என் மலர்
விளையாட்டு
- கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது
- காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
2 கைகளையும் இழந்த ஜம்மு காஷ்மீர் பாரா கிரிக்கெட் அணியின் கேப்டன் அமீர் ஹூசைனை இன்று சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்து பேசினார்.
கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானபோது, அவரைப் பாராட்டி X தளத்தில் பதிவிட்டிருந்தார் சச்சின்.
பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என கூறியிருந்தார் அமீர். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
To Amir, the real hero. Keep inspiring!
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் ரஷியாவின் கச்சனாவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
கத்தார்:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன.
முதல் அரையிறுதியில் ரஷிய வீரர் கச்சனாவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்சி பாப்ரியனுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக், பிரெஞ்சு வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மென்சிக் 6-4, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் ஸ்வியாடெக் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
2-வது அரையிறுதியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், ரஷிய வீராங்கனை அன்னா காலின்ஸ்கயாவுடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் அன்னா காலின்ஸ்கயா, ஜாஸ்மின் பவுலினியுடன் மோதுகிறார்.
- இங்கிலாந்தின் 9-வது பேட்ஸ்மேன் ராபின்சன் அரைசதம் அடித்தார்.
- ஜடேஜா கடைசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அபாரமாக பந்து வீச இங்கிலாந்து 57 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அதன்பின் ஜோ ரூட்- போர்ஸ்டோவ் ஜோடி தாக்குப்பிடித்து 57 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஜோ ரூட் உடன் பென் போக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி 113 ரன்கள் சேர்த்தது. இதனால் இங்கிலாந்து சரிவில் இருந்து மீண்டது.
ஜோ ரூட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதனால் நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 106 ரன்களுடனும், ராபின்சன் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் நிதானமாக விளையாட ராபின்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராபின்சன் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 347 ரன்கள் எடுத்திருந்தது. ராபின்சனை ஜடேஜா வீழ்த்தினார்.
இதே ஓவரில் பஷீரையும் வீழ்த்தினார் ஜடேஜா. அடுத்த ஓவரில் ஆண்டர்சனை வீழ்த்த இங்கிலாந்து 104.5 ஓவரில் 353 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- வயது அடிப்படையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார்.
- கர்நாடகா அணிக்காகவும், கர்நாடகா பிரீமியர் லீக் டி20-யிலும் விளையாடியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கே. ஹோஸ்சாலா. அவர் தற்போது கர்நாடக அணிக்காக விளையாடவில்லை. 34 வயதான அவர் வயது அடிப்படையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார்.
தெற்கு மண்டலம் ஐ.ஏ.-ஏ.டி. தொடரில் தமிழக அணிக்கெதிராக விளையாடினார். இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் சக வீரர்களுடன் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். விளையாட்டு மைதானத்திலேயே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கர்நாடகப பிரீமியர் லீக்கில் ஷிவமோகா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கேஎஸ்சிஏ மகாராஜா டி20 டிராபியலும் விளையாடியுள்ளார்.
- யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.
- ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மெக் லானிங் களமிறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மெக் லானிங் உடன் ஆலிஸ் கேப்ஸி ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 31 ரன்னில் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து ஜெமிமா - ஆலிஸ் கேப்ஸி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆலிஸ் கேப்ஸி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜெமிமா 42 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அமெலியா கெர், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
அந்த அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. 2-வது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. 3-வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.
இதனால் 3 பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் 4-வது பந்தை எதிர்கொண்டார். அதை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால் 5-வது பந்தில் கவுர் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி. பவுண்டரி அடித்தால் "டை" என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சஜனா களம் இறங்கினார். இவர் கடைசி பந்தை எளிதாக சிக்கசருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
34 பந்தில் 55 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்ட நாயகியாக (PLAYER OF THE MATCH) தேர்வு செய்யப்பட்டார்.
- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியில் ஆகாஷ் தீப் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.
ராஞ்சி:
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இதில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடியது.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42, டக்கட் 11, போப் 0 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிந்த பின் இந்திய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அளித்த பேட்டியில் கூறியதாவது,
என்னுடைய பயிற்சியாளர்களிடம் நான் பேசினேன். எனவே அறிமுகப் போட்டியை நினைத்து நான் பதற்றமடையவில்லை. ஒவ்வொரு போட்டியையும் என்னுடைய கடைசி போட்டியாக நினைத்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் லென்த்தை இழுத்து வீச வேண்டும் என பும்ரா ஆலோசனை கொடுத்தார். அதைத்தான் இப்போட்டியில் நான் அப்படியே செய்தேன்.
நோ பால் வீசியதற்காக நான் மோசமாக உணர்ந்தேன். குறிப்பாக ஜாக் கிராவ்லி சிறப்பாக பேட்டிங் செய்ததால் அது அணியை பாதித்து விடக்கூடாது என்று நினைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
- அரையிறுதியில் பவுலினி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவ்லினி, ரோமானியா வீராங்கனை
சொரானா சிர்ஸ்டியுடன் மோதினார்.
இதில் பவுலினி 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20-யின் போது கான்வே காயமடைந்தார்.
- இதனால் முதல் இன்னிங்சின் போது போட்டியில் இருந்து வெளியேறினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்சின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பருமான கான்வே காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
கான்வேவுக்கு மேற்கொள்ளபட்ட எக்ஸ்ரே முடிவுகளின் படி அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அவரால் அடுத்த போட்டியில் விளையாட முடியுமா என்பது மருத்துவ சோதனைக்கு பிறகே தெரியவரும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாவது டி20 போட்டியில் டெவான் கான்வே இடம்பெறுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
முன்னதாக முதல் டி20 போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவும் தனது விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கான்வேவும் காயத்தை சந்தித்துள்ளது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் வரவுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். இத்தொடர் தொடங்குவதற்கு ஒருமாத காலமே உள்ள நிலையில் இருவரும் காயத்தை சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பெரும் பின்னடவைவாக பார்க்கப்படுகிறது.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை-டெல்லி அணிகள் மோதல்.
- துவக்க விழாவில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் பிரீமியர் லீக் 2024 கிரிக்கெட் தொடர் அறிமுக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. துவக்க விழாவில் பங்கேற்ற ஷாருக் கான் அதிரடியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

