என் மலர்
விளையாட்டு
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- இதில் உ.பி.யோதாஸ் அணி தோற்று வெளியேறியது.
புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
நேற்று நடந்த பிளே ஆப் ஆட்டங்களில் உ.பி.யோதாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி.யோதாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அரியானா அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி. யோதாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- கோலி- ஜெய்ஸ்வால் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
- 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
மெல்போர்ன்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் தடுமாறி வருகிறது.
இதில் 51 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஜெய்ஸ்வால் - விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தனர். 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. 82 ரன்கள் அடித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் இந்த ரன் அவுட்டுக்கு விராட் கோலிதான் காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சித்தார். அதை மற்றொரு இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மஞ்ரேக்கர் - இர்பான் பதான் இடையேயான உரையாடல் பின்வருமாறு:-
மஞ்ரேக்கர்:
இந்த தருணத்தை நாம் விராட் கோலியின் பக்கத்திலிருந்து கொஞ்சம் பார்க்க வேண்டும். அங்கே பந்தை மட்டும் பார்த்து ரன் இல்லை என்று விராட் கோலி சொன்னது பள்ளி வயது சிறுவனை போல் செய்த தவறாகும். பொதுவாக ரன்கள் எடுப்பதற்கு எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் அழைப்பை கொடுக்க வேண்டும். ஆனால் விராட் கோலி வேண்டாம் என்று சொன்னதால் ஜெய்ஸ்வாலுக்கு அங்கே வாய்ப்பு இல்லை.
பதான்:
கிரிக்கெட்டில் பந்து பாய்ண்ட் திசைக்கு அடிக்கப்பட்டால் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்தான் ரன் எடுப்பதற்கான அழைப்பை கொடுக்க வேண்டும் என்ற இன்னொரு உண்மை. அதை நிராகரிக்க ஸ்ட்ரைக்கர் பேட்ஸ்மேனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. சில நேரங்களில் வேண்டாம் என்றும் சொல்லலாம்.
மஞ்ரேக்கர்:
ஆனால் இர்பான் நீங்கள் இதைக் கேட்க விரும்பவில்லையெனில் வேறு எதுவுமில்லை. இர்பான் பதான் என்ற பெயரில் ரன்கள் எடுக்க எப்படி ஓடுவது என்ற புதிய பயிற்சி கையேடு வெளியிடப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர்களுக்கிடையேயான வாக்குவாதம் அமைந்தது.
- பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
- டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்ற நிலையில் பாரிஸில் ஏழு பதக்கங்கள் அதிகம்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 பதக்கங்கள் மட்டுமே வென்றது. டோக்கியோவில் ஒரு தங்கத்துடன் 7 பதக்கம் வென்ற நிலையில், பாரிஸில் ஒரு வெள்ளியுடன் 6 பதக்கமாக குறைந்தது.
அதேவேளையில் பாரா ஒலிம்பிக்கில் டோக்கியோவில் பெற்ற பதக்கங்களை விட ஏழு பதக்கங்கள் அதிகமாக பெற்று 29 பதக்கங்கள் வென்றது. அத்துடன் புள்ளிகள் பட்டியலில் 18-வது இடத்தை பிடித்தது.
அவானி லெகானா, மோனா அகர்வால் ஆகியோர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் முறையே தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றனர். லெகானா அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் முதல் நாள் தங்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
மணிஷ் நர்வால் ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டர் (எஸ்.ஹெச்.1) பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100மீ T35 பிரிவில் பிரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றார். பின்னர் 200 மீட்டர் போட்டியிலும் வெண்கபல பதக்கம் வென்றார்.
5-வது நாளில் மட்டும் 8 பதக்கம் வென்றது இந்தியா. இந்த 8-ல் ஐந்து பதக்கங்கள் பேட்மிண்டனில் வந்தது. நிதிஷ் குமார் தங்கம் வென்றார். சுஹாஸ் யதிராஜ், துலசி முருகேசன் வெள்ளி வென்றனர்.
ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப்பதக்கம் வென்றார். ஹர்விந்தர் சிங் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று, சாதனைப் படைத்தார். வில்வித்தையில் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆண்களுக்கான கிளப் த்ரோ F51 பிரிவில் தரம்பிர் நைன் மற்றும் பிரனவ் சூர்மா முறை தங்கம், வெள்ளி வென்றனர்.
ஜூடோவில் ஆண்களுக்கான 60 கிலோ J1 பிரிவில் கபில் பர்மார் வெண்கல பதக்கம் வென்றார். ஜூடோவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஈட்டி எறிதல் போட்டியில் நவ்தீப் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். பின்னர் ஈரான் வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட வெள்ளி தங்க பதக்கம் ஆனது. இதனால் இந்தியா 29 பதக்கங்கள் வென்றது.
- கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 54 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமர் ஜமால் 28 ரன்களும், முகமது ரிஸ்வான் 27 ரன்களும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டேன் பீட்டர்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கார்பின் போஸ்ச் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக மார்க்ரம் டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். டோனி டி ஜோர்ஜி 2, ரிக்கல்டன் 8, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 9 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக ஆடிய மார்க்ரம் அரை சதம் விளாசினர்.
அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சிறப்பாக ஆடிய மார்க்ரம் 89 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 301 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 91 ரன்கள் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் ஷாஜாத், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ஜிம்பாப்வே அணியில் வில்லியம்ஸ், எர்வின், பென்னட் ஆகியோர் சதம் விளாசினர்.
- ஜிம்பாப்வே அணியின் அதிகபட்ச ஸ்கோர் (586) இதுவாகும்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் எடுத்தது. சீன் வில்லியம்ஸ் 145 ரன்னும், எர்வின் 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனையடுத்து 2-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து ஆடிய வில்லியம்ஸ் 154 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய எர்வின் 104 ரன்னில் வெளியேறினார். இருவர் சதத்தை தொடர்ந்து பிரையன் பென்னட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 586 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியின் அதிக ஸ்கோர் ஆகும். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஏஎம் கசன்பர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
- ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவரும் திருப்பதி கோவிலை சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
- விராட் கோலியை கோமாளியை போல் சித்தரித்து ஆஸ்திரேலியா பத்திரிக்கை மோசமாக விமர்சித்துள்ளது.
- ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போனில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140, லபுஸ்ஷேன் 72, சாம் கோன்ஸ்டஸ் 60 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
முன்னதாக இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதான இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகினார். அவர் மீது விராட் கோலி மோதலில் ஈடுப்பட்டார். அதற்காக ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாகவும் விதித்தது.
இந்நிலையில் தங்களுடைய நாட்டைச் சேர்ந்த இளம் வீரரை வேண்டுமென்றே இடித்து தள்ளிய விராட் கோலியை மேற்கு ஆஸ்திரேலியா பத்திரிக்கை முகப்பு பக்கத்தில் கோமாளியை போல் சித்தரித்து மோசமாக விமர்சித்துள்ளது.
அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் காலம் காலமாக சீட்டிங் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழும் நீங்கள் விராட் கோலியை இப்படி சித்தரிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக 2018-ம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஃபான்கிராப்ட் ஆகியோர் உப்பு காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தினார்கள். அப்படி குறுக்கு வழியில் வெற்றி பெறுவதற்காக பந்தை சேதப்படுத்திய அவர்களுக்கு ஆஸ்திரேலிய வாரியமே தடை விதித்தது.
மறுபுறம் இங்கே தம்முடைய அணிக்கு பின்னடைவை கொடுத்த வீரர் மீது தைரியமாக விராட் கோலி நேருக்கு நேராக மோதினார். அப்படி தன்னுடைய தாய் நாட்டுக்காக விராட் கோலி அவ்வாறு செய்ததை நியாயப்படுத்த முடியாது என்பது உண்மையாகும். ஆனால் கோமாளி என்ற சித்தரிக்கும் அளவுக்கு விராட் கோலி எதுவும் தவறாக செய்யவில்லை என்பது நிதர்சனமாகும்.
மேலும் தடை முடிந்து ஓராண்டுக்கு பிறகு வந்த ஸ்மித்தை இந்திய ரசிகர்கள் கலாய்த்தனர், அப்போது பேட்டிங் செய்து கொண்டிருடிருந்த கோலி ஸ்மித்தை கலாய்க்க வேண்டாம். அவருக்கு ஆதரவு தெரிவியுங்கள் என கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் எனவும் சைகை காட்டுவார். இதற்கு ஸ்மித் நன்றி தெரிவிக்கும் வகையில் விராட் கோலியிடம் கைகுலுக்கி விட்டு செல்வார்.
இந்த சம்பவங்கள் குறித்து பெரிய அளவில் பேசாத ஆஸ்திரேலிய பத்திரிக்கை, எப்போது கோலி சிக்குவார் என்பது போல காத்திருந்து செய்தது போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை என்று இந்திய ரசிகர்கள் அந்த பத்திரிக்கைக்கு சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
- 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- ஆட்டநாயகி விருதை தீப்தி சர்மாவும், தொடர் நாயகியாக ரேணுகா தாகூரும் தட்டி சென்றனர்.
மகளிர் கிரிக்கெட் போட்டியின் ஒருநாள் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வந்தனர். முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஷெமைன் காம்பெல்லே - சினெல்லே ஹென்றி ஜோடி அணியை மீட்டனர். 46 ரன்கள் எடுத்த போது காம்பெல்லே அவுட் ஆனார். அடுத்து வந்த ஜைதா ஜேம்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி அரை சதம் விளாசினார். அவர் 61 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 162 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 4 ரன்னிலும் ஹர்லீன் தியோல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து பிரதிகா ராவல் 18, கவுர் 32, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 29 என வெளியேறினார்.
