என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
    • பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் சதம் அடித்து அசத்தினார்.

    முல்தான்:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் முல்தானில் இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்- சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத் ஷபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    தொடக்கம் முதலே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட்டில் 4 ஆண்டுக்கு பிறகு முதல் சதத்தை மசூத் பதிவு செய்துள்ளார். கேப்டனாக தனது முதல் சதத்தையும் அவர் அடித்துள்ளார். டெஸ்ட்டில் மொத்தமாக 5 சதங்களை மசூத் அடித்துள்ளார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான விமர்சனங்களுக்கு தனது சதத்தின் மூலம் மசூத் பதிலடி கொடுத்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து மகளிர் அணி இந்தியா வரவுள்ளது.
    • 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர்.

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள் ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. நேற்று நடந்த 2 ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    20-ந் தேதியுடன் உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இதனையடுத்து அக்டோபர் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும். இந்த தொடர் 2022-25 ஐசிசி மகளிர் ஒருநாள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

    சாம்பியன்ஷிப் புள்ளிகள் வரிசையில் இருப்பதால், இரு அணிகளும் முழு பலத்துடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

    • இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா பணியாற்றி வந்தார்.
    • அவர் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு பிறகில் இருந்து தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூர்யா செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில் அவரேயே முழு நேர தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராக இருந்த போது இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

     

    இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 10 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

    இலங்கை அணி அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • தீபக் தலா 545 புள்ளிகளும், கமல்ஜீத் 543 புள்ளிகளும், ராஜ் சந்த்ரா 528 புள்ளிகள் பெற்றனர்.
    • அஜர்பைஜான் அணி 2-வது இடத்தையும், அர்மேனியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உலக ஜூனியர் சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 50 மீடட்ர் பிஸ்டல் அணிப்பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.

    தீபக் தலா 545 புள்ளிகளும், கமல்ஜீத் 543 புள்ளிகளும், ராஜ் சந்த்ரா 528 புள்ளிகள் பெற்றனர். மொத்தமாக இந்தியா 1616 புள்ளிகள் பெற்றது. அஜர்பைஜான் அணி 2-வது இடத்தையும், அர்மேனியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    இந்தியா மொத்தம் 13 தங்கம், மூன்று வெள்ளி, 8 வெண்கல பதக்கம் வென்ற முதல் இடம் பிடித்தது. இத்தாலி ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடம் பிடித்தது. நார்வே 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.

    தனிப்பிரிவில் முகேஷ் நெலாவல்லி வெண்கல பதக்கம் வென்றார். மொத்தம் அவர் ஆறு பதக்கங்கள் வென்று அசத்தினார். பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பரிஷா குப்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்றோடு மொத்தம் 5 போட்டிகளில் இந்திய அணியை சிக்ஸ் அடித்து பாண்ட்யா வெற்றி பெற வைத்துள்ளார்.
    • டி20-யில் 87 விக்கெட்டுகள் வீழ்த்தி அர்ஷ்தீப் சிங்கை முந்தியுள்ளார். சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதல் இடம்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 19.5 ஓவரில் 127 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் இந்தியா 11.5 ஓவரில் சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 16 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கீப்பருக்கு பின்னால் அடித்த ஷாட் குறித்து அனைவரும் பேசி வருகிறார்கள்.

    இதற்கிடையே ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இப்படி ஐந்தாவது முறையாக சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

    இதற்கு முன் டி20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 4 முறை இவ்வாறு செய்துள்ளார். தற்போது ஹர்திக் பாண்ட்யா 5-வது முறையாக வெற்றி பெற வைத்து முதல், இந்திய அணியை சிக்ஸ் அடித்து அதிகமுறை வெற்றி பெற வைத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    அத்துடன் ஒரு விக்கெட் வீழ்த்தியன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 87 விக்கெட்டுகள் வீழ்த்தி அர்ஷ்தீப் சிங்கை முந்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 86 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • ஐ.பி.எல். தொடரில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஈர்த்தார்.
    • சர்வதேச போட்டியில் அறிமுகமாகி முதல் ஓவரை மெய்டனாக வீசினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தவர். காயம் காரணமாக தொடர்ந்து அவரால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியவில்லை.

    காயம் சரியான நிலையில், தற்போது 4 மாதம் கழித்து நேரடியாக வங்கதேசம் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது, தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியது என்ன என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.

    இது தொடர்பாக மயங்க் யாதவ் கூறியதாவது:-

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது தொடர்பாக நான் உண்மையிலேயே உற்சாகமாக இருந்தேன். ஆனால் சற்று பதட்டம் இருந்தது. காயத்திற்குப் பிறகு நான் திரும்பிய தொடர் இதுவாகும். நான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. பின்னர் நேரடியாக இந்திய அணியில் அறிமுகம் ஆனேன். இதனால் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

    காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான காலம் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த 4 மாதங்களில் ஏராளமான ஏற்றம் மற்றும் இறக்கம் இருந்தது. ஆனால், என்னைவிட, என்னோடு பணியாற்றியவர்களுக்கு கடினமான காலகமாக இருந்தது.

    இன்று (போட்டி நடைபெற்ற நேற்று) நான் என்னுடைய உடலில் கவனம் செலுத்தினேர். மேலும், வேகமாக பந்து வீசுவதை விட சரியான (துல்லியமான) லெந்தில் பந்து வீச தீர்மானித்தேன். என்னுடைய வேகம் குறித்து சிந்திக்கவில்லை. முடிந்த அளவு ரன் செல்வதை தடுத்து, சரியான லைன், லெந்தில் பந்து வீச முயற்சி செய்தேன்.

    தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தன்னிடம் கூடுதலாக எதையும் பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுடைய அடிப்படையான விசயத்தில் உறுதியாக இருந்து அதை செய்யவும் என்றார். கடந்த காலத்தில் எனக்கு நேர்மறையான முடிவு தந்ததை செய்யவும் என்றார். வித்தியாசமான விசயத்தை யோசிக்க முயற்சிக்க வேண்டாம். இது சர்வதேச போட்டி என்று கூட நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றார். இதை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு மயங்க் யாதவ் தெரிவித்தார்.

    • முதலில் விளையாடி கயானா 138 ரன்களே சேர்த்தது.
    • செயின்ட் லூசியா 18.1 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதிப் போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்றது. இதில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ்- இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய கயானா அணியால் 20 ஓவரில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அநத அணியின் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 22 ரன்களும், பிரிட்டோரியஸ் 25 ரன்களும் சேரத்தனர். செயின்ட் லூசியா அணி சார்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

    பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களம் இறங்கியது. ராஸ்டன் சேஸ் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், ஆரோன் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 48 ரன்களும் விளாச செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. டு பிளிஸ்சிஸ் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த வெற்றியின் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

    • ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
    • மார்ட்டின் கப்தில் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய வங்கதேசம் 127 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 128 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. சஞ்சு சாம்சன் 19 பந்தில் 29 ரன்கள், அபிஷேக் சர்மா 7 பந்தில் 16 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 14 பந்தில் 29 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 16 பந்தில் 39 ரன்கள் அடிக்க 11.5 ஓவரிலேயே இந்தியா வெற்றி பெற்றது.

    சூர்யகுமாயர் யாதவ் ஸ்கோரில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும். 3 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த முதல் ஐந்து பேர் பட்டியலில் நுழைந்துள்ளார். இந்த மூன்று சிக்சர்களுடன் 139 சிக்சர்கள் அடித்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஜோஸ் பட்லர் 137 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ரோகித் சர்மா 205 சிக்சர்களுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார் மார்ட்டின் கப்தில் 173 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், நிக்கோலஸ் பூரன் 144 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    • துபாய் அல்லது சவுதி அரேபியாவில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு.
    • அதிகாரப்பூர்வமாக இதுவரை ஏலம் நடைபெறும் இடத்தை தேர்வு செய்யவில்லை.

    உலகின் மிகப்பெரிய பணக்கார டி20 லீக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) திகழ்ந்து வருகிறது. 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது.

    மெகா ஏலத்தை பொதுவமாக வெளிநாடுகளில் நடத்த பி.சி.சி.ஐ. விரும்புகிறது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்றது. இந்த வருடம் லண்டன் (இங்கிலாந்து), துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகிய மூன்று இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. முடிவு செய்தது.

    நவம்பர் மாதம் இறுதியில் மெகா ஏலம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் மாதம் லண்டனில் (இங்கிலாந்து) குளிர்காலம் என்பதால் அதை பி.சி.சி.ஐ. விரும்பவில்லை.

    துபாய் அல்லது சவுதி அரேபியா ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். துபாயை விட சவுதி அரேபியாவில் செலவு அதிகம் எனக் கூறப்படுகிறது. 10 அணிகளும் ஒரு குழுவுடன் செல்லும். அவர்களுக்கு ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் செய்து கொடுக்க வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

    மீண்டும் துபாயில் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த இடம் என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

    ஒவ்வொரு அணிகளும் அதிகபட்சம் ஆறு வீரர்களை (Right-To-Match option- உடன்) தக்கவைத்துக் கொள்ள முடியும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. முதல் வீரரை 18 கோடி ரூபாய்க்கும், 2-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கும், 3-வது வீரருக்கு 11 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்துக் கொள்ள முடியும். 4-வது வீரரை 18 கோடி ரூபாய்க்கு உள்ளேயும், 5-வது வீரரை 14 கோடி ரூபாய்க்கு உள்ளேயும் தக்கவைத்துக் கொள்ள முடியும். uncapped வீரரை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொள்ளலாம்.

    • சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது.
    • இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    பீஜிங்:

    பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலோனி, சாரா எர்ரானி ஜோடி-தைவானின் சான் ஹாவ் சிங், ரஷியாவின் வெரோனிகா ஜோடியுடன் மோதியது.

    இதில் இத்தாலி ஜோடி 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    சீனா ஓபன் தொடரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் பெறுவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் நடந்தது.
    • இதில் இந்தியா வெற்றி பெற்றதுடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    போபால்:

    இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது. முதலில் ஆடிய வங்கதேசம் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    தொடர்ந்து ஆடிய இந்தியா 11.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது அர்ஷ்தீப் சிங்குக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிரணியை அதிக முறை ஆல் அவுட் ஆக்கிய அணி என்ற பாகிஸ்தான் அணியின் சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 கிரிக்கெட்டில் 42 முறை எதிரணியை ஆல் அவுட்டாக்கி உள்ளது. இந்தப் பட்டியலில் நியூசிலாந்து 3வது இடத்தில் உள்ளது.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீரர் சின்னர் வெற்றி பெற்றார்.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அர்ஜென்டினா வீரர் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என இழந்த சின்னர், அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் வு யீபிங்குடன் மோதினார். இதில் அல்காரஸ் 7-6 (7-5), 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×