பிரமாண்டமாக துவங்கிய அறிமுக நிகழ்ச்சியில் ஷாருக் கானை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களான கார்திக் ஆர்யன் சித்தார்த் மல்ஹோத்ரா, டைகர் ஷெராஃப், வருண் தவான் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோரும் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர்.

கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டி துவங்கியது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- விபத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ஜெய்டன் ஆர்ச்சர் தவறி விழுந்தார்.
- பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
ஆஸ்திரேலிய பிரீஸ்டைல் மோட்டார் சைக்கிள் நட்சத்திர வீரர் ஜெய்டன் ஆர்ச்சர்(வயது-27). இவர் துணிச்சலான மோட்டார் சைக்கிள் வீரர். 'பிரீஸ்டைல்' மோட்டார் சைக்கிள் போட்டியில் முதன் முதலில் 75 அடி உயரத்தில் இருந்து 'டிரிபிள் பேக்பிளிப்' மூலம் தரையிறங்கி சாதனை படைத்தவர் ஆவார்.
இந்தநிலையில் நேற்று மெல்போர்னில் மோட்டார் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ஜெய்டன் ஆர்ச்சர் தவறி விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு ஏராளமான முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஜெய்டன் ஆர்ச்சர் 75 அடி உயரத்தில் மோட்டார் சைக்கிளை பின்னோக்கி தரையிறக்கி சாதனை படைத்த இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஆவார்.

தற்போது அதேபோல் செய்தபோது தான் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது.
ஜெய்டன் ஆர்ச்சருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு காதலி உள்ளார். இந்த விபத்துக்கு முன்னதாக அவருடன் போனில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார்.
- இதன் மூலம் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்தது. ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த போட்டியில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






