என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 4 வீரரான மெத்வதேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 4 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் ஜேன் லெனார்டுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் முதல் செட்டையும், ஜேன் லெனார்ட் அடுத்த செட்டையும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் வென்றார். இறுதியில், அல்காரஸ் 6-3, 6-7 (5-7), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல் ரூப்லெவ், சின்னர் உள்ளிட்டோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சிட்னி:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில் ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல்லில் அதிரடி காட்டி வரும் மெக்கர்க் ஆகியோருக்கு இடமில்லை.

    ஆஸ்திரேலியா அணி விவரம்:

    ஆஷ்டன் ஆகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லீஷ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

    இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், பிரேசில் வீராங்கனை பெட்ரிஸ் மியாவை எதிர்கொண்டார்.

    இதில் நம்பர் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் முதல் செட்டை இழந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அடுத்த இரு செட்களை

    6-0, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ், துனீசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபேருடன் மோதினார். இதில் மேடிசன் 0-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ஸ்வியாடெக், மேடிசன் கீஸ் மோதுகின்றனர்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.
    • ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    காபூல்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என் ஐ.சி.சி. அறிவித்திருந்தது.

    நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னணி வீரர்களான முகமது நபி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான அணி விவரம்:

    ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), ஹஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ரஷீத் கான் (கேப்டன்), நங்யால் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, நவீன் உல் ஹக், பசல்ஹக் பரூக்கி, பரீட் அகமது மாலிக்.

    ரிசர்வ் வீரர்கள்; செடிக் அடல், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஜாய், சலீம் சபி.

    • மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 5 வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நேற்று நடந்தன. இதில் நம்பர் 5 வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோவுடன் மோதினார்.

    இதில் ஸ்வரேவ் 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதேபோல், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், செக் வீரர் ஜிரி லெஹெகாவுடன் மோதினார். இதில் நடால் 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மார்கஸ் ஸ்டாயினிஸ் 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி 46 ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். கேப்டன் கே.எல். ராகுல் 22 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்மிழந்தார். அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 62 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    லக்னோ அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை குவித்து, நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், துஷாரா, கோட்சி, முகமது நபி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • இஷான் கிஷன் 32 ரன்களை குவித்தார்.
    • மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    இதனால் பேட்டிங்கை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துவக்க வீரரான ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா முறையே 10 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    இவரை தொடர்ந்து களமிறங்கிய நேஹல் வதீரா நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார். துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடி 32 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்தது.

    லக்னோ சார்பில் மொசின் கான் இரண்டு விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ், நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியிலும், காத்திருப்போர் பட்டியலிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கே.எல். ராகுல் புறக்கணிக்கப்பட்டதற்கு டுவிட்டர்வாசிகள் தங்களது விமர்சனங்களை பதவிட்டு வருகிறார்கள். ரிஷப் பண்ட்-ன் சாதனையை கே.எல். ராகுல் சாதனையுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளது. அதில் "கே.எல். ராகுல் எப்போதும் எங்களுடைய நம்பர் ஒன்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • லக்னோ அணி நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
    • மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் பின்தங்கியுள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    லக்னோ அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி, நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றி, ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்பில் லக்னோ அணி களமிறங்குகிறது. 

    • மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார்
    • தனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது

    ஐபிஎல் 2024 சீசனின் 3-வது போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    அப்போட்டியில் மயங்க அகர்வாலின் விக்கெட்டை எடுத்தவுடன் அவரின் முகத்தை நோக்கி ஹர்ஷீத் ராணா பிளையிங் கிஸ் கொடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் போரல் விக்கெட்டை வீழ்த்தினார் ராணா. அதன் பிறகு அவர் மீண்டும் பிளையிங் கிஸ் கொடுக்க முயன்று பின்பு தன்னை கட்டுப்படுத்தினார். ஆனாலும் அதற்கு பதிலாக அவர் வெளியே போ என்றவாறு சைகை செய்தார்.

    இதனால் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிவீரர் ஹர்ஷீத் ராணாவுக்கு 100% அபராதம் மற்றும் ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
    • வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

    இதைத்தொடர்ந்து கிரிக்கெட் கமென்ட்ரி மற்றும் அது சார்ந்த பணிகளில் சுரேஷ் ரெய்னா ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சாலையோர கடை ஒன்றில் நவாப்பழம் (நவால் பழம்) வாங்கிய வீடியோவை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    வீடியோவின் படி சுரேஷ் ரெய்னா மும்பையில் உள்ள சாலையோர கடை ஒன்றில் நவாப்பழம் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

    • டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜாஸ் பட்லர் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

    இவருடன் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோரும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர் டி20 உலகக் கோப்பை தொடரின் மூலம் ரி என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

     


    2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி:

    ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், க்ரிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷித், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் மார்க் வுட்

    உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் மே 22 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜூன் 4 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

    ×