மாநில அளவிலான சதுரங்க போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவன் தேர்வு

தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் குமாரபாளையம் அரசு பள்ளி மாணவன் தேர்வு
Published on

நாமக்கல்:

தமிழக அரசின் விளையாட்டுத்துறை சார்பில் நாமக்கல் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவின் கீழ் நடந்த போட்டியில், குமாரபாளையம் அருகே தர்மதோப்பு, வாசுகி நகர் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் சையத் பாசித் பங்கேற்று விளையாடி, 2-ம் பரிசு பெற்று சாதனை படைத்தார். இவருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜீனத், பி.டி.ஏ.தலைவர் தம்பி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் உள்பட பலர் வாழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com