்த அணி கடைசி ஆட்டத்தில் வெற்றியுடன் நிறைவு செய்தது.
தமிழ் தலைவாஸ் அணி 22 ஆட்டத்தில் 9 வெற்றி, 13 தோல்வியுடன் 51 புள்ளிகளை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 74 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம் புதிய சாதனை படைத்தது.
புரோ கபடி 'லீக்' போட்டியில் 70 புள்ளிகள் பெற்ற முதல் அணி தமிழ் தலைவாஸ் ஆகும். இதற்கு முன்பு பாட்னா அணி பெங்காலுக்கு எதிராக 69 புள்ளிகள் பெற்றதே சாதனையாக இருந்தது.
மேலும் இந்த ஆட்டத்தில் மொத்தம் 111 புள்ளிகள் எடுக்கப்பட்டது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு பாட்னா-பெங்கால் மோதிய ஆட்டத்தில் 110 புள்ளிகள் எடுக்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி 6 முறை பெங்காலை ஆல் ஆவுட் செய்தது. இதுவும் புதிய சாதனையாகும். இதற்கு முன்பு ஒரு ஆட்டத்தில் 5 முறை ஆல் அவுட் செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. இன்னும் 5 'லீக்' ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. வருகிற 26-ந்தேதி 'பிளே ஆப்' சுற்று தொடங்குகிறது.
- ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
- ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.
ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அணியை தேர்ந்தெடுக்கும் குழுவில் முன்னாள் வீரர்களான வாசிம் அக்ரம், மேத்யூ ஹைடன், டாம் மூடி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றனர். அவர்களை தவிர்த்து கிட்டத்தட்ட 70 பத்திரிகையாளர்களும் இந்த அணியை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அனைத்து ஐ.பி.எல். போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு டோனி கேப்டனாக தேர்வாகி இருக்கிறார்.
அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வருமாறு:-
டோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ரெய்னா, டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா, பும்ரா.
- இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது.
- இந்தியாவின் மணிகா பத்ரா முதல் போட்டியில், தரவரிசையில் 90-வது இடம் வகிக்கும் டோரா மதராஸை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
தென் கொரியாவின் பூசண் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இந்திய பெண்கள் அணி ஹங்கேரி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தியாவின் மணிகா பத்ரா முதல் போட்டியில், தரவரிசையில் 90-வது இடம் வகிக்கும் டோரா மதராஸை 3-2 என்ற செட் கணக்கில் (8-11, 11-5, 12-10, 8-11, 11-4) வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
இதேபோன்று மற்றொரு ஆட்டத்தில் ஜார்ஜினா பொட்டாவை 3-0 என்ற செட் கணக்கில் (11-5, 14-12, 13-11) வீழ்த்தி இந்தியாவை முன்னிலை பெற செய்துள்ளார். இந்தியாவின் ஆயிஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் (7-11, 11-6, 11-7, 11-8) பெர்னாடெட் பாலின்ட்டை வீழ்த்தினார்.
எனினும், ஸ்ரீஜா அகுலா 2 தோல்விகளை சந்தித்துள்ளார். பொட்டா மற்றும் மதராஸ்சிடம் அவர் தோற்றார். இதனால், ஹங்கேரி அணிக்கு எதிராக இந்திய பெண்கள் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட குழுவில் 3-வது இடம் பிடித்துள்ளது. அடுத்து, உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி நாளை விளையாட உள்ளது.
- 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர் ஜெய்ஸ்வால் ஆவார்.
3-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த ஜெய்ஸ்வால் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டிலும் இரட்டை சதம் (209 ரன்) அடித்திருந்தார். அடுத்தடுத்து இரு டெஸ்டில் இரட்டை செஞ்சுரி அடித்த 11-வது வீரர், இந்திய அளவில் 3-வது வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். ஏற்கனவே வினோத் காம்ப்ளி (1993-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 224 ரன் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக 227 ரன்), விராட் கோலி (2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நாக்பூரில் 213 ரன், டெல்லியில் 243 ரன்) ) ஆகிய இந்தியர்கள் தொடர்ச்சியாக இரு டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளனர்.
ஜெய்ஸ்வாலின் வயது 22 ஆண்டு 49 நாட்கள். டெஸ்டில் இரண்டு இரட்டை சதம் அடித்த 3-வது இளம் வீரராகவும் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியாவின் வினோத் காம்ப்ளி தனது வயது 21 ஆண்டு 54 நாளிலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் வயது 21 ஆண்டு 318 நாளிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 10-வது முறையாகும். இதில் உள்நாட்டில் மட்டும் 9 முறை இவ்விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக தடவை ஆட்டநாயகன் விருதை பெற்ற இந்தியரான கும்பிளேவின் (இவரும் 9 முறை) சாதனையை சமன் செய்தார்.
