என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஹங்கேரி அணிக்கு எதிராக 3-1 என சுவிட்சர்லாந்து அபார வெற்றி.
    • ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டயில் ஸ்காட்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முன்னதாக ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் 3-1 என்ற அபார வெற்றியை பெற்ற சுவிட்சர்லாந்து, இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் ஆடியது.

    மறுபுறம் ஸ்காட்லாந்து அணியும் வெற்றி முனைப்பில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. அந்த வகையில் ஸ்காட் மெக்டொமினே அடித்த கோல் காரணமாக ஸ்காட்லாந்து அணி போட்டியில் முன்னணி வகித்தது.

    இதைத் தொடர்ந்து பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டிய சுவிட்சர்லாந்து அணிக்கு ஷகிரி 20 யார்ட்களில் இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து சமநிலையில இருந்தன.

    இதைத் தொடர்ந்து இரு அணி வீரர்களும் இன்னொரு கோல் அடித்து முன்னிலை பெற முனைப்பு காட்டினர். எனினும், போட்டி முடிவில் 1-1 என்ற வகையில் போட்டி சமனில் முடிந்தது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    • ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
    • அந்த அணி முதல் கோலை அடித்தது.

    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் ஹங்கேரி அணிகள் மோதின. இந்த போட்டியில் ஹங்கேரி அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    முந்தைய போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை வெற்றி பெற்ற நிலையில், ஹங்கேரியை வீழ்த்தும் முனைப்பில் ஜெர்மனி அணி விளையாடியது. போட்டியின் முதல் பத்து நிமிடங்களில் ஜெர்மனி களத்தில் செட் ஆகும் வரை மட்டும் ஹங்கேரி வீரர்கள் ஆதிக்கம் இருந்தது. திடீரென இந்த நிலையில், மாற்றம் ஏற்பட்டது.

    ஜெர்மனி வீரர்கள் கோல் அடிப்பதில் தீவிரம் காட்டினர். இதற்கு பலன் அளிக்கும் வகையில், ஜெர்மனி அணி முதல் கோலை அடித்தது. இதைத் தொடர்ந்து ஹங்கேரி அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது. முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோலில் முன்னிலை வகித்தது.

    எனினும், இரண்டாவது பாதியிலும் கோல் அடிக்கும் முனைப்பில் ஜெர்மனி தீவிரம் காட்டியது. அந்த வகையில் ஜெர்மனி வீரர் குண்டோகன் தனது 19 வது சர்வதேச கோல் அடிக்க, அந்த அணி 2-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து போட்டி முழுக்க ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஜெர்மனி அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஹங்கேரி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டெய்லர் - ஆண்ட்ரிஸ் கௌஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி டெய்லர் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஸ் குமார் 8, ஜோன்ஸ் 0, ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்நிலையில் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் அரை சதம் விளாசினார்.

    அதிரடியாக விளையாடி ஹர்மீத் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதல் பாதி நேரத்தில் அல்பேனியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
    • ஓன் கோல் கிடைத்ததால் குரோசியா 2 கோல் அடித்தது.

    யூரோ 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் "பி" குரூப்பில் இடம் பிடித்துள்ள குரோசியா- அல்பேனியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் அல்பேனியா முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் குவாசிம் லாசி இந்த கோலை அடித்தார். அதன்பின் இரண்டு அணி வீரர்களால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அல்பேனியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்து.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் குரோசியா வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நீண்ட நேர முயற்சிக்குப்பின் 74-வது நிமிடத்தில் வாய்ப்பு கிடைத்தது. அன்ட்ரெஜ் கிராமாரிக் கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் குரோசியாவுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

    அல்பேனியா கோல் கம்பம் அருகே குரோசிய வீரர் கோல் அடிக்க முயற்சி செய்து பந்தை உதைத்தார். அதை அல்பேனிய வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது கிளாஸ் ஜாசுலாவின் காலில் பந்து பட்டு கோலாக மாறியது. இதனால் குரோசியாவிற்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் குரோசியா 2-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் அல்பேனியா வீரர்களை கோல் அடிக்க விடாத வகையில் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 90 நிமிடம் வரை அல்பேனியா வீரர்களால் கோல் அடிக்கமுடியவில்லை. காயத்திற்கான நேரம் என 6 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

    அதில் 95-வது நிமிடத்தில் ஓன் கோல் கொடுத்த கிளாஸ் ஜாசுலா சிறப்பான முறையில் கோல் அடித்தார். சக வீரர் கோல் கம்பம் அருகே பந்தை கடத்தி இவருக்கு பாஸ் செய்ய குரோசிய வீரர் அதை தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து ஜாசுலாவிடம் வந்தது. அவர் எளிதாக அதை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

    ஓன் கோல் கொடுக்கவில்லை என்றால் அல்பேனியா வெற்றி பெற்றிருக்கும். இறுதியில் போட்டியில் டிராவில் முடிந்ததால் அல்பேனியா ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 194 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் டி காக் 74 ரன்கள் எடுத்தார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன் மார்கிரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ரேட்டை உயர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மார்கிரம் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இரண்டு அணிகளும் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்துள்ளது.
    • வேகப்பந்து வீச்சு மூலம் முதலில் நெருக்கடி கொடுப்போம் என அமெரிக்கா கேப்டன் நம்பிக்கை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் "ஆடுகளம் சிறப்பானதாக இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புகிறோம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சை அணியில் இணைத்துள்ளோம்" என்றார்.

    அமெரிக்கா அணி:-

    1. ஷயன் ஜஹாங்கீர், 2. ஸ்டீவன் டெய்லர், 3. ஆண்ட்ரிஸ் கவுஸ், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. நிதிஷ் குமார், 6. கோரி ஆண்டர்சன், 7. ஹர்மீத் சிங், 8. ஜாஸ்தீப் சிங், 9. நோஸ்துஸ் கெஞ்சிகே, 10. அலி கான், 11. சவுரப் நெட்ராவால்கர்.

    தென்ஆப்பிரிக்கா அணி:-

    1. டி காக், 2. ரீசா ஹென்ரிட்க்ஸ், 3. மார்கிராம், 4. ஹென்ரிச் கிளாசன், 5, டேவிட் மில்லர், 6. ஸ்டப்ஸ், 7. மார்கோ யான்சன், 8. கேஷவ் மகாராஜ், 9. ரபாடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

    • முதலில் ஆடிய இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 136 ரன்கள் குவித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை மந்தனா வீழ்த்தினார்.

    பெங்களூரு:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசிய மந்தனா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

    தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. அந்த அணிக்கு 84 பந்துகளில் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது.

    • மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
    • இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.

    இவ்வாறு ராணா கூறினார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றுள்ளார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.

    இதில் அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மந்தனா 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • கவுர் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பெங்களூரு:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ஷபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷபாலி வர்மா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேமலதா 24 ரன்னில் வெளியேறினார்.

    இதனையத்து கேப்டன் கவுர்- மந்தனா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா சதம் விளாசி அசத்தினர்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மந்தனா 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய கவுர் கடைசி ஓவரில் சதம் அடித்தார்.

    இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. கவூர் 103 ரன்னிலும் ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×