என் மலர்
விளையாட்டு
- இந்திய அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட்டில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
- 4-வது டெஸ்ட்டின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவித்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் சதம் அடித்து அசத்தினார்.
இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் குவித்தது.
இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக அதிக விளாசி வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), வில் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளார்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
கத்தார்:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. இரண்டாவது காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 6-வது விக்கெட்டுக்கு ரூட்- போக்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.
இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.
இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை படைக்கவிட்டார்.
இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- இஷான் கிஷன் ரஞ்சி தொடரில் விளையாடாமல் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயராகி வருகிறார்.
- ஷ்ரேயாஸ் முதுகு வலி காரணமாக ரஞ்சி தொடரில் இருந்து விலகினார்.
இந்திய அணியின் இளம் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பிசிசிஐ மத்திய ஒப்பந்தகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக இஷான் கிஷன் பிசிசிஐ-யிடம் தெரிவித்தார். மேலும் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதற்கு தமக்கு அனுமதி கொடுக்குமாறு கேட்டார். அதற்கு உடனடியான அனுமதி வழங்கப்பட்ட நிலையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிடாத அவர் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதன் பிறகு சில தொடர்களில் இஷான் கிஷன் களற்றி விடப்பட்டார். மேலும் இஷான் கிஷனை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடச் சொல்லி பிசிசிஐ வலியுறுத்தியுறுத்தியது. ஆனால் அவர் ரஞ்சி தொடரில் விளையாடாமல் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து ஐபிஎல் தொடருக்கு தயாரியாகி வந்தார்.
இவரை போல ஷ்ரேயாஸ் அய்யர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த பிசிசிஐ, அவரை பரிசோதித்து அறிக்கை சமர்பிக்கும் படி என்சிஏவிற்கு பிசிசிஐ உத்திரவிட்டிருந்தது.
அதன்படி என்சிஏ மருத்துவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தான் இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஆகிய இருவரும் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பது கேள்விகுறியாகி உள்ளது.
2022-23 மத்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, இஷான் கிஷன் சி பிரிவிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பி பிரிவிலும் இடம்பிடித்துள்ளார்கள்.
- நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
ஆக்லாந்து:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. 29 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
- துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த போட்டியில் ஸ்வியாடெக் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
துபாய்:
துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.
3-வது காலிறுதியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், சீன வீராங்கனை குயின்வென் ஷெங்குடன் மோதினார்.
இதில் ஸ்வியாடெக் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 4 ரன்னில் இருந்து தப்பிய கிராலி 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
- பேர்ஸ்டோ 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இடம் பிடித்தார்.
ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்தின் ஸ்கோர் 8 ரன்னாக இருக்கும்போது ஆகாஷ் தீப் பந்தில் 4 ரன்கள் எடுத்த நிலையில் கிராலி க்ளீன் போல்டானார். ஆனால் நோ-பால் என நடுவர் அறிவிக்க கிராலி அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
அதன்பின் கிராலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிராஜ் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் கிராலி தொடர்ந்து மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் சிராஜ் 19 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. ஆகாஷ் தீப் பந்தில் டக்கெட் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆகாஷ் தீப் வீசிய அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்னில் க்ளீன் போல்டானார். 4 ரன்னில் தப்பிய கிராலியை 42 ரன்னில் வீழ்த்தினார்.
அப்போது இங்கிலாந்து 57 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பேர்ஸ்டோ ஜோடி சேர்ந்தார். இந்தஜோ ஓரவிற்கு நிலைத்து நின்று விளையாடியது. பேர்ஸ்டாவ் விரைவாக ரன் சேர்க்க இங்கிலாந்து 20 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.

பென் ஸ்டோக்ஸ்
22-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அவர் 35 பந்தில் 38 ரன்கள் சேர்த்தார்.
5-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். பென் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அத்துடன் முதல்நாள் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது இங்கிலாந்து 24.1 ஓவரில் விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் எடுத்திருந்தது.
ஜோ ரூட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுவார்.
- ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.
அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக செயல்படுவார். ஆனால் முதல் 7 ஆட்டங்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்யமாட்டார். அவர் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.
பேட்டிங் மற்றும் ஓட்ட பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஐ.பி.எல். போட்டிக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியுடன் இருப்பார். முதல் போட்டியில் இருந்தே அவர் தலைமை தாங்குவார். ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அவரது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவது பற்றி முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால், நோ-பால் என்பதால் தப்பினார்.
- பின்னர் கிராலியை இன்-ஸ்விங் மூலம் மீண்டும் க்ளீன் போல்டாக்கி அசத்தினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3 போட்டிகளில் விளையாடிய பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் பும்ராவிற்குப் பதிலாக முகேஷ் குமார் களம் இறங்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.
ஆனால் 27 வயதான ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். பும்ராவிற்கு பதிலாக அறிமுக வீரரா? என கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும் வியப்படைந்தனர்.
ஆனால், பும்ரா அணிக்கு எவ்வாறு பங்களிப்பாரோ, அதேபோல் தானும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன் ஆகாஷ் தீப் களம் இறங்கினார்.
