search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பை அணியில் இவர்களுக்கே இடமில்லை - யார் யார் தெரியுமா?
    X

    டி20 உலகக் கோப்பை அணியில் இவர்களுக்கே இடமில்லை - யார் யார் தெரியுமா?

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    • இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி பல இளம் வீரர்கள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. தற்போது இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.


    விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எல். ராகுலுக்கு இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடமில்லை.

    இதே போன்று ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் திலக் வர்மா, ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    Next Story
    ×