என் மலர்
விளையாட்டு
- டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.
இவருடன் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், க்ரிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் மார்க் வுட்
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 22 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜூன் 4 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையொட்டி பல இளம் வீரர்கள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. தற்போது இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எல். ராகுலுக்கு இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடமில்லை.
இதே போன்று ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் திலக் வர்மா, ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
- உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
- உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.
இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.
இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
- விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.
அந்த வரிசையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது.

அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Presenting #TeamIndia for the ICC Men's T20 World Cup to be hosted in the West Indies and USA! pic.twitter.com/6NoFJBMOjT
— BCCI (@BCCI) April 30, 2024
- கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
- உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போகின்றன என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் முடிவு தெளிவாகி விடும்.
இந்த நிலையில், ஐ.பி.எல். பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் யாரும் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருப்பதை ஒட்டி ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பை தொடருக்கான டி20 அணியை அறிவித்து வருகின்றன.
இதையொட்டியே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிவிப்பு காரணமாக ஐ.பி.எல். அணிகள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
- இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் 29 வரை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடக்கிறது.
- இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்தை எதிர்கொள்கிறது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ம் தேதி எதிர்கொள்கிறது. 9-ம் தேதி பாகிஸ்தானுடனும், 12-ம் தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடாவுடனும் மோதுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நியூசிலாந்து மட்டுமே இதுவரை டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். இதையடுத்து, டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனை தேர்வு செய்யும் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இருப்பர் என தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.
நியூசிலாந்து மட்டுமே இதுவரை உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்திய அணியில் இடம் பெறப் போகும் 15 வீரர்கள் யார்-யார்? என்று நாள்தோறும் முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள்.
2-வது விக்கெட் கீப்பர் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2-வது விக்கெட் கீப்பருக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல், உள்ளனர். இதில் சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு அறிவிக்கும். இந்திய அணி இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்படலாம் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 15 வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், அவேஷ்கான் அல்லது முகமது சிராஜ்.
கே.எல்.ராகுல், யசுவேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா ஆகியோரும் தேர்வுக்கான போட்டியில் இருக்கிறார்கள்.
இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகியவையும் அந்த பிரிவில் உள்ளன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந் தேதி எதிர்கொள்கிறது. 9-ந் தேதி பாகிஸ்தானுடனும், 12-ந் தேதி அமெரிக் காவுடனும், 15-ந் தேதி கனடாவுடனும் மோதுகிறது.
- 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ந்து தகிடுதத்தம் போடுகிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
லக்னோ:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 48-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சுடன் மோதுகிறது.
லக்னோ அணி 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளி பெற்றுள்ளது. சென்னையை தொடர்ந்து 2 முறை வீழ்த்திய லக்னோ அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் பணிந்தது.
லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல் (378 ரன்), நிகோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டாக் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், குருணல் பாண்ட்யா, ரவி பிஷ்னோயும் நம்பிக்கை அளிக்கிறார்கள். வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில ஆட்டங்களில் ஆடாத இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் முழு உடல் தகுதியை எட்டி விட்டதாகவும், அனேகமாக அவர் இன்றைய ஆட்டத்துக்கான அணியில் இடம் பெறுவார் என்றும் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேலாக பந்து வீசி அச்சுறுத்தும் மயங்க் யாதவின் வருகை அந்த அணியின் பந்து வீச்சை மேலும் பலப்படுத்தும்.
5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தொடர்ந்து தகிடுதத்தம் போடுகிறது. இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. கடந்த 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், டெல்லி அணிகளிடம் உதை வாங்கிய மும்பை அணிக்கு எஞ்சிய 5 ஆட்டங்களும் முக்கியமானதாகும். ஒன்றில் தோற்றாலும் அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விடும். எனவே வாழ்வா-சாவா? நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்குகிறது.
மும்பை அணியில் பேட்டிங்கில் திலக் வர்மா (336 ரன்), ரோகித் சர்மா (311), இஷான் கிஷன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், டிம் டேவிட் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. இருப்பினும் அவர்களிடம் இருந்து ஒருங்கிணைந்த செயல்பாடு வெளிப்படவில்லை. பந்து வீச்சில் அந்த அணி பும்ராவையே (14 விக்கெட்) அதிகம் நம்பி இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ஜெரால்டு கோட்ஜீக்கு பதிலாக கொண்டு வரப்பட்ட லுக் வுட் 68 ரன்களை வாரி வழங்கியதால் அவர் தனது இடத்தை தக்கவைப்பது கடினமாகும்.
சிக்கலின்றி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் லக்னோ 3 ஆட்டத்திலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வென்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
லக்னோ: குயின்டான் டி காக், லோகேஷ் ராகுல் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, குருணல் பாண்ட்யா, மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மொசின் கான், யாஷ் தாக்குர்.
மும்பை: இஷான் கிஷன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நேஹல் வதேரா, டிம் டேவிட், முகமது நபி, பியுஷ் சாவ்லா, லுக் வுட் அல்லது ஜெரால்டு கோட்ஜீ, பும்ரா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
- இதில் நம்பர் 3 வீரரான அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 3 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரேசில் வீரர் தியாகோவுடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அர்ஜென்டினாவின் பெட்ரோ காசினுடன் மோதினார். இதில் நடால் முதல் செட்டையும், பெட்ரோ 2வது செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை நடால் வென்றார்.
இறுதியில், நடால் 6-1, 6-7 (5-7), 6-3 என்ற செட்களில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 47 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் நீடிக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று 3, 4, 5, 6-வது இடங்களில் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணிகள் தலா 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று 8, 9, 10-வது இடங்களில் உள்ளன.
- மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்துவருகிறது.
- இதில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
மேட்ரிட்:
மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை சாரா டோர்மாவை எதிர்கொண்டார்.
இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை சாரா பிஜ்லெக்குடன் மோதினார். இதில் ரிபாகினா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.






