என் மலர்
கிரிக்கெட் (Cricket)

போட்டி முடிந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த கிரிக்கெட் வீரர்
- வயது அடிப்படையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார்.
- கர்நாடகா அணிக்காகவும், கர்நாடகா பிரீமியர் லீக் டி20-யிலும் விளையாடியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கே. ஹோஸ்சாலா. அவர் தற்போது கர்நாடக அணிக்காக விளையாடவில்லை. 34 வயதான அவர் வயது அடிப்படையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார்.
தெற்கு மண்டலம் ஐ.ஏ.-ஏ.டி. தொடரில் தமிழக அணிக்கெதிராக விளையாடினார். இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் சக வீரர்களுடன் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். விளையாட்டு மைதானத்திலேயே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கர்நாடகப பிரீமியர் லீக்கில் ஷிவமோகா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கேஎஸ்சிஏ மகாராஜா டி20 டிராபியலும் விளையாடியுள்ளார்.
Next Story






