என் மலர்
விளையாட்டு
- காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ 7(7)-6(2), 6-4, 6-4 வீழ்த்தினார்.
- பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை 6-3, 6-4, 7-5 என வீழ்த்தினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் ஆஸ்திரேலியாவின் அலேக்ஸ் போல்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ரூட் 7(7)-6(2), 6-4, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
10-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் செர்பியாவின் துசன் லாஜோவிக்கை எதிர்கொண்டார். இதில் டிமிட்ரோவ் 6-3, 6-4, 7-5 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
5-ம் நிலை வீரரான மெட்வெதேவ் அமெரிக்காவின் கோவாசெவிக்கை எதிர்கொண்டார். இதில் மெட்வெதேவ் 6-3, 6-4, 6-2 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
- 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டி. யாஸ்ட்ரெம்ஸ்கா 6-1, 7(7)-6(1) என வெற்றி பெற்றார்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இன்று தொடங்கியது. பெண்களுக்கான ஒன்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி- அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் மோதினர். இதில் மரியா சக்காரி 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷிய வீராங்கனை வர்வரா கிராசெவா உக்ரைன் வீராங்கனையான லெசியா டிசுரேன்கோவை எதிர்கொண்டார். இதில் கிராசெவா 6-3, 6-1 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் 28-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் டி. யாஸ்ட்ரெம்ஸ்கா அர்ஜென்டினாவின் என். பொடோரோஷ்காவை எதிர்கொண்டார். இதில் யாஸ்ரெம்ஸ்கா 6-1, 7(7)-6(1) என வெற்றி பெற்றார்.
ஜெர்மனி வீராங்கனை பெல்ஜியம் வீராங்கனை ஜி. மின்னென், சீன வீராங்கனை லின் ஜு, ருமேனியா வீராங்கனை அன்கா டோடோனி, உக்ரைன வீராங்கனை கோஸ்ட்யுக், இத்தாலி வீராங்கனை ஜேஸ்மின் பயோலினியும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
- சச்சினின் தீவிர ரசிகரான சுதிர்குமார் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
- இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
உடல் முழுவதும் இந்திய அணியில் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் சச்சின் டெண்டுல்கர் என்று எழுதி கொண்டு, தேசிய கொடியை எந்தி செல்லும் சச்சினின் அதி தீவிர ரசிகர் சுதிர் குமார்.
இவர் தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார். சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார்.
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.
சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி வருகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.

இந்த நிலையில் சுதிர்குமார் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா அங்குள்ள கடற்கரையில் போட்டோஷீட் நடத்தினார். அப்போது உலகக் கோப்பையுடன் சுதிர்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் ரோகித் சர்மாவும் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
- ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது. இந்த இளம் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வீரர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டார்.
சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்த அணி தகுதி பெறத் தவறியதால், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸின் கீழ் மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில், ஜிம்பாப்வே ராசாவின் கீழ் ஒரு இளம் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.
ஜிம்பாப்வே அணி:
சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், கேம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளஸ்ஸிங், மியர்ஸ் டியான், நக்வி ஆன்டம், ங்கரவா ரிச்சர்ட், ஷும்பா மில்டன்.
- 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன்.
- ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம்.
தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற தேதி மற்றும் டி20 கோப்பையை பச்சைக் குத்தி கொள்ள போகிறேன் என சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் அதை முன்பே திட்டமிட்டு இருந்தேன். 2023 -ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றால் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இந்த முறை நாங்கள் அதை செய்து விட்டோம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு அருமையான தருணம். ஜூன் 29 எனது தங்கையின் பிறந்த நாள் வேறு. நான் தற்போது பச்சைக் குத்திக்கொள்வது அவருக்கும் ஒரு பிறந்த நாள் பரிசாக அமையும். அதோடு இந்த நாள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் என்றார்.
உலகக் கோப்பையை வென்றது எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும். இதைப் பற்றி சிந்திக்க எனக்கு சிறிது நேரம் உள்ளது. உலகக் கோப்பையை வென்ற நாளை நான் எனது நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்வேன்.
என்று கூறியுள்ளார்.
- மெக்லாலின்-லெவ்ரோன் ஐந்து முறை உலக சாதனைகளை படைத்துள்ளார்,
- ஷமியர் லிட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
ஒலிம்பிக் சாம்பியனான சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன், யூஜினில் நடந்த அமெரிக்க ட்ரையல்ஸ் போட்டியில் 50.65 வினாடிகளில் வென்று 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மற்றொரு உலக சாதனை படைத்தார்.
ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் நான்கு பெண்கள் 53 வினாடிகளுக்குள் முடித்ததன் மூலம், மெக்லாலின்-லெவ்ரோன் இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வினாடிகளில் வெற்றி பெற முடிந்தது. அன்னா காக்ரெல் தனிப்பட்ட சிறந்த 52.64 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் ஜாஸ்மின் ஜோன்ஸ் 52.77, 0.21 என்ற தனி சிறப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், ஷமியர் லிட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
மெக்லாலின்-லெவ்ரோன் ஐந்து முறை உலக சாதனைகளை படைத்துள்ளார், 24 வயதான அவர் 2021 இல் 51.90 உடன் உலக சாதனை படைத்தார். டோக்கியோவில் ஒலிம்பிக் பட்டத்தை வெல்வதற்காக அவர் தனது முந்தைய குறியிலிருந்து கிட்டத்தட்ட அரை வினாடியில் குறைத்து கொண்டு 51.46 என்ற வேகத்தில் சென்றார். ஒரு வருடம் கழித்து, 2022 ஆம் ஆண்டு ஓரிகானில் நடந்த உலக பட்டத்தை 50.68 இல் வெல்வதற்கு முன்பு, அவர் மீண்டும் 51.41 உடன் உலக சாதனை படைத்தார்.
