search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
    X

    நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

    • நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    ஆக்லாந்து:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய பெர்குசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

    நியூசிலாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. 29 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன்கள் மட்டுமே எடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.

    Next Story
    ×