என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கட தத்தா சாய்"

    • பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
    • ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.

    முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

    இந்நிலையில் புதுமண தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இருவரும் திருப்பதி கோவிலை சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    ×