வியத்தகு முறையில், அவரது ஐந்து உலக சாதனைகளில் நான்கு இப்போது ஓரிகானின் யூஜினில் உள்ள ஹேவர்ட் ஃபீல்டில் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
சென்னை:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜூன் 28-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா பொறுப்பாக ஆடி சதமடித்து அசத்தினர். ஷபாலி வர்மா-ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 292 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்மிர்தி மந்தனா 149 ரன் எடுத்து அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஷபாலி வர்மா இரட்டை சதம் அடித்து, 205 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்னும், ரிச்சா கோஷ் 86 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
இதனை தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 266 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சினே ரானா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதன்மூலம் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் சூன் லூஸ் சதமடித்து 109 ரன்னில் அவுட்டானார். லாரா வோல்வார்ட் 93 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தொடர்ந்து ஆடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வோல்வார்ட் 122 ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நாடின் டி கிளர்க் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 373 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 37 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இதனையடுத்து எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சுபா- ஷபாலி ஜோடி விக்கெட் இழப்பின்றி இலக்கை கடந்தது. இதனால் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக சினே ரானா தேர்வு செய்யப்பட்டார்.
- டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
- கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் புயல் எச்சரிக்கையின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரில் என்ற புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் மையம் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 80 மைல் தொலைவில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியா தற்போது ஹில்டன் ஹோட்டலில் தங்கியுள்ளது.
நிலைமை சரியானதும் இந்திய அணி தனி விமானம் மூலம் நாடு திரும்புவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணி ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாகவே புறப்பட்டது சென்றது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- இதனை தொடர்ந்து கோலி, ரோகித், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பை 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த தொடரில் தோல்வியே இல்லாமல் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் ஐசிசி-யின் அனைத்து கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி எல்லா ஐசிசி கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.
மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள்.
இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.
- இந்திய அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஐ.சி.சி.-இன் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
துபாய்:
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து கனவு அணியை அறிவித்துள்ளது.
இந்திய அணிக்காக கோப்பையை வென்ற ரோகித் சர்மா ஐ.சி.சி.-இன் கனவு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 6 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ஐ.சி.சி.-இன் கனவு அணி
ரோகித் (கேப்டன்), குர்பாஸ், நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரஷீத் கான், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் பரூக்கி. நோர்ஜே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
- ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
- கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது!
தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தனது பிறந்த நாள் அன்று தினேஷ் கார்த்திக் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லா வகையிலும் எங்கள் கீப்பரை வரவேற்கிறோம், தினேஷ் கார்த்திக், புதிய அவதாரத்தில் ஆர்சிபி-க்கு திரும்புகிறார். அவர் ஆர்சிபியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் ஆகிறார்.
கிரிக்கெட்டிலிருந்து மனிதனை வெளியேற்றலாம். ஆனால் மனிதனிடமிருந்து கிரிக்கெட் எடுக்க முடியாது! அவருக்கு முழு அன்பையும் பொழியுங்கள், 12வது மேன் ஆர்மி! என தெரிவித்துள்ளது.
Welcome our keeper in every sense, ?????? ???????, back into RCB in an all new avatar. DK will be the ??????? ????? ??? ?????? of RCB Men's team! ??
— Royal Challengers Bengaluru (@RCBTweets) July 1, 2024
You can take the man out of cricket but not cricket out of the man! ? Shower him with all the… pic.twitter.com/Cw5IcjhI0v
- ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது.
- போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.
கொலோன்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-சுலோவாக்கியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியது.
சுலோவாக்கியா அணிக்காக 25-வது நிமிடத்தில் இவான் ஷ்ரான்ஸ் கோல் அடித்தார். ஆட்டம் நிறைவடையும் தருவாயில் இங்கிலாந்துக்காக பெல்லிங்காம் கோல் அடித்தார். கடைசி நிமிட கோலால் இங்கிலாந்து தோல்வியில் இருந்து தப்பியது.
இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி கால்இறுதியில் சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த மற்றொரு 2-வது சுற்று போட்டியில் ஸ்பெயின்- ஜார்ஜியா அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
ஸ்பெயின் அணியில் ரோட்ரி (39-வது நிமிடம்), ரூயிஸ் (51), வில்லியம்ஸ் (75), ஒல்மோ(91) கோல் அடித்தனர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் நார்மென்ட் அடித்த சுயகோலால் ஜார்ஜியாவுக்கு ஒரு கோல் கிடைத்தது.
ஸ்பெயின் அணி கால் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் மோதுகிறது. இந்த போட்டி வருகிற 5-ந் தேதி இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.






