search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curtly Ambrose"

    • இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
    • அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.

    இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

    கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

    தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.

    அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம்.
    • டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    இந்நிலையில், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்முறை எங்களிடம் மிக மிக நல்ல அணி உள்ளது. நாங்கள் பேசும்போது, அவர்கள் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு முகாமில் டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் பயிற்சிகளை தொடங்கவுள்ளனர். இத்தொடரில் எங்கள் அணி வீரர்கள் சீரான மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாரான கிரிக்கெட்டை விளையாடியனால் நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்.

    இது எளிதானது அல்ல என்று தெரியும். ஆனால் இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற நாடுகளில் நாங்களும் உள்ளோம். எனவே இம்முறை அதனை நாங்கள் 3-வது கோப்பையாக மாற்ற முயற்சிப்போம். மேலும் டி20 உலகக்கோப்பையை நடத்திய நாடுகள் சொந்த மண்ணில் கோப்பையை வென்றதில்லை. ஏனவே நாங்கள் சிறப்பாக செயப்பட்டு அதனை மாற்ற முயற்சி செய்வோம் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ஆம்ரோஸ் கூறினார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி:

    ரோவ்மன் பாவெல் (கேப்டன்), அல்ஸாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரான் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், பிராண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்ஃபர்ட்.

    ×