என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் கான் 3 அரை சத்தங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார்
    • சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக ரன்கள் குவித்து வந்த சர்பராஸ் கான் நீண்ட போராட்டத்திற்கு பின் இப்போட்டியில் அறிமுகமானார்.

    இந்த போட்டியை காண சர்பராஸ் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வந்திருந்தனர். சர்பராஸ் கான் இந்திய அணியின் தொப்பியை பெற்றுக் கொண்டதும் அவரது தந்தை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அதேபோல் சர்பராஸ் கான் மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்தார். 

    இந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சர்பராஸ் கான் 3 அரை சதங்களுடன் 200 ரன்கள் அடித்துள்ளார்.

    இந்நிலையில், சர்பராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை பரிசளிக்க விரும்புவதாக ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    அதில், "தைரியத்தை இழந்துவிட வேண்டாம். கடின உழைப்பு. தைரியம். பொறுமை போன்ற ஒரு தந்தையின் குணங்களை விட, ஒரு குழந்தைக்கு ஊக்கமளிக்க சிறந்த குணங்கள் ஏதேனும் உள்ளதா?. தனது மகனுக்கு உத்வேகம் தரும் ஒரு தந்தையாக இருப்பதற்காக, சர்பராஸ் கானின் தந்தையான நௌஷாத் கானுக்கு 'மஹிந்திரா தார்' காரை பரிசளிக்க விரும்புகிறேன். எனது பரிசை அவர் ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியம் மற்றும் கௌரவமாக கருதுவேன்' என்று பதிவிட்டிருந்தார்.

    அதன்படி, இந்திய வீரர் சர்ஃபராஸ் கானின் தந்தைக்கு தார் ஜீப்பை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பரிசளித்துள்ளார்.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆடம் ஜம்பா விளகியுள்ளார்.
    • குஜராத் அணியில் இருந்து ராபின் மின்ஸ் விலகியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இடம் பிடித்திருந்தார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் இருப்பதால், அதிக பணிச்சுமை (heavy workload) காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை 1.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்திருந்தது.

    இந்த நிலையில் ரஞ்சி தொடரில் அசத்திய மும்பை அணியின் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கொடியானை ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்த்துள்ளது.

    கொடியான் ரஞ்சி தொடரில் 502 ரன்கள் அடித்ததுடன், 29 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தொடர்நாயகன் விருது வென்றார். 8-வது இடத்தில் களம் இறங்கிய அவர் 120, 89 ரன்கள் எடுத்து பாரோடா, தமிழ்நாட்டு அணிகளுக்கு எதிராக அசத்தினார்.

    அதேபோல் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த ராபின் மின்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவருக்குப் பதிலாக கர்நாடகா மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பி.ஆர். சரத்தை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துள்ளது.

    பிஆரு் சரத் 28 ஒருநாள், 20 முதல்தர கிரிக்கெட், 43 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • IPL 2024 Records Virat Kohli Can Break During Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Clash
    • அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் இறங்குகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்கான விளையாடவில்லை.

    இந்த நிலையில் அவரது ரசிகர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் பல சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

    விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 11,994 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    35 வயதான விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். கிறிஸ் கெய்ல் 110 முறை, டேவிட் வார்னர் 109 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    இன்றைய போட்டியில் 15 ரன்கள் அடித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 237 போட்டிகளில் 222 இன்னிங்சில் 7,263 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும். ஸ்டிரைக் ரேட் 130.02 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 113. ஏழு சதங்கள் விளாசியுள்ளார். 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    • இலங்கை அணி 57 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.
    • கமிந்து மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 102 ரன்கள் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

    இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை சியால்ஹெட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணி முதலில் களம் இறங்கியது. வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நிஷான் மதுஷ்கா (2), திமுத் கருணாரத்னே (17), குசால் மெண்டிஸ் (16), மேத்யூஸ் (5), சண்டிமல் (9) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் இலங்கை 57 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது. 6-வது விக்கெட்டுக்கு கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா உடன் கமிந்து மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. கமிந்து மெண்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா ஆகியோர் தலா 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஜெயசூர்யா (1), விஷ்வா பெர்னாண்டோ (9), லஹிரு குமாரா (0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 68 ஓவரில் 280 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காளதேச அணி சார்பில் காலித் அகமது, நஹித் ராணா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    பின்னர் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

    • ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
    • ஹர்திக் பாண்ட்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (மார்ச் 22) துவங்கியது. பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த நிலையில், ஐ.பி.எல். தொடர் துவங்கும் முன்பு பல அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். எனினும், மும்பை மற்றும் சென்னை அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

     

    மும்பை அணியின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கேப்டன் மாற்றப்பட்ட காரணத்தால், மும்பை இந்தியன்ஸ் அணியின் சமூக வலைதள அக்கவுண்ட்களின் ஃபாளோவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

    அந்த வகையில் ஐ.பி.எல். போட்டிகள் துவங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "ஐ.பி.எல். எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. ஐ.பி.எல். எனக்கு அடையாளத்தை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். இல்லையெனில் நான் பரோடாவில் இருந்திருப்பேன். ஆனால் இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். அங்கு வேறொரு ஹர்திக் இருந்திருப்பார்," என்று தெரிவித்துள்ளார்.



    இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் கஜகஸ்தானின் ரிபாகினா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கஜகஸ்தானின் எலீனா ரிபாகினா, டென்மார்க்கின் கிளாரா டாசனுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை இழந்தாலும் அடுத்த இரு செட்களை கைப்பற்றினார். இறுதியில் 3-6, 7-5, 6-4 என செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா, இங்கிலாந்தின் பெய்டன் ஸ்டீர்ன்சுடன் மோதினார். இதில் அசரென்கா 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது.
    • பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது. தற்போது ஆண்கள் அணி போட்டியில் களம் இறங்க போகிறது. இந்த ஆண்டு தடைகளை உடைத்து ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்புகிறேன். இதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

    பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா வென்றார்.

    மியாமி:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

    இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    • மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட எம்.எஸ். டோனி தனது பதவியை ருதுராஜ் கெய்க்வாட்-இடம் கொடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த எம்.எஸ். டோனிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இன்ஸ்டா ஸ்டோரியில் மும்பை ஜெர்சியில் ரோகித் சர்மா எம்.எஸ். டோனிக்கு கை கொடுக்கும் புகைப்படம் மற்றும் கை குலுக்கும் எமோஜி இடம்பெற்று இருக்கிறது.

     


    முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா அந்த அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்புக்கு மும்பை ரசிகர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மும்பை அணியின் சமூக வலைதள கணக்குகளை பின்பற்றுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைய தொடங்கியது.

    நாளை 2024 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.
    • அணியில் என்னை வழிநடத்த பலர் உள்ளனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். புதிய கேப்டனை எம்.எஸ். டோனியே தேர்வு செய்த நிலையிலும், இந்த அறிவிப்பு சென்னை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பொறுப்பு பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

     


    அப்போது பேசிய அவர், "அருமையாக இருக்கிறது. இது ஒரு பாக்கியம். இது மிகப்பெரிய பொறுப்பு, ஆனாலும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் பக்கம் பலரும் அனுபவம் மிக்கவர்கள் என்பதால், நான் அதிகம் எதையும் செய்ய வேண்டியிருக்காது. மேலும் எம்.எஸ். டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த அணியில் உள்ளனர். இதனால் நான் அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.

    • சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:

    புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    ×