இறுதியில் தீப்தி சர்மா (39) மற்றும் ரிச்சா கோஷ் (23) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் 28.2 ஓவரில் 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது.
- இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. ஏராளமான ஓவர்கள் உள்ளன.
- ஆகவே, மிகவும் கடினமான வகையில் அணிக்கு தேவையானதை செய்ய முயற்சிப்போம்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்களில் குவித்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. 51 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
இந்த ஜோடி 102 ரன்கள் குவித்த நிலையில் ஜெய்ஸ்வால் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். 41-வது ஓவரின் கடைசி பந்தில் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 43-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் இந்தியா 2-வது நாள் ஆட்டம் முடிவடைவதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 164 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. இன்னும் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தற்போது ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் மட்டும் வெளியில் உள்ளனர்.
இன்றைய 2-வது நாள் ஆட்டம் முடிந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மூன்று பிரிவுகளிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) இந்திய அணி என்னிடம் இருந்து சிறந்ததை எதிர்பார்ப்பதை ஆச்சர்யமாக பார்க்கவில்லை. அது எனக்கான சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். அணிக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதை செய்வது அணிக்கு முக்கியமானது. எந்தவொரு சூழ்நிலை என்று கவலை இல்லை. களம் இறங்கி முழு எனர்ஜியுடன் அணிக்காக விளையாட வேண்டும்.
நாங்கள் சிறந்த ரன்களை குவிக்கும் அளவில் நல்ல பொசிசனில் இருந்தோம். ஆனால், நாளை காலை வந்து தொடர்ந்து போராடுவோம்.
வீரர்கள் அறையில் எனர்ஜி மிகவும் சிறப்பாக உள்ளது. நாங்கள் அனைவரும் பாசிட்டிவாக உள்ளோம். இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. ஏராளமான ஓவர்கள் உள்ளன. ஆகவே, மிகவும் கடினமான வகையில் அணிக்கு தேவையானதை செய்ய முயற்சிப்போம்.
நேற்று ஆடுகளம் சற்று சாஃப்ட் ஆக இருந்தது. ஆள் முழுவதும் சூரியன் வெளியே வராமல் மேக மூட்டமாக காணப்பட்டது. இன்று சிறப்பாக பேட்டிங் செய்யும் வகையில் ஆடுகளம் மாறியது. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தோம். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும் என கருதுகிறேன். ஆடகளம் மிகப்பெரிய அளவில் மாறாது. பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும்.
- ஒரு கட்டத்தில் இந்தியா 153/2 என்ற நிலையில் இருந்தது.
- அடுத்த 11 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா, 3 விக்கெட்டுகளை இழந்தது.
மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன், கவாஜா 57 ரன், லபுசேன் 70 ரன், அலெக்ஸ் கேரி 31 ரன், மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் தொடங்கியது. ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க வீரர்களாக ரோகித் -ஜெய்ஸ்வால் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கேஎல் ராகுல் 24 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து ஜெய்ஸ்வால் - கோலி ஜோடி நிதானமாக விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார்.
இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. 2-வது நாள் ஆட்டம் முடிய கடைசி அரை மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் தேவையில்லாமல் ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். அவர் 82 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இதனால் நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஜெய்ஸ்வால் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் ஆப் சைடு வந்த பந்தை அடிக்க முற்பட்டு அவுட் ஆகி வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 153/2 என்ற நிலையில் இருந்தது. 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 6 ரன்னிலும் ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர்.
- விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.
இந்நிலையில் இளம் வீரரை சீண்டிய விராட் கோலியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். விராட் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் அவரை தொடர்ந்து கலாய்த்து கொண்டே இருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி, அவர் சாப்பிட்டு கொண்டிருந்த சூயிங்கமத்தை ரசிகர்களை பார்த்து துப்பினார்.
இந்த வீடியோவுக்கு இந்திய ரசிகர் ஒருவர் தீம் மியூசிக் வைத்து எடிட்டி செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதேபோல இன்று இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில் விராட் கோலி 36 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதும் ரசிகர்கள் கலாய்த்தனர். இதனால் கோபமடைந்த விராட் திரும்பி வந்து ரசிகர்களை பார்த்து முறைத்து கொண்டார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
- இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
- நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் சாம் கான்ஸ்டாஸ் 60 ரன், கவாஜா 57 ரன், லபுசேன் 70 ரன், அலெக்ஸ் கேரி 31 ரன், மிட்செல் மார்ஷ் 4 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்தது. அபாரமாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். மறுபுறம் கம்மின்ஸ் 49 ரன், ஸ்டார்க் 15 ரன் எடுத்து அவுட் ஆகினர். நிதானமாக ஆடி வந்த ஸ்மித் 140 ரன்னில் அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 122.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 474 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆட உள்ளது.






