search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் சாதனைகள் படைக்க காத்திருக்கும் விராட் கோலி
    X

    சிஎஸ்கே-வுக்கு எதிரான போட்டியில் சாதனைகள் படைக்க காத்திருக்கும் விராட் கோலி

    • IPL 2024 Records Virat Kohli Can Break During Royal Challengers Bengaluru vs Chennai Super Kings Clash
    • அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி களம் இறங்குகிறார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்கான விளையாடவில்லை.

    இந்த நிலையில் அவரது ரசிகர்கள், விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க இருக்கிறார்கள். இந்த நிலையில் விராட் கோலி இன்றைய போட்டியில் பல சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.

    விராட் கோலி ஒட்டுமொத்தமாக டி20 போட்டியில் 11,994 ரன்கள் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் 6 ரன்கள் அடித்தால் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

    35 வயதான விராட் கோலி இன்றைய போட்டியில் அரைசதம் அடித்தால் 100 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். கிறிஸ் கெய்ல் 110 முறை, டேவிட் வார்னர் 109 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

    இன்றைய போட்டியில் 15 ரன்கள் அடித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 31 போட்டிகளில் விளையாடி 985 ரன்கள் அடித்துள்ளார்.

    விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 237 போட்டிகளில் 222 இன்னிங்சில் 7,263 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 37.24 ஆகும். ஸ்டிரைக் ரேட் 130.02 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 113. ஏழு சதங்கள் விளாசியுள்ளார். 50 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    Next Story
    ×