என் மலர்
விளையாட்டு
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்
மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஐ.பி.எல். 2024 தொடரில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.
- மைதான பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் உண்மையான ஹீரோக்கள் மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தான் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.பி.எல். போட்டிகளை நடத்திய மைதானத்தின் பணியாளர்கள், பொறுப்பாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
"சமீபத்திய டி20 சீசனின் உண்மையான கதாநாயகர்கள் அயராது உழைத்த மைதான பராமரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் கடினமான வானிலையின் போதும், தலைசிறந்த பிட்ச்களை உருவாக்குவதில் சிறப்பாக ஈடுபட்டனர்."
"அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்து ஐ.பி.எல். மைதானங்களின் பராமரிப்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ரூ. 25 லட்சமும், கூடுதலாக மூன்று மைதானங்களின் ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்கப்படும்," என்று ஜெய் ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஐ.பி.எல். 2024 பத்து மைதானங்கள் பட்டியலில் - மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாத், பெங்களூரு, லக்னோ, ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
- கடைசி லீக் ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
- 2019-ல் அப்டெர்ரஜாக் ஹம்தல்லா ஒரு சீசனில் 34 கோல்கள் அடித்தது சாதனையாக இருந்தது.
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ "சாதனைகளை நான் பின்தொடரவில்லை. அதுதான் என்னை பின்தொடர்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது. அதை நோக்கி தயாராகும்படி ரோகித் கூறினார்.
- ரோகித் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் அடுத்த மாதம் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் பினிஷிங் ரோலில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடி இந்திய அணியில் வாய்ப்பை பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணியில் கிடைத்த 15 வாய்ப்புகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை பினிஷிங் ரோலில் வெளிப்படுத்தினார்.
ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் சூழ்நிலைகளில் விளையாட நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை எனக் கருதிய இந்திய தேர்வுக்குழு ரிங்கு சிங்கை சேர்க்காமல் விலக்கி வைத்தது.
இதுகுறித்து ரிங்கு சிங் கூறியதாவது:-
நல்ல செயல் திறனோடு இருந்தும் கூட நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது யாருக்கும் வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி அணி காம்பினேஷன் காரணமாக என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் பரவாயில்லை நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்பொழுதும் கவலைப்பட கூடாது. ஆரம்பத்தில் இது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனாலும் எது நடந்தாலும் பரவாயில்லை அது நன்மைக்கேதான் நடக்கும்.
ரோகித் பாய் என்னிடம் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது, எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும்படி மட்டும் கூறினார்.
ரோகித் பாய் கேப்டன்சி எவ்வளவு சிறந்தது என உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நான் ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவருடன் நான் அதிகம் பேசியது கூட கிடையாது. இளம் வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்புவார். அவர் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்.
இவ்வாறு ரிங்கு சிங் கூறினார்.
- சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
சிங்கப்பூர்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்தை சேர்ந்த போர்ன்பிச்சா சோகீவாங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டை 19-21 என்ற செட் கணக்கில் ஆகர்ஷி இழந்தார். இதனால் 2-வது செட்டை வெல்ல கடுமையாக போராடிய அவர் 20-22 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் 19-21, 20-22 என்ற கணக்கில் முதல் சுற்றில் ஆகர்ஷி தோல்வியடைந்தார்.
- 8, 10, 12, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்டவருக்கான போட்டிகள் நடக்கிறது.
- இதில் பங்கேற்க விருப்பம் உள்ள சிறுவர், சிறுமியர் வருகிற 5-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.
சென்னை:
ஸ்ரீராகவேந்திரா செஸ் அகாடமி, ஆசான் மெமோரியல் என்ஜினியரிங் கல்லூரி கிளப் இணைந்து முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டி ஒரகடம் பிரதான சாலையில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் ஜூன் 9-ந் தேதி நடக்கிறது.
8, 10, 12, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்டவருக்கான போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள சிறுவர், சிறுமியர் வருகிற 5-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8610292372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
- இதனால் வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ விண்ணப்பம் வெளியிட்டுள்ளது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளது.
மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிகளவில் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
- ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
சென்னை:
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் அவர் மோதுகிறார். உலக போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். குகேஷ்-டிங் லிரன் மோதும் உலக செஸ் போட்டி நவம்பரில் நடக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் ஆகியவை சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலை வர் டி.வி. சுந்தர் தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம்.மாணிக்கம், அகில இந்திய செஸ் சம்மேளன முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், வேலம்மாள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.எம்.வேல்மோகன், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன தமிழ்நாடு செஸ் சங்க பொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று டி.குகேஷை பாராட்டினர்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து 'டி.குகேஷ் பேசும்போது சீன வீரர் டிங் லிரனுடன் மோதும் உலக செஸ் போடடியில் எனது சிறந்த நிலையை வெளிப்படுத்த முயற்சிப்பேன்' என்றார்.
ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.
- நானும், விராட்டும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார்.
- நான் அவருடம் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியால் அவருக்கு பதிலாக வில் ஜக்ஸ் அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த நிலைமையில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற நிலையில் இருந்தது.
அந்த நிலையில் களமிறங்கிய வில் ஜக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் அதில் ஒரு சதத்தையும் வில் ஜக்ஸ் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலியிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என வில் ஜக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நானும், விராட்டும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார். சேஸிங்கில் எப்படி அதிரடியாக ரன்களை குவிப்பது குறித்த விலைமதிப்பற்ற விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் அவருடம் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன்.
இவ்வாறு வில் ஜேக்ஸ் கூறினா.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
- கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார்.
பாரீஸ்:
இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய முன்னணி வீரரான சுமித் நாகல் ரஷியாவின் கரேன் கச்சனோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட கரேன் கச்சனோவ் 6-2, 6-0, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் சுமித் நாகலை வீழ்த்தினார். இதையடுத்து முதல் சுற்றிலேயே தோல்வி கண்ட இந்திய வீரர் சுமித் நாகல் தொடரில் இருந்து வெளியேறினார்.
- ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார்.
- அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை அவர் தேடியது அம்பலமானது.
சென்னை:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3-வது இடத்தை பிடித்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு சிறந்த சீசனாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் யூடியூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். இதில் தான் ரியான் பராக் பிரச்சனையில் சிக்கினார்.
யூடியூப் தலத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்துள்ளது. அதில் அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை தேடியது அம்பலமானது.

ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.
பாரீஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரபேல் நாடல், ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடால் முதல் சுற்றிலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முன்னதாக ரபேல் நடால் தனது 19 ஆண்டுகால பிரெஞ்சு ஓபன் வாழ்க்கையை இந்த சீசனுடன் முடித்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. பிரெஞ்சு ஓபனில் அவர் புரிந்த சாதனை மற்றும் நற்பெயரை ஒருபோதும் ஒப்பிட முடியாது. இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பிரெஞ்சு ஓபனில் வென்றுள்ளார். களிமண் ஆடுகளத்தின் ராஜா என்றும் அவர் புகழப்பட்டு வருகிறார்.
22 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்பெயின் வீரர் நடால், 2005 ம் ஆண்டில் ரோலண்ட் கரோசில் தனது முதல் பட்டத்தை வென்றார். இன்னும் ஒரு வாரத்தில் ( வரும் திங்கட்கிழமை) அவர் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான் என நடால் கூறியுள்ளார்.
இது குறித்து ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
முந்தைய போட்டிகளை விட இந்த போட்டியில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது என்று உணர்ந்தேன். ஆனால் எனக்கு முன்னால் ஒரு கடினமான எதிரி இருந்தார். அவர் நன்றாக விளையாடினார்.
உங்கள் முன் நான் விளையாடிய கடைசி பிரெஞ்சு ஓபன் இதுவா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இனியொரு முறை இங்கு விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு தான். இன்று என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதே நேரத்தில் ஒலிம்பிக் போட்டியில் இதே மைதானத்தில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். மேலும் எனக்கு நிறைய விளையாடுவது மற்றும் எனது குடும்பத்துடன் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.
என்று நடால் கூறினார்.






