என் மலர்
விளையாட்டு
- 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
- தமிழக அணிகள் இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
சென்னை:
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பள்ளியில் 30-வது தேசிய சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4 நாட்களாக லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய 2 பிரிவிலும் தமிழக அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
மகளிர் இறுதிப் போட்டி யில் லக்சனா சாய் எலமஞ்சி தலைமையிலான தமிழக அணி 17-14 என்ற கணக்கில் அசாமை வீழ்த்தி முதலிடத்தை பிடித் தது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட் டார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்தது.
ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கேரள அணிகள் மோதின. 29-26 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றது. தெலுங்கானா 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிகளுக்கு ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனி ரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார்.
இந்திய நெட்பால் சம்மேளனத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், செயலாளர் எலமஞ்சி பிரதீப், பொருளாளர் சவுமியா, இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் பி.செல்வராசு, ஆர்.எம்.கே. பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.
- வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோற்றது. மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் 184 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
2025-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டி விவரங்கள் முழுவதும் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 3-ந்தேதி சிட்னி மைதானத்தில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியோடு இந்த ஆண்டு இந்தியாவில் போட்டி தொடங்குகிறது.
இதையடுத்து ஜனவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்ததாக பிப்ரவரி-மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கிறது.
அதன்பிறகு இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
அக்டோபரில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி அதன்பின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
அதை தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 வடிவிலான தொடரிலும் விளையாடவுள்ளது. இந்திய அணி இந்த ஆண்டில் 18 இருபது ஓவர் போட்டிகளிலும், 10 டெஸ்டிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறது.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 4 வீராங்கனையான படோசா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நம்பர் 4 வீராங்கனையும், ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா, ரஷிய-அமெரிக்க வீராங்கனையான எலினா அவனேசியான் உடன் மோதினார்.
இதில் படோசா 3-6, 6-1, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது.
- எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் எம்.எஸ். தோனி. டி20, ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றியுள்ளார்.
சமீபத்தில் ஒரு உரையாடலின்போது, தன்னுடைய மானேஜர்கள் அடிக்கடி பொதுமக்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைத்தனர். ஆனால் அதில் இருந்து நான் விலகியே இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மகேந்திர சிங் தோனி கூறியதாவது:-
நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. எனக்கு வெவ்வேறு மானேஜர்கள் இருந்தனர். அவர்கள் அதை நோக்கி வற்புறுத்தினர்.
நான் 2004-ல் கிரிக்கெட் விளையாட்டை தொடங்கும்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமாகிக் கொண்டிருந்தது. அப்போது மானேஜர்கள் நீங்கள் PR (public relations- மக்கள் தொடர்பு) அமைக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் அதற்கு என்னுடைய பதில் அதே பதில்தான். நான் சிறந்த கிரிக்கெட் விளையாடினால், எனக்கு PR தேவையில்லை.
அதனால் எனக்கு ஏதாவது இருந்தால் நான் அதை வைப்பேன். இல்லையென்றால் நான் அதை வைக்க மாட்டேன். யாருக்கு எத்தனை பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள், யார் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் நான் கிரிக்கெட்டை கவனித்துக் கொண்டால் மற்ற அனைத்தும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும் என்பது எனக்குத் தெரியும்.
எனக்கு முன்பு போல இப்போது உடல் தகுதி இல்லை. கிரிக்கெட்டுக்கு உடல் தகுதி பெற நான் மிகவும் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்கிறேன். நான் வேகப்பந்து வீச்சாளர் அல்ல, எனவே தேவைகள் அவ்வளவு தீவிரமானவை அல்ல.
இவ்வாறு மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
- 2003-ல் இருந்து பரிந்துரை பெயரில் இருவரில் ஒருவர் பெயராவது இடம் பிடித்து வந்தது.
- முதன்முறையாக இருவருடைய பெயரும் பரிந்துரையில் இடம் பெறவில்லை.
கால்பந்தில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். கால்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் உயரிய விருது பலோன் டி'ஆர் விருது. இந்த விருதை மெஸ்சி 8 முறை வென்றுள்ளார். ரொனால்டோ ஐந்து முறை வென்றுள்ளார்.
2024-ம் ஆண்டிக்கான பலோன் டி'ஆர் விருது அக்டோபர் மாதம் வழங்கப்பட்டது. அதற்கான 30 வீரர்கள் கொண்ட பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மெஸ்சி மற்றும் ரொனால்டோ பெயர் இடம் பெறவில்லை.
2003-ம் ஆண்டில் இருந்து பரிந்துரை பட்டியலில் இருவருடைய பெயரும் இடம் பெறாதது இதுதான் முதன் முறையாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறி பி.எஸ்.ஜி. அணிக்கு சென்றார். பின்னர் அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு சென்றார். ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணியில் இருந்து யுவென்டஸ் அணிக்கு சென்றார். தற்போது சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
மெஸ்சி முதன்முறையாக 2006-ம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் 2009-ல் முதல் விருதை வென்றார். ரொனால்டோ 2004-ம் ஆண்டு முதன்முறையாக பரிந்துரைக்கப்பட்டார். 2008-ல் இருந்து இருவரிடையே கடும் போட்டி நிலவியது. 13 முறை இவர்கள்தான் வென்றுள்ளனர்.

இருவர் பெயர் இல்லாத நிலையில் ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர், இங்கிலிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் ரோட்ரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. இறுதியாக ரோட்ரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவருக்கு வழங்கப்பட்டது.
மேலும், 2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

இதற்கிடையே பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம் விழாவைப் புறக்கணித்தது.
- விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- விதர்பா சார்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.
விசாகப்பட்டினம்:
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம், விதர்பா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவரில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். முகமது அலி 48 ரன்னும், சித்தார்த் 40 ரன்னும் எடுத்தனர்.
விதர்பா சார்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் கருண் நாயர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.
இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் 111 ரன்னும், ஷுபம் துபே ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
- விஜய் ஹசாரே தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
- இதில் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீஷா சுசித் 104 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் 117 பந்தில் 181 ரன்கள் குவித்த மும்பை அணி வீரர் ஆயுஷ் மத்ரே புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி லிஸ்ட் ஏ தொடரில் இளம் வயதில் 150 ரன்கள் மேல் குவித்த வீரரான ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை ஆயுஷ் மத்ரே முறியடித்துள்ளார்.
ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். மத்ரே 17 ஆண்டுகள் 168 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார்.
- 15 போட்டிகளில் மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் ரோகித் சர்மாவின் பேட்டிங் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. அவர் கடந்த 15 இன்னிங்ஸ்கள் முறையே 6, 5, 23, 8, 2, 52, 0, 8, 18, 11, 3, 6, 10, 3, 9 என வெளியேறினார். மொத்தமாக 164 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். சராசரி 10.93 ஆகும். பார்டர் கவாஸ்கர் டிராபில் ரோகித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் 10 ரன்கள் ஆகும்.
இந்நிலையில் ரோகித் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் டெஸ்ட் அணியில் நீடித்திருக்க மாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரோகித் சர்மா தற்போது ரன்களை எடுப்பதில் தொடர்ந்து சிரமப்படுகிறார் என்ற யதார்த்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் கேப்டனாக இல்லாமல் இருந்திருந்தால் இந்திய அணியில் நீடித்திருக்கவே மாட்டார்.
இவ்வாறு இர்பான் கூறினார்.
- பார்டர் கவாஸ்கர் தொடர் ஜனவரி 7-ந் தேதியுடன் முடிகிறது.
- இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் ஜனவரி 7-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