என் மலர்
விளையாட்டு

உலக ஜூனியர் துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய ஆண்கள் அணிக்கு தங்கம்
- தீபக் தலா 545 புள்ளிகளும், கமல்ஜீத் 543 புள்ளிகளும், ராஜ் சந்த்ரா 528 புள்ளிகள் பெற்றனர்.
- அஜர்பைஜான் அணி 2-வது இடத்தையும், அர்மேனியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உலக ஜூனியர் சூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 50 மீடட்ர் பிஸ்டல் அணிப்பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
தீபக் தலா 545 புள்ளிகளும், கமல்ஜீத் 543 புள்ளிகளும், ராஜ் சந்த்ரா 528 புள்ளிகள் பெற்றனர். மொத்தமாக இந்தியா 1616 புள்ளிகள் பெற்றது. அஜர்பைஜான் அணி 2-வது இடத்தையும், அர்மேனியா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்தியா மொத்தம் 13 தங்கம், மூன்று வெள்ளி, 8 வெண்கல பதக்கம் வென்ற முதல் இடம் பிடித்தது. இத்தாலி ஐந்து தங்கம், நான்கு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 2-வது இடம் பிடித்தது. நார்வே 4 தங்கம் உள்பட 10 பதக்கங்களுடன் 3-வது இடம் பிடித்துள்ளது.
தனிப்பிரிவில் முகேஷ் நெலாவல்லி வெண்கல பதக்கம் வென்றார். மொத்தம் அவர் ஆறு பதக்கங்கள் வென்று அசத்தினார். பெண்களுக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பரிஷா குப்தா வெள்ளிப் பதக்கம் வென்றார்.






