search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்: கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்
    X

    மகளிர் பிரீமியர் லீக்: கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்

    • யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.
    • ஹர்மன்ப்ரீத் கவுர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    2-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.

    இந்த தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா - மெக் லானிங் களமிறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மெக் லானிங் உடன் ஆலிஸ் கேப்ஸி ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக் லானிங் 31 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து ஜெமிமா - ஆலிஸ் கேப்ஸி ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆலிஸ் கேப்ஸி 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜெமிமா 42 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அமெலியா கெர், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை யாசிகா பாட்டியா 45 பந்தில் 57 ரன்கள் விளாசினார்.

    கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    அந்த அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் விக்கெட் விழுந்தது. 2-வது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. 3-வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது.

    இதனால் 3 பந்தில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் 4-வது பந்தை எதிர்கொண்டார். அதை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் கடைசி 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.

    ஆனால் 5-வது பந்தில் கவுர் ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி. பவுண்டரி அடித்தால் "டை" என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் சஜனா களம் இறங்கினார். இவர் கடைசி பந்தை எளிதாக சிக்கசருக்கு தூக்கினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 20 ஓவரில் 173 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    34 பந்தில் 55 ரன்கள் விளாசிய ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்ட நாயகியாக (PLAYER OF THE MATCH) தேர்வு செய்யப்பட்டார்.

    Next Story
    ×