என் மலர்
விளையாட்டு
- நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங் அரை சதம் விளாசினர்.
- வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் 10, அபிஷேக் சர்மா 15, சூர்யகுமார் யாதவ் 8 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனையடுத்து நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதலில் நிதாமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் போக போக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து தன் பங்குக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு 29 பந்தில் 53 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இறுதியில் ஹர்திக் பாண்ட்யா- பராக் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 176 ரன்னிலும், ஹாரி புரூக் 141 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
- பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, அமீர் ஜாமல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
முல்தான்:
பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 556 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷபீக் 102 ரன், ஷான் மசூத் 151 ரன், ஆகா சல்மான் 104 ரன் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 20 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 96 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக் க்ராவ்லி 64 ரன்னுடனும், ஜோ ரூட் 32 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.
இதில் இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இதில் க்ராவ்லி 78 ரன்னிலும், அடுத்து வந்த பென் டக்கட் அரைசதம் அடித்த நிலையில் 84 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ரூட் உடன், ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாக ஆடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். இந்த இணையை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் திணறினர். இறுதியில் 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 101 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 492 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 176 ரன், ஹாரி புரூக் 141 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, அமீர் ஜாமல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.
- ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னும் லாரா வோல்வார்ட் 40 ரன்களும் எடுத்தனர். நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.
இதனையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி 17.5 ஓவரில் 86 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம்.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- டெல்லி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இங்கு நடந்த 10 இன்னிங்சில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது. இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இங்கு நடந்த 10 இன்னிங்சில் 8 முறை 200 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அதனால் ரன்ஜாலத்தை எதிர்பார்க்கலாம்.
இந்த மைதானத்தில் இந்திய அணி 3 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் வெற்றியும் (நியூசிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) கண்டுள்ளது.
- டி20 பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆடவர்களுக்கான தரவரிசையை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. அதன்படி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் விராட் கோலி, ஜெய்ஸ்வால் முன்னேற்றம் கண்டனர். ரோகித், ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோர் பின்னடைவை சந்தித்தனர்.
விராட் கோலி 6 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும் ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் 15,16-வது இடங்கள் முறையே ரோகித், சுப்மன் கில் உள்ளனர். ஒருநாள் மற்றும் டி20யில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்த தமிழக வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பிடித்துள்ளார். வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் 4 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை பிடித்துள்ளார். டி20 பந்து வீச்சாளர்கள தரவரிசையில் 8 இடங்கள் முன்னேறி அர்ஷ்தீப் சிங் 8-வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஆல்ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா 4 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்கா கேப்டன் லாரா அதிரடியாக விளையாடி 40 ரன்கள் குவித்தார்.
- நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோர் இதுவாகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீராங்கனைகளாக லாரா வோல்வார்ட்- டாஸ்மின் பிரிட்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். கேப்டன் லாரா 27 பந்தில் 40 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த அன்னேக் போஷ் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட டாஸ்மின் பிரிட்ஸ் 43 ரன்னில் வெளியேறினார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் நடப்பு டி20 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் அதிக பட்ச ஸ்கோராகும்.
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் 150 ரன்களை கடந்து ஆடி வருகிறார்.
- ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட். இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார்.
ரூட் இப்போட்டியில் 71 ரன்களை அடித்தபோது அலஸ்டர் குக்கை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அலாஸ்டர் குக் 161 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் அடித்துள்ளார். ஜோ ரூ தனது 147 ஆவது டெஸ்ட் போட்டியில் 12,554* ரன்கள் அடித்துள்ளார்.
முன்னதாக ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:
சச்சின் டெண்டுல்கர்: போட்டிகள்: 200 | ரன்கள்: 15,921 | சதம்: 51 | சராசரி: 53.78
ரிக்கி பாண்டிங்: போட்டிகள்: 168 | ரன்கள்: 13,378 | சதம்: 41 | சராசரி: 51.85
ஜாக் காலிஸ்: போட்டிகள்: 166 | ரன்கள்: 13,289 | சதம்: 45 | சராசரி: 55.37
ராகுல் டிராவிட்: போட்டிகள்: 164 | ரன்கள்: 13,288 | சதம்: 36 | சராசரி: 52.31
ஜோ ரூட்: போட்டிகள்: 147* | ரன்கள்: 12,473 | சதம்: 34 | சராசரி: 50.91
அலஸ்டர் குக்: போட்டிகள்: 161 | ரன்கள்: 12,472 | சதம்: 33 | சராசரி: 45.35
- 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
- இப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைடுத்து ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ், போர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 ஆவது ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்தார்.
