என் மலர்
விளையாட்டு
- இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் டக் அவுட்டில் வெளியேறினார்.
- மற்றொரு தொடக்க வீரர் சாக் கிராலி அரை சதம் விளாசினார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடியது. ஷபீக் மற்றும் கேப்டன் மசூத் சதம் விளாசி ஆட்டமிழந்தனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. மற்ற வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக சாக் கிராலி- ஒல்லி போப் களமிறங்கினர். கேப்டன் போப் டக் அவுட்டில் வெளியேறினார். இதனையடுத்து கிராலியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கிராலி அரை சதம் விளாசினார்.
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. கிராலி 64 ரன்னுடனும் ரூட் 32 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
- இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும்.
- இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.
புதுடெல்லி:
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. முதல் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம்பலத்துடன் திகழ்கிறது. குவாலியர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கிலும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.
நாளைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. 11 பேர் கொண்ட அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு (வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்) வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதே நிலை நாளையும் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். ஏற்கனவே அந்த அணி டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இரு அணிகளும் நாளை மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இந்தியா -வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நாளை நடக்கிறது.
- இந்த டி20 தொடரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து மஹ்முதுல்லா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 போட்டி கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருடன் வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் மஹ்முதுல்லா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் டுமினி பீல்டராக களமிறங்கினார்.
தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் லிசாட் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. அயர்லாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் நேற்று போட்டி நடைபெற்ற சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரும்பாலான வீரர்கள் சோர்வடைந்து பெவிலியன் திரும்பினர்.
இதன் காரணமாக பயிற்சியாளரான டுமினி களத்தில் இறங்கி ஃபீல்டிங் செய்ததுடன், பவுண்டரியும் தடுத்து அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் தரப்பில் ஷபீக், மசூத், சல்மான் ஆகியோர் சதம் விளாசினர்.
- இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்- சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஷபீக் 102 ரன்களுடன் கேப்டன் மசூத் 151 ரன்னிலும் வெளியேறினர். இதனையடுத்து சிறப்பாக விளையாடி வந்த பாபர் அசாம் முதல் நாள் ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில் 30 ரன்களில் வெளியேறினார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சகீல் அரை சதம் விளாசினார். 33 ரன்களில் நசீம் ஷா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஸ்வான் 0 ரன்னில் நடையை கட்டினார். சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சகீல் 87 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த அமீர் ஜமால் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகா சல்மான் சதம் விளாசினார். இவருக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்த அப்ரிடி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அகமது 3 ரன்னில் வெளியேறினார். இதனால் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் தரப்பில் ஷபீக், மசூத், சல்மான் ஆகியோர் சதம் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஜக் லீச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
- முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை:
மும்பை - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி லக்னோவில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சர்பராஸ் கான் 222 ரன் எடுத்தார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 121 ரன் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய மும்பை அணி 5-வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த மும்பை அணி இரானி கோப்பையை வென்றது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணி இரானி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், 27 ஆண்டுக்கு பிறகு இரானி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்த மும்பை அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
- இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி டெல்லியில் நாளை நடைபெறுகிறது.
- இதற்காக சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி டெல்லி சென்றது.
புதுடெல்லி:
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் நாளை ( 9-ந் தேதி) நடக்கிறது. இதற்காக இந்திய அணி டெல்லி சென்றது. அங்கு அவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு நடைப்பெற்றது. இதை பார்த்த சூர்யகுமார் குத்தாட்டம் போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 5 வீரரான மெத்வதேவ் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
பீஜிங்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரான்சின் அலெக்சாண்டர் முல்லர் உடன் மோதினார். இதில் சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 5 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டு உடன் மோதினார்.
இதில் மெத்வதேவ் 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கைப்பற்றி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார்.
- தென்ஆப்பிரிக்காவின் ஜேசன் ஸ்மித் 91 ரன்கள் அடித்து போராடியது வீண் ஆனது.