முதல் ஓவரை சிராஜ் வீச, 2-வது ஓவரை ஆகாஷ் தீப் வீசினார். சுமார் 135 கி.மீ. முதல் 140 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார். இதனால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது.

தனது 2-வது ஓவரிலேயே கிராலியை க்ளீன் போல்டாக்கினார். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஏனென்றால், அது நோ-பாலாக அமைந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் உத்வேகத்துடன் பந்து வீசினார். இதற்கு அவரின் 5-வது ஓவரில் பலன் கிடைத்தது. இந்த ஓவரின் 2-வது பந்தில் டக்கெட்டை (11) வெளியேற்றினார்.
இதே ஓவரின் 3-வது பந்தில் ஒல்லி போப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் டக்அவுட்டில் எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார். இரண்டு முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணிக்கு உத்வேகம் அளித்தார். அதோடு நிற்காமல் நோ-பால் மூலம் தப்பிய கிராலியை (42) அடுத்த ஓவரின் ஐந்தாவது பந்தில் க்ளீ்ன் போல்டு மூலம் வெளியேற்றினார். 6 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
27 வயதாகும் ஆகாஷ் தீப் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஆவார். 30 முதல்தர போட்டிகளில் விளையாடி 104 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு அரைசதத்துடன் 423 ரன்கள் எடுத்துள்ளார்.
- இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
- வுட், ரேஹன் ஆகியோருக்குப் பதிலாக ராபின்சன், பஷிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பின் நடைபெற்ற இரண்டு போட்டிகளையும் இந்தியா அடுத்தடுத்து வென்று தொடரில் 2-1 முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியில் பும்ரா இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- இரு அணிகளும் நாளை மோதுவது 135-வது டெஸ்டாகும்.
- இதுவரை நடந்த 134 போட்டியில் இந்தியா 33-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.
ராஞ்சி:
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 28 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. இதற்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 106 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. ராஜ்கோட்டில் நடந்த 3-வது போட்டியிலும் 434 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை (23-ந் தேதி) தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
கே.எல். ராகுல் இந்த போட்டியிலும் ஆடவில்லை. காயம் காரணமாக அவர் 2- வது மற்றும் 3-டெஸ்டில் விளையாடவில்லை. முன்னணி வேகப்பந்து வீச்சாளாரான ஜஸ்பிரீத் பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார்.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இரண்டு இரட்டை சதம் அடித்து இந்த தொடரில் 545 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். ராஜ்கோட்டில் அவர் சதம் அடித்தார். சர்பிராஸ் கான் தனது முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் அரை சதம் எடுத்தார். இதேபோல மற்றொரு புதுமுக வீரரான ஜூரலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
ஆல்ரவுண்டர் பணியில் ஜடேஜா சிறப்பாக செயல்படுகிறார். காயத்தால் 2-டெஸ்டில் ஆடாத அவர் கடந்த போட்டியில் சதம் அடித்தார். அவர் 4 இன்னிங்சில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இதேபோல அஸ்வின் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (8), முகமது சிராஜ் ஆகியோரும் பந்துவீச்சில் நல்ல நிலையில் உள்ளனர். பும்ரா இடத்தில் முகேஷ் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அதே நேரத்தில் புதுமுக வீரர் ஆகாஷ் தீப்பும் போட்டியில் உள்ளார்.
மற்றபடி அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ஒருவேளை ரஜத் படிதார் நீக்கப்பட்டால் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு இந்த டெஸ்ட் போட்டி நெருக்கடியாகும். தோல்வியை அந்த அணி தவிர்க்க வேண்டும். தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டக்கெட் (288 ரன்), ஆலி போப் (285), கிராவ்லி (226) ஆகியோரும், பந்து வீச்சில் ஹார்ட்லே (16 விக்கெட்), ரேகான் அகமது (11), ஆண்டர்சன் (6) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 135-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 134 போட்டியில் இந்தியா 33-ல், இங்கிலாந்து 51-ல் வெற்றி பெற்றன. 50 டெஸ்ட் 'டிரா' ஆனது.
நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
- இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
- ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி நாளை ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நான் இப்படி ஒரு பிட்சை பார்த்ததில்லை என ராஞ்சி மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிட்ச் போல் இதுவரை என் வாழ்க்கையில் எங்குமே நான் பார்த்தது கிடையாது. இந்த மைதானத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியவில்லை.
ஏனென்றால் பிட்சின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதற்கு முன் இந்தியாவில் எங்குமே நான் இப்படி ஒரு பிச்ட்சை பார்த்ததில்லை. ஏனெனில் ஓய்வறையில் இருந்து பார்த்த போது, இந்த பிட்சின் ஒரு பக்கம் அதிகளவிலான புற்களுடன் இருப்பது போன்றும், சற்று வெளியே வந்து பார்த்தால் சுழலுக்கு சாதகமானதாகவும் இருப்பது போன்று உள்ளது.
என ஸ்டோக்ஸ் கூறினார்.