இந்த டெஸ்டில் அறிமுக வீரராக இடம் பிடித்த மும்பையைச் சேர்ந்த சர்ப்ராஸ் கான் இரு இன்னிங்சிலும் அரைசதம் (62 மற்றும் 68 ரன்) அடித்தார். திலவார் ஹூசைன் (1934-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக), சுனில் கவாஸ்கர் (1971-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக), ஸ்ரேயாஸ் அய்யர் (2021-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆகியோருக்கு பிறகு அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 4-வது இந்தியராக சர்ப்ராஸ்கான் அறியப்படுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக இதுவரை 134 டெஸ்டில் ஆடியுள்ள இந்தியா அதில் பெற்ற 33-வது வெற்றி இதுவாகும். இவற்றில் 24 வெற்றி சொந்த மண்ணில் கிடைத்தவையாகும். குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச வெற்றி இது தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்தியாவின் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 131 ரன் எடுத்தார். இது அவரது 11-வது சதமாகும். அவர் சதம் அடித்த எல்லா டெஸ்டுகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. டெஸ்டில் 10-க்கு மேல் சதம் அடித்து எல்லாமே வெற்றியில் முடிந்திருப்பது ரோகித் சர்மாவுக்கு மட்டுமே.
- 28 ஆண்டு கால வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
- 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 2-வது இன்னிங்சில் 12 சிக்சருடன் 214 ரன்கள் குவித்தார். 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் தன்னகத்தே கொண்டுள்ளார். அவர் 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர் அடித்திருந்தார். அந்த 28 ஆண்டு கால சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இரு இன்னிங்சையும் சேர்த்து இந்தியா ராஜ்கோட் டெஸ்டில் மொத்தம் 28 சிக்சர்களை நொறுக்கியது. ஒரு டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற தங்களது உலக சாதனையை இந்தியா தற்போது மாற்றி அமைத்துள்ளது. 2019-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 27 சிக்சர் அடித்திருந்தது.
3 டெஸ்ட் முடிந்துள்ள நிலையில் இந்த தொடரில் இந்தியா இதுவரை 48 சிக்சர் அடித்துள்ளது. ஒரு தொடரில் அணி ஒன்றின் அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையாகவும் இது பதிவானது. ஏற்கனவே 2019-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 47 சிக்சர் அடித்திருந்த இந்தியா, இப்போது அதை கடந்துள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 3-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 319 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.இதை தொடர்ந்து 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 122 ரன்களில் ஆட்டமிழந்தது.
இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
1. நியூசிலாந்து – 75%
2. இந்தியா – 59.52%
3. ஆஸ்திரேலியா – 55%
4. வங்கதேசம் – 50%
5. பாகிஸ்தான் – 36.66%
6. மேற்கிந்திய அணி -33.33 %
7. தென் ஆப்பிரிக்கா – 25.00%
8. இங்கிலாந்து – 21.87%
9. இலங்கை – 00.00
- 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை.
ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.
இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-
5 நாள் வரை போட்டி நடைபெறும் என்றுதான் நினைத்தேன். 150 ஓவர்கள் இருந்தால் இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கிவிடலாம் என்பதுதான் எனது கணக்காக இருந்தது.
இவ்வளவு சீக்கிரம் போட்டி முடிவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.
- 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது. அதில், 112 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்சில், 112 ரங்களும், 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜடேஜா, 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம், தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்று ஜடேஜா அசத்தியுள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது மிகப்பெரிய வெற்றியை இப்போட்டியில் இந்திய அணி பதிவு செய்துள்ளது. 434 ரன்கள் வைத்தியத்தில் இமாலய வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
இந்த வெற்றியை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
- டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
- இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்களில் டிக்ளேர் செய்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன்களை குவித்தது. ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி அசத்தினர்.
அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பென் டக்கெட் 153 ரன்களுக்கு அவுட்டானார்.
இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் சதமடித்தார். சுப்மன் கில் 65 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் இந்திய அணி இங்கிலாந்தை விட 322 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு இணைந்த சுப்மன் கில், குல்தீப் யாதவ் ஜோடி 55 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜெய்ஸ்வால் களமிறங்கினார். குல்தீப் யாதவ் 27 ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடியதால் ரன் வேகம் அதிகரித்தது. சர்ப்ராஸ் கான் அரை சதம் கடந்தார்.
தொடர்ந்து ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜெய்ஸ்வால் 214 ரன்னும், சர்ப்ராஸ் கான் 68 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு172 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து வெற்றிபெற 557 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது.

557 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது.
வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார்.
- உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.
அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.
- அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது.
- ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது.
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது.
மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா, தென் கொரியா, சீனா, மலேசியா என்று மொத்தம் 7 அணிகள் இடம் பெற்று விளையாடின.
இதில், அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது.
இறுதி போட்டியில், பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதையடுத்து நடந்த 2ஆவது ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் 11-21 14-21 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தார்.
தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர். இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன.
கடைசியாக வெற்றை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார்.
இதன் மூலமாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.






