என் மலர்
விளையாட்டு
- குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
- இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸஸாய் 45 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் இப்ராஹிம் சத்ரன் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் - அஸ்ரதுல்லா ஒமர்ஸாய் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்து அசத்தினார். குர்பாஸ் 70 ரன்களிலும் அஸ்மதுல்லா ஒமர்சாய் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் மதீஷா பதிரனா, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
- முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது.
- அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் சல்மி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கராச்சி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெஷாவர் சல்மி அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 72 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் 16.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பாபர் அசாம் அரை சதம் அடித்ததன் மூலம் டி20 அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி மற்றும் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி டி20-யில் 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
பாபர் 271 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 299 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் டேவிட் வார்னர் 303 இன்னிங்ஸ்களிலும் 10,000 டி20 ரன்களை கடந்தனர்.
- முதலில் இந்திய மகளிர் அணியானது இத்தாலியை இன்று எதிர்கொண்டது.
- இந்தியா 3-0 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது.
பூசன்:
தென் கொரியாவின் பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் குழு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் போட்டிகளில் இந்திய அணி இன்று அதிரடியாக விளையாடி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதனால், 3-வது சுற்று (ரவுண்ட் 16) ஆட்டத்திற்கு இந்திய அணி முன்னேறி உள்ளது. இதில், வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறும்போது, பாரீஸ் நகரில் நடைபெறும் 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்.
இதன்படி, முதலில் இந்திய மகளிர் அணியானது இத்தாலியை இன்று எதிர்கொண்டது. இதில், இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா 3-0 என்ற செட் கணக்கில் நிகோலெட்டா ஸ்டெபனோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றார். 20 நிமிடங்களில் போட்டி நிறைவடைந்தது.
இதனை தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில், உலக தர வரிசையில் 36-வது இடத்தில் உள்ள, இந்தியாவின் முதல்தர வீராங்கனையான மணிகா பத்ரா, 3-0 என்ற செட் கணக்கில் கிரோஜியா பிக்கோலின் என்பவரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 23 நிமிடங்களில் போட்டி முடிவுக்கு வந்தது.
3-வது போட்டியில் இந்தியாவின் ஆய்ஹிகா முகர்ஜி, 3-1 என்ற செட் கணக்கில் கயியா மொன்பார்டினியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனால், இந்தியா 3-0 என்ற புள்ளி கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தி எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தியாவின் அடுத்த சவாலானது சீன தைபே அணிக்கு எதிராக இருக்கும்.
இதன்பின்னர் இன்று நடந்த ஆடவர் குழு போட்டியில் இந்திய அணியானது, கஜகஸ்தான் அணியை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
இதனால், இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் என இரு அணிகளும் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இன்னும் ஒரு சுற்று போட்டியில் வெற்றி பெற வேண்டி உள்ளது. அதில் கிடைக்கும் வெற்றியை அடுத்தே பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும்.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடந்த போட்டியில் ரிபாகினா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனையான எலினா ரிபாகினா, போலந்து வீராங்கனை மக்டலேனாவுடன் மோதினார்.
இருவரும் தலா ஒரு செட்டை வசப்படுத்தினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை ரிபாகினா கைப்பற்றினார்.
இறுதியில், எலினா ரிபாகினா 7-6 (7-5), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- இந்த தொடர் முழுவதும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படுகிறது.
- இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 17ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல் தொடர் போன்று எஸ்ஏ20 லீக், கரீபியன் டி20 லீக், அமெரிக்கன் பிரீமியர் லீக், மேஜர் லீக் கிரிக்கெட், அமெரிக்கன் டி20 சாம்பியன்ஷிப் என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தான் இந்திய மூத்த கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக முதல் முறையாக முன்னாள் வீரர்களுக்கு என்று டி20 தொடர் நடத்தப்படுகிறது. இந்திய வெட்டரன் பிரீமியர் லீக் எனப்படும் ஐவிபிஎல் டி20 தொடர் வரும் 23 ஆம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதி வரையில் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
இந்த தொடரில் வீரேந்திர சேவாக், சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், ஹெர்செல் கிப்ஸ் ஆகியோர் உள்பட முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தொடரில் விவிஐபி உத்தரபிரதேசம், ராஜஸ்தான் லெஜெண்ட்ஸ், ரெட் கார்பெட் டெல்லி, சட்டீஸ்கர் வாரியர்ஸ், தெலங்கானா டைகர்ஸ் மற்றும் மும்பை சாம்பியன்ஸ் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
கேப்டன்கள்:
மும்பை சாம்பியன்ஸ் - வீரேந்திர சேவாக்
தெலங்கானா டைகர்ஸ் - கிறிஸ் கெயில்
விவிஐபி உத்தரபிரதேசம் - சுரேஷ் ரெய்னா
ரெட் கார்பெட் டெல்லி - ஹெர்செல் கிப்ஸ்
வரும் 23-ம் தேதி நடக்கும் முதல் போட்டியிலேயே சேவாக் மற்றும் கெயில் அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் மோதுகின்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். 2 அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மோதும்.
வரும் மார்ச் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த தொடர் முழுவதும் உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2- 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல் ஆகியோர் விலகியுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
பணிச்சுமை கருதி பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் கே.எல்.ராகுல் விலகியுள்ளதாகவும் பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் விலகிய நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரேல், கே.எஸ்.பாரத், படிக்கல், அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அகாஷ் தீப்.
- விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
- இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஒரு இடம் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் டக்கெட் 12 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 7-வது இடத்தில் தொடர்கிறார்.
இந்த தரவரிசையில் வில்லியம்சன் முதல் இடத்தில் (818) யாரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளார். 2 முதல் 10 இடங்கள் முறையே டேரி மிட்செல், பாபர் அசாம், ஜோ ரூட், கவாஜா, விராட் கோலி, கருரத்ணே, ஹரி புரூக், மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் உள்ளனர்.
- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
- ஜெய்ஸ்வால் உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை.
புதுடெல்லி:
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
5 போட்டிக் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 209 ரன்னும், ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 214 ரன்னும் எடுத்தார்.
3 டெஸ்டின் 6 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 545 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 109 ஆகும். 50 பவுண்டரிகளும், 22 சிக்சர்களும் அடித்துள்ளார்.
இதற்கிடையே ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "எதிர் அணி வீரர்கள் ஆக்ரோஷமாக ஆடுவதை பார்க்கும்போது நாம் கொஞ்சம் அதற்கான பெருமையை எடுத்துக் கொள்ளலாம். அதாவது மற்றவர்கள் டெஸ்டில் விளையாடும் விதத்துக்கும், நாம் ஆடும் விதத்திற்குமான வித்தியாசத்துக்கான பெருமை நம்முடையது என்ற உணர்வு ஏற்படுகிறது" என்றார்.
டக்கெட் 3-வது டெஸ்டில் சதம் (153 ரன்) அடித்து இருந்தார். அவர் இந்த தொடரில் 288 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டக்கெட் டின் இந்த வினோதமான கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான நாசர் உசேன் பதிலடி கொடுத்துள்ளார். ஜெய்ஸ்வால் அதிரடியான, ஆக்ரோஷமான ஆட்டத்தை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ளவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
அவர் (ஜெய்ஸ்வால்) உங்களிடம் இருந்து அதிரடியாக விளையாட கற்றுக் கொள்ளவில்லை. அவர் வளர்ப்பில் இருந்து கற்றுக் கொண்டவர். அவரது பாதையில் எதிர்கொண்ட கடினங்களால் வளர்ந்த ஆக்ரோஷம் இதுவாகும்.
அவரிடம் இருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் அது இதுவாகத்தான் இருக்கும். கொஞ்சம் சுய பரிசோதனை நடக்கிறது என்று நினைக்கிறேன். இல்லையென்றால் இந்த 'பாஸ்பால்' ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு நாசர் உசேன் கூறியுள்ளார்.
- முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
- கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களான பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ரச்சின் டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர். ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹேட் - டேவிட் வார்னர் களமிறங்கினர். ஹெட் 24 ரன்னிலும் வார்னர் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மேக்ஸ்வேல் 25 ரன்னிலும் இன்ங்கிலிஸ் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த மார்ஷ் - டிம் டேவிட் அதிரடியாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்ஷ் அரை சதம் கடந்தார். இறுதியில் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டிம் சவுத்தி வீசினார். முதல் 5 பந்துகளில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்த நிலையில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. டிம் டேவிட் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதனால் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
- புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
- எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.
பஞ்ச்குலா:
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது புரோ கபடி லீக் போட்டியின் 12-வது மற்றும் இறுதிக்கட்ட லீக் ஆட்டங்கள் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், தபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ், ஸ்ட்லர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய 6 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், பெங்களூரு புல்ஸ், யு மும்பா, உ.பி. யோதாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்துவிட்டன.
புரோ கபடி போட்டியின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் புனே-உ.பி. அணிகளும், இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் அரியானா-பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.
4 நாட்கள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. ஜெய்ப்பூர், புனே அணிகள் நேரடியாக அரை இறுதியில் விளையாடும். இன்றைய ஆட்டத்தில் உ.பி. அணியை வீழ்த்துவதன் மூலம் புனே அணி முதல் இடத்தை பிடிக்கும்.
புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணியும், 6-வது இடத்தை பிடித்த அணியும் 'எலிமினேட்டர்' ஆட்டத்தில் விளையாடும். இதனபடி டெல்லி-பாட்னா அணிகள் மோதுகின்றன.
எலிமினேட்டர் 2 போட்டியில் அரியானா குஜராத் அணிகள் மோதுகின்றன. எலிமினேட்டர் ஆட்டங்கள் 26-ந் தேதி நடக்கிறது.
டெல்லி-பாட்னா இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி முதல் அரைஇறுதியில் விளையாடும். புனே அணியுடன் மோத வாய்ப்பு உள்ளது.
அரியானா-குஜராத் இடையேயான ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி 2-வது அரை இறுதியில் விளையாடும். ஜெய்ப்பூர் அணியுடன் மோதும் வாய்ப்பு இருக்கிறது. வருகிற 28-ந் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
- டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து 215 ரன்கள் குவித்தது.
வெல்லிங்டன்:
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து முதலில் ஆடியது. பின் ஆலன் 32 ரன்னில் அவுட்டானார். டேவன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.
ரச்சின் 35 பந்தில் 68 ரன்னும், கான்வே 46 பந்தில் 63 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் சபலென்காவை குரோஷிய வீராங்கனை வீழ்த்தினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெலாரஸின் அரினா சபலெங்கா, 31-ம் நிலை வீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்குடன் மோதினார்.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அரினா சபலென்கா ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






