என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது.
    • அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.

    ஐதராபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த டிசம்பர் 2-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் 12 வாரங்களாக நடைபெற்றது. 132 லீக் போட்டிகள் கடந்த 21-ந் தேதியுடன் நிறைவு பெற்றன.

    புனேரி பல்தான் (96 புள்ளிகள்), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (92), தபாங் டெல்லி (79), குஜராத் ஜெய்ண்ட்ஸ் (70), அரியானா ஸ்டிலர்ஸ் (70), பாட்னா பைரேட்ஸ் (69) ஆகிய அணிகள் முறையே முதல் 6 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் 2 இடத்தை பிடித்த புனே, ஜெய்ப்பூர் நேரடியாக அரையிறுதியில் விளையாடும்.

    பெங்கால் வாரியர்ஸ் (55 புள்ளிகள்), பெங்களூரு புல்ஸ் (53), தமிழ் தலைவாஸ் (51), யு மும்பா (45), உ.பி. யோத்தாஸ் (31), தெலுங்கு டைட்டன்ஸ் (21) ஆகியவை முறையே 7 முதல் 12-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த டெல்லி-ஆறாவது இடத்தை பிடித்த பாட்னா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் புனேயுடன் மோதும்.

    இரு அணிகளும் மோதிய ஒரு ஆட்டம் 39-39 என்ற கணக்கில் 'டை'ஆனது. மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணி 38-37 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது எலிமினேட்டர் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்த குஜராத்-ஐந்தாம் இடத்தை பிடித்த அரியானா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி அரை இறுதியில் ஜெய்ப்பூர் அணியுடன் விளையாடும்.

    இந்த தொடரில் இரு அணிகளும் 2 முறை மோதிய ஆட்டத்தில் அரியானாவே வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் விளையாடும். அதே நேரத்தில் குஜராத் அணி பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அரை இறுதியில் நுழைய 4 அணிகளும் கடுமையாக போராடும். இதனால் எலிமினேட்டர் ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

    அரைஇறுதி போட்டிகள் வருகிற 28-ந் தேதியும், இறுதி போட்டி மார்ச் 1-ந் தேதியும் நடைபெறுகிறது.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

    இதில் ரஷிய வீரர் கச்சனாவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மழை காரணமாக டி20 போட்டி 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 118 ரன்கள் எடுத்தபோது மழையால் தடைபட்டது.

    ஆக்லாந்து:

    ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதலில் நடந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 15 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 10.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஹெட் 33 ரன்னும், ஷாட் 27 ரன்னும், மெக்ஸ்வெல் 20 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 10 ஓவரில் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.


    தொடக்க வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் நியூசிலாந்து 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா டி20 தொடரை நியூசிலாந்தை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    ஆட்ட நாயகனாக மேத்யூ ஷாட்டும், தொடர் நாயகனாக மிட்செல் மார்ஷும் தேர்வாகினர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 157 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் 62 ரன்னும், மேகனா 53 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றிபெற்றது.

    5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

    • துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பவுலினி வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில் ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவுடன், இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியுடன் மோதினார்.

    இந்தப் போட்டியில் ஜாஸ்மின் பவுலினி 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

    • வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 2 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

    தம்புல்லாவில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், தான் வீசிய பந்துக்கு NO BALL கொடுத்ததற்கு கள நடுவர் லிண்டன் ஹனிபல்லிடம் ஆவேசமாக பேசியதற்காக வனிந்து ஹசரங்காவிற்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால், வங்கதேசத்திற்கு எதிரான அடுத்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து ஹசரங்கா இடைநீக்கம் செய்யப்படுவார்.

    ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என இலங்கை கைப்பற்றியது. இதில் ஹசரங்கா தொடர் நாயகன் விருதை பெற்றார்.

    • முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 80 ரன், பூபதி குமார் 65 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

    கோவை:

    89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் விதர்பா, கர்நாடகா, மும்பை, பரோடா, தமிழ்நாடு, சவுராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரா உள்ளிட்ட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

    ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

    இந்நிலையில், 3-வது காலிறுதி ஆட்டத்தில் தமிழக அணி சவுராஷ்டிராவை கோவையில் எதிர்கொண்டது. டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஓரளவு தாக்குப்பிடித்த ஹர்விக் தேசாய் அரை சதம் அடித்து 83 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5 விக்கெட்டும், அஜித் ராம் 3 விக்கெட்டும், வாரியர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய தமிழகம் முதல் நாள் முடிவில் 1 விக்கெட்க்கு 23 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழகத்தின் ஜெகதீசன் 37 ரன்னும், சாய் கிஷோர் 60 ரன்னும், பிர்தோஷ் பால் 13 ரன்னும் எடுத்தனர். பாபா இந்திரஜித், பூபதி குமார் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் அரை சதமடித்தனர்.

    இந்திரஜித் 80 ரன்னும், பூபதி குமார் 65 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

    இரண்டாம் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை தமிழகம் 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விஜய் சங்கர் 14 ரன்னும், முகமது அலி 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார்.
    • டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார்.

    5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும்

    சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

    1971-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர், 4 சதங்கள், 3 அரை சதங்களுடன் 774 ரன்கள் குவித்ததே இதுவரை தனிப்பட்ட இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. இதனை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு 156 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    மேலும், டெஸ்ட் தொடரில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இதுவரை 934 ரன்கள் அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை அடிப்பதற்கு அவருக்கு 66 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 219 ரன்கள் எடுத்துள்ளது.

    ராஞ்சி:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், 2ம் நாள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஜுரல் 30 ரன்னும், குல்தீப் யாதவ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இங்கிலாந்து சார்பில் பஷீர் 4 விக்கெட்டும், டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
    • டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரை கைப் பற்றியது.

    இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இது அவரது 126-வது சிக்சர் ஆகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு முன் ஆரோன் பிஞ்ச் 125 சிக்சர்கள் அடித்ததே சாதனையாகும். அவரை தற்போது மேக்ஸ்வெல் முந்தியுள்ளார். மற்ற ஆஸ்திரேலிய வீரரர்களில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களும், வாட்சன் 83 சிக்சர்களும் அடித்துள்ளனர்.

    சர்வதேச அளவில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெல் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    ரோகித் சர்மா 190 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், குப்தில் (நியூசிலாந்து) 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

    • முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், தொடர்ச்சியாக விக்கெட்டுகள் விழுந்த நிலையில், நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதுவரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் சேர்த்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
    • காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.

    கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.

    பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

    ×