search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஒன் மேன் ஷோ.. ரூட் சதத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவிப்பு
    X

    ஒன் மேன் ஷோ.. ரூட் சதத்தால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 302 ரன்கள் குவிப்பு

    • இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 6-வது விக்கெட்டுக்கு ரூட்- போக்ஸ் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ராஞ்சியில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி- பென் டக்கெட் ஆகியொர் களம் இறங்கினர். டக்கெட் 11 ரன்கள் எடுத்த போது ஆகாஷ் தீப் பந்து வீச்சில ஆட்டமிழந்தார். டக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார்.

    இதே ஓவரில் ஒல்லி போப் ரன்ஏதும் எடுக்காமலும் அதற்கு அடுத்த ஓவரில் கிராலி 42 ரன்களிலும் ஆகாஷ் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பேர்ஸ்டோ அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டோக்ஸ் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோ ரூட் - போக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 100 அமைத்து கெளவுரமான ஸ்கோரை எட்டியது. சிறப்பாக ஆடிய போக்ஸ் 47 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹார்ட்லி 13 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார்.

    இதனை தொடர்ந்து 8-வது விக்கெட்டுக்கு ரூட்டுடன் ராபின்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் அவ்வபோது பவுண்டரி சிக்சர்களை படைக்கவிட்டார்.

    இதன் மூலம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரூட் 106 ரன்களிலும் ராபின்சன் 31 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    Next Story
    ×