தென்ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முடிவடைந்த முதல் இரண்டு போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் அபுதாபியில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பால்பிரைன் 45 ரன்களும், பால் ஸ்டிர்லிங் 88 ரன்களும் விளாசினார். ஹாரி டெக்டர் 48 பந்தில் 60 ரன்கள் சேர்த்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் லிசாட் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. முதல் மூன்று வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 4 ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 1 ரன்னிலும், வான் டெர் டுஸ்சன் 3 ரன்னிலும் வெளியேறினார்.

பால் ஸ்டிர்லிங்
அதன்பின் தென்ஆப்பிரிக்கா அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. ஜேசன் ஸ்மித் மட்டும் தாக்குப்பிடித்து விளைாடினார். அவர் 93 பந்தில் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா 46.1 ஓவரில் 215 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் அயர்லாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் கிரஹாம் ஹும், கிரேக் யங் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 88 ரன்கள் அடித்த பால் ஸ்டிர்லிங் ஆட்ட நாயகன் விருது வென்றார். தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருது வென்றார்.
இதற்கு முன்னதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றது. மொத்தமாக ஐந்து போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர்.
- லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி வீராங்கனைகள் அதிரடியாக ஆடினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.2ஓவரில் 3 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார்.
- இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டாஸ்மின் பிரிட்ஸ் 13 ரன்னிலும், அடுத்து வந்த அன்னேக் போஷ் 18 ரன்னிலும், மரிசான் கேப் 26 ரன்னிலும், சோலி ட்ரையான் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.
சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய லாரா வோல்வார்ட் 42 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அன்னரி டெர்க்சன் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் கம்பீர் பயிற்சியாளராக வந்துள்ளதால் கம்’பால் என்றழைத்தனர்.
- கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2- 0 (2) என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த தொடரில் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 2 நாட்கள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதனால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த போட்டியில் கடைசி 2 நாட்களில் வங்கதேதத்தை அடித்து நொறுக்கி இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது.
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த இந்தியா 5 உலக சாதனைகளையும் படைத்தது. அப்போது தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை காப்பி அடித்து இந்தியா விளையாடி வெற்றி கண்டதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பெருமை பேசினார்.
இருப்பினும் கம்பீர் தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் இந்த அணுகுமுறைக்கு பெயர் கம்'பால் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறினார். அதே போல இந்தியாவின் புதிய அணுகு முறையை கம்'பால் என்று ரசிகர்கள் அழைப்பதை சமூக வலைதளங்களில் பார்த்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.
இந்நிலையில் 2023 உலகக் கோப்பை முதல் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா அதிரடியாக விளையாடும் அணுகுமுறைக்கு "கோஹிட்" என்பதே சரியான பெயர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு செய்தித்தாள் இந்திய பேட்டிங்கை பாஸ்பால் என்றழைத்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த சிலர் கம்பீர் பயிற்சியாளராக வந்துள்ளதால் கம்'பால் என்றழைத்தனர். பென் ஸ்டோக்ஸ் - ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இங்கிலாந்தின் அணுகுமுறை முழுமையாக மாறியது.
ஆனால் ரோகித் சர்மா தலைமையில் கடந்த சில வருடங்களாகவே நம்முடைய இந்திய அணி அதிரடியாக விளையாடுவதை பார்த்து வருகிறோம். கம்பீர் இரண்டு மாதங்கள் மட்டுமே பயிற்சியாளராக இருந்து வருகிறார். எனவே இந்த அணுகுமுறைக்கு அவர்தான் காரணம் என்று காட்டுவது மிகவும் உயர்ந்த தரத்தின் கால் நக்கலாகும்.
உண்மையில் மெக்கல்லம் போல கம்பீர் இந்த பாணியில் பேட்டிங் செய்ததில்லை. ரோகித் மட்டுமே தொடர்ந்து அவ்வாறு செய்தார். எனவே இந்த பால், அந்த பால் என்று சொல்வதற்கு பதிலாக ரோகித் சர்மா பெயரின் முதல் பகுதியை வைத்து "கோஹிட்" என்று இதை சொல்லலாம். பஸ்பால் என்றழைக்கும் சோம்பேறி விருப்பத்தை விட புத்திசாலித்தனமான இந்த நாகரீக பெயரை கொண்டு அழைக்கலாம்.
என்று சுனில் கவாஸ்கர் கூறினார்.






