என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2வது போட்டியில் திரில் வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி
    X

    2வது போட்டியில் திரில் வெற்றி: ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

    • முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×