5 ஆவது ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்று இன்றோடு 500 நாட்கள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஐபிஎல் இறுதிப்போட்டியில் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்துவிட்டு ஜடேஜா கொண்டாடும் புகைப்படத்தைப் சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
- விதிமுறைக்கு மாறாக இந்திய வீரர் நிஹல் காய்கள் நகர்த்தியதாக புகார்.
- விசாரணைக்குழு குற்றச்சாட்டை நிராகரித்து முடிவை மாற்ற மறுத்து விட்டது.
குளோபல் செஸ் லீக் போட்டியில் ஐநது முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேக்னஸ் கார்சல் அணியான ஆல்பின் எஸ்.ஜி. பைப்பர்ஸ் அணியில் டேனியல் தர்தா (Daniel Dardha) இடம் பிடித்திருந்தார். இவர் இந்திய வீரர் நிஹல் சரினை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியின்போது நிஹல் சரின் பலமுறை விதிமுறைக்கு மாறாக காய்களை நகர்த்தியதாக மேக்னஸ் கார்ல்சன் குற்றம்சாட்டியிருந்தார். அவரது அணியின் கேப்டன் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக தொடரின் மூன்று பேர் கொண்ட அப்பீல் கமிட்டி விசாரணை மேற்கொண்டது. அப்போது நிஹல் சரின் விளையாட்டு விதிமுறைக்கு மாறாக காய் நகர்த்தல் ஏதும் செய்யவில்லை. இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த முடிவு உறுதியானது எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இந்த போட்டியின்போது ஒருவேளை விதிமுறையை மீறும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தள்ளது. நடுவர் தலையிட்டிருக்க வேண்டும் எனவும் அந்த கமிட்டி தெரிவித்துள்ளது.
விளையாட்டின்போது வீரர்கள் சதுரங்கத்திற்குள் காய்களை விட அனுமதி கிடையாது. ஆனால் ஹரின் சதுரங்கத்திற்குள் காய்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டினார்.
இதில் விதிமுறை மீறல் நகர்த்தல் ஏதும் இல்லை. ஆனால், காய்களை சதுரங்கத்தில் விட்டுவிட்டு, நேரத்திற்கான பட்டனை அழுத்த்திய போது விதிமுறை மீறல் தூண்டுதலை பெற்றிருக்கிலாம். போட்டியின்போது நடுவர் தலையிட்டியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக கார்ல்சென் தனது எக்ஸ் பக்கத்தில் "நிஹல் பல விதிமுறை மீறல் நகர்த்தலை மேற்கொண்டார். நடுவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிர விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதது துரதிருஷ்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பைப்பர்ஸ் அணியின் கேப்டன் பிரவின் திப்சே அதிகாரப்பூர்வமாக புகார் அளித்திருந்தார்.
ஒட்டுமொத்தமாக பிபிஜி (PBG) அலாஸ்கன் நைட்ஸ் அணி 9-7 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
- ஐ.சி.சி. சாம்பியன்ஷிப்பில் டெஸ்டில் 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை.
- சச்சின் தெண்டுல்கர் சாதனையை நெருங்குகிறார்.
இங்கிலாந்து கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ஜோ ரூட். இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறது. டெஸ்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள்ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 27 ரன்களை தொட்டபோது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமைய பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே 2015, 2016, 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் ஒரு வருடத்தில் ஆயிரம் ரன்களை அதிகமுறை கடந்த சச்சின் தெண்டுல்கர் சாதனையையும் நெருங்கி வருகிறார். சச்சின் தெண்டுல்கர் ஆறு முறை ஆயிரம் ரன்களை தாண்டியுள்ளார்.
- நியூசிலாந்து அணிக்கெதிரான 3 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்.
- மொத்தமாக இதுவரை 46 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பெண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 148 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஸ்கட் 3.2 ஓவர்கள் வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன்மூலம் அவர் டி20 உலகக் கோப்பையில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பெண்கள் டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் ஷப்னின் இஸ்மாயில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் அன்யா ஷ்ருப்சோல் 41 விக்கெட்டும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 40 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளன.
மேகன் ஸ்கட் 26 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்தின் முதல் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சாதனைப் படைத்தார்.






