என் மலர்
விளையாட்டு
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
- இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
பிரிஜ்டவுன்:
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த குரூப் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.
ஆப்கானிஸ்தான்:
ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய், குல்படின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.
- இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
- அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.
இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.
தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.
அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் சிக்க
- ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க சுற்று ஆட்டம் நடைபெற்றது. "பி" பிரிவில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்று முன்னேறும் என்ற நிலை இருந்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 19.4 ஓவரில்தான் இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. இதனால் பரப்பான நிலை ஏற்பட்டது.
இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விமானங்களில் டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தனர். அவர்களிடம் பீதி தொற்றியிருந்தது.
கடைசி ஓவரின் 3-வது பந்தில் டிம் டேவிட் கேட்ச் தவற விட்டபோது இங்கிலாந்து வீரர்கள் அறையில் ஒருவிதமான பதட்டம் இருந்துள்ளது. கேட்ச் விட்டபின்னர் 2 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். அதை பார்க்க வேடிக்கயைாக இருந்திருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களிடம் இருந்து எனக்க சில தகவல் கிடைத்தது. அப்போது போட்டியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உண்மையிலேயே இங்கிலாந்து லீக் சுற்றோடு திருப்பி அனுப்பப் போகிறீர்களா? இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.
- கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தனது 52வது வயதில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேவிட் ஜான்சன், இன்று பெங்களூருவில் உள்ள அவரது அபார்ட்மெண்டிற்கு வெளியே இறந்து கிடந்துள்ளார்.
டேவிட் ஜூட் ஜான்சன், கொத்தனூரில் உள்ள கனக ஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், டேவிட் ஜூன் ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன். 1996- 97 சீசனில் இந்தியாவுக்காக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டேவிட் ஜான்சன். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி புகழ் பெற்றார்.
இதேபோல், உள்நாட்டு சுற்றுகளில் கர்நாடகாவுக்காக 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ல் அக்டோபரில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். காயம்பட்ட ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பதிலாக அவர் அணியில் இடம்பிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் டேவிட் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசினார் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஸ்லேட்டரை டக் அவுட் செய்தார்.
அவர் அதே ஆண்டில் அடுத்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மற்றொரு டெஸ்டில் விளையாடினார். ஆனால் டர்பனில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.
அவரது சர்வதேச வாழ்க்கை இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்காக தொடர்ந்து விளையாடினார்.
- வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
- முதல் தொடரில் வங்காளதேசம் அணியை இந்தியா எதிர் கொள்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜுன் 29-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடும் சர்வதேச ஹோம் சீசனுக்கான (2024-25) போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
அந்த வகையில் வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
செப்டம்பரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் டெஸ்ட் தொடருடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ம் தேதியும் தொடங்குகிறது. 3 டி20 போட்டிகள் தரம்ஷாலா, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகள் முறையா புனே மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது.
அதை தொடர்ந்து 2025-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வென்றார்.
பெர்லின்:
பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா,
ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை சந்திக்கிறார்.
- நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.
- முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.
பிரிஜ்டவுன்:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இந்திய அணி சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் எனது இலக்கு பும்ரா மட்டும் அல்ல, இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவருமே என ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர் குர்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உண்மையாக, எனது இலக்கு ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அல்ல. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் அடிக்க பார்க்கிறேன். பொதுவாக ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். இது பும்ராவுக்கு எதிரான ஒரு போர். ஒருவேளை மற்றொரு பந்துவீச்சாளர் என்னை வெளியேற்றலாம். ஆனால், எனக்கு அவரை (பும்ரா) அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிப்பேன். அது பும்ராவாகவோ, அர்ஷ்தீப்பாகவோ அல்லது சிராஜாகவோ இருக்கலாம். எனது ஏரியாவில் பந்து வீசினால் நான் அவர்களை அடிப்பேன் அல்லது நான் ஆட்டமிழந்து வெளியேறுவேன்.
நாங்கள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, உலகக் கோப்பையில் எப்படியாவது பங்கேற்பதாக எங்கள் மனநிலை இருந்தது. ஆனால் இப்போது எங்கள் மனநிலை சாம்பியன் ஆக வேண்டும் என்பது மட்டுமே. கோப்பையை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.
நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம். முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.
இவ்வாறு குர்பாஸ் கூறினார்.
- முதல் இரண்டு ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் அதிக புள்ளிகள் சேர்த்தனர்.
- இதனால் 5-2 என உக்ரைன் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.
வில்வித்தை உலகக் கோப்பை துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி (தீபிகா, பஜன், அங்கிதா) காலிறுதியில் ரிகர்வ் பிரிவில் உக்ரைன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் அணி 5-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் ரவுண்டில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 52 புள்ளிகளும் பெற்றனர்.
2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 53 புள்ளிகளும், உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகளும் பெற்றனர்.
3-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் 57 புள்ளிகள் பெற்றனர். உக்ரைன் வீராங்கனைகள் 54 புள்ளிகள் பெற்றனர்.
4-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளும், உக்ரைன் வீராங்கனைகளும் தலா 53 புள்ளிகள் பெற்றனர்.
ஒரு சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கு 2 மார்க் வழங்கப்படும். சமநிலை பெற்றால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு மார்க் வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்திய வீராங்கனைகள் 5-3 என வெற்றி பெற்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீராங்கனை இரண்டு முறை என மூன்று வீராங்கனைகள் ஆறு அம்புகளை எய்த வேண்டும். வட்டத்தின் மையத்தை அம்பு தாக்கினால் 10 புள்ளிகள் வழங்கப்படும்.
ஆண்கள் அணி நெதர்லாந்திடம் 1-5 என தோல்வியடைந்து வெளியேறியது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
- இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-
478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)
423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)
422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)
420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)
390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)
இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)
32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்
26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து
25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா
24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா
இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-
116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014
101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021
99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012
87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024
86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022
- நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.
பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- ஹங்கேரி அணிக்கு எதிராக 3-1 என சுவிட்சர்லாந்து அபார வெற்றி.
- ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டயில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.
மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.
இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.
இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது.






