என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State Level Chess Tournament"

    • தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
    • இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    நாமக்கல்:

    தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.

    • 8, 10, 12, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்டவருக்கான போட்டிகள் நடக்கிறது.
    • இதில் பங்கேற்க விருப்பம் உள்ள சிறுவர், சிறுமியர் வருகிற 5-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஸ்ரீராகவேந்திரா செஸ் அகாடமி, ஆசான் மெமோரியல் என்ஜினியரிங் கல்லூரி கிளப் இணைந்து முதலாவது மாநில அளவிலான செஸ் போட்டியை நடத்துகிறது. இந்தப் போட்டி ஒரகடம் பிரதான சாலையில் உள்ள அந்த கல்லூரி வளாகத்தில் ஜூன் 9-ந் தேதி நடக்கிறது.

    8, 10, 12, 17 மற்றும் 20 வயதுக்குட்பட்டவருக்கான போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ள சிறுவர், சிறுமியர் வருகிற 5-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8610292372 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×