search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ringu Singh"

    • இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.
    • ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    பர்படாஸ்:

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று நாளை மறுநாள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடங்கவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டனர்.

    இதன்பின் ஓய்வெடுத்த இந்திய அணி வீரர்கள், இன்று பார்படாஸ் பீச்சில் உற்சாகமாக விளையாடியுள்ளனர். இந்திய அணியின் விராட் கோலி, ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, சாஹல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதில் ஒரு பக்கம் ரிங்கு சிங் 6 பேக் உடலுடனும் இன்னொரு பக்கம் 8 பேக் உடற்கட்டுடன் விராட் கோலி உற்சாகத்துடன் பீச் வாலிபால் விளையாடி இருக்கிறார். இருவரின் புகைப்படங்களையும் பதிவிட்டு இந்திய வீரர்களின் ஃபிட்னஸை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

    ஜூன் 20-ம் தேதி இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் மோதவுள்ளது.

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது
    • உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மாவுடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அகமதாபாத்தில் இன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷாவை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் 15 வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதை தொடர்ந்து உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வுக் குழு இன்று அறிவித்தது.

    இந்திய அணியில் பினிஷராக ரிங்கு சிங் இடம் பெறுவாரா? இல்லை சிவம் துபே இடம் பெறுவாரா என்ற இழுபறி நீடித்தது. இந்த போட்டியில் முந்திய துபே அணியில் இடம் பெற்றுள்ளார்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இடம்பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று நடிகர் ஷாருக்கான் தெரிவித்திருந்த நிலையில் அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த சீசனில் ரிங்கு சிங்கால் போதிய ரன்களை குவிக்க முடியவில்லை. அதனை காரணம் காட்டியே அவர் ரிசர்வ் வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து ரிங்கு சிங் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார். அந்த சீசனில் அவர் 474 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் வழியாக பிசிசிஐ தேர்வாளர்களின் கவனத்தை அவர் டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

    இந்தியாவுக்காக 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் இரண்டு அரைசதங்களுடன் 176 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் திலக் வர்மாவுக்கும் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 9 போட்டிகளில் விளையாடி 336 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×