என் மலர்
நீங்கள் தேடியது "Sanath Jayasuriya"
- ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது.
- ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர்.
ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் தனது 50-வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது உள்ள விதிமுறை அப்போது இருந்திருந்தால் சச்சின் டெண்டுலகரின் சதங்கள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருக்கும் என இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள் கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது. ஒருநாள் போட்டியில் இரண்டு புதிய பந்து பயன் படுத்துகின்றனர். இதனால் 30 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் சுவிங் ஆவதில்லை. மேலும் பவர்பிளேயில் புதிய விதிமுறை பின்பற்றபடுகிறது. ஐசிசி-யின் தற்போதைய விதிமுறை அப்போது இருந்திருந்தால் அந்த காலத்தில் சச்சினின் ரன்களும், சதங்களும் இருமடங்காக உயர்ந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.
இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.
இலங்கை சார்பில் அதிரடியாக ஆடிய பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமையை நிசங்கா பெற்றிருக்கிறார். இவருடன் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னான்டோ 88 ரன்களையும் குவித்தார். அடுத்து வந்த குசல் மென்டிஸ் 16 ரன்களையும் சதீரா சமரவிக்ரமா 45 ரன்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிசங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் சனத் ஜெயசூர்யா சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 189 ரன்களை குவித்ததே ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
- ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 2-3 மணி நேரம் பேட்டிங் பயிற்சியை செய்தனர்.
- நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தி தொடரை வென்றுவிட்டோம்.
இலங்கை- இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு) பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இந்நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடும் பார்த்திருக்கும் என இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
27 ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அணியின் ஒரு அங்கமாக இருக்கிறேன். இந்த சிறுவர்களின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் மற்றும் திறமையானவர்கள், நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை முழு நாடும் பார்த்திருக்கும்.
இத்தொடருக்கு முன்னதாக நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஜூபினை வரவழைத்து, அவருடன் இணைந்து ஏழு நாள் பயிற்சி திட்டத்தை தயார் செய்தோம். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். அதில் நீண்ட இன்னிங்ஸை எப்படி விளையாடுவது போன்றவற்றை கற்றுக்கொண்டோம்.
அதன்படி எங்கள் அணியின் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 2-3 மணி நேரம் பேட்டிங் பயிற்சியை செய்தனர். இது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்தது. இதுபோன்ற போட்டியில் வீரர்களுக்கு நம்பிக்கை மட்டுமே தேவை. அதன்படி போட்டியின் போது சிலர் நன்றாக பேட்டிங் செய்து ரன்களைச் சேர்த்தனர். சில பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தியது என அனைவ்ரும் ஒரு அணியாக செயல்பட்டது வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
இதன்மூலம் நாள் முடிவில் நாங்கள் உலகின் நம்பர் 1 அணியை வீழ்த்தி தொடரை வென்றுவிட்டோம். இலங்கை கிரிக்கெட் அணியானது தற்சமயம் புதிய பயிற்சியாளரைத் தேடிவருகிறது. நான் இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் மட்டுமே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் அவர்கள் அணியின் முழுநேர பயிற்சியாளரை தேடிவருகின்றனர். நான் அவர்களுக்கான தற்காலிக பொறுப்பாளராக மட்டுமே இருக்கிறேன்.
ஆனாலும் நான் இலங்கை கிரிக்கெட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் என்னுடன் இணைந்து பணியாற்றும் உதவியாளர்கள் மற்றும் அணி வீரர்களுக்கு முடிந்த அனைத்தையும் செய்துவரும் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். மேலும், இந்த இளைஞர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்து வெற்றிப் பயணத்தை தொடர நல்ல பயிற்சியாளரை அவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.
என்று ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
- இலங்கை அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஜெயசூர்யா பணியாற்றி வந்தார்.
- அவர் பயிற்சியின் கீழ் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கை அணி டி20 உலகக் கோப்பைக்கு பிறகில் இருந்து தலைமை பயிற்சியாளர் இல்லாமல் விளையாடி வந்தது. இதனால் தற்காலிக பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூர்யா செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவரேயே முழு நேர தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராக இருந்த போது இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

இலங்கை அணி 27 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து 10 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி அக்டோபர் 13-ந் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இருந்து ஜெயசூர்யா புதிய பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை வரை இவர் பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
- 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார்.
- அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அந்த வகையில், 2024-ம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ், பாகிஸ்தானின் சைம் அயூப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதில் 2024-ம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரர் விருதை இலங்கை பேட்ஸ்மேன் கமிந்து மென்டிஸ் தட்டி சென்றார். அந்த விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யாவிடம் இருந்து பெற்று கொண்டார்.
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டதில் இருந்து இலங்கை அணி பல தொடர்களை வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முக்கிய காரணம் தொடக்க வீரர் சனத் ஜெயசூர்யாதான். அப்போது முதல் 15 ஓவர் ‘பவர்பிளே’ என்று அழைக்கப்படும். இந்த 15 ஓவருக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே பவர்பிளே-யின் உள்வட்டத்திற்கு வெளியே நிற்க முடியும். இந்த ஓவர்களில் சனத் ஜெயசூர்யா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை முதல் 15 ஓவரிலேயே பெரும்பாலான போட்டிகளில் 100 ரன்னைத் தாண்டியது.
அதன்பிறகுதான் தொடக்க பேட்ஸ்மேன்கள் அதிரடி பேட்ஸ்மேன்களாக மாறினார்கள். பவர்பிளே என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று நினைவுக்கு வருவது சனத் ஜெயசூர்யதான்.
49 வயதாகும் இவர் கனடாவில் நடந்த கார் விபத்தில் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் செய்தி பரவியது. இது கிரிக்கெட் வீரர்களை கவலைக்குள்ளாக்கிறது.
பின்னர் இந்த செய்தி வதந்தி எனத் தெரியவந்தது. இந்நிலையில் அஸ்வின் இந்த வதந்தி செய்தி குறித்து மிகவும் கவலையடைந்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘இந்த செய்தி உண்மையா? எனக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் வந்தது. ஆனால், ட்விட்டரில் இதுபோன்ற செய்தியை பார்க்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார். பின்னர் அஸ்வினுக்கு ஒருவர் அது வதந்தி என பதில் அளித்துள்ளார்.
‘‘எனது உடல் ஆரோக்கியம் குறித்து சில வலைத்தளங்கள் பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன. கார் விபத்தில் நான் இறந்து விட்டதாக கூறப்படும் செய்தியை புறக்கணியுங்கள். நான் கனடாவுக்கு செல்லவில்லை. இலங்கையில்தான் இருக்கிறேன்’’ என்று ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.
Is the news on Sanath Jayasuriya true?? I got a news update on what's app but see nothing here on Twitter!!
— Ashwin Ravichandran (@ashwinravi99) May 27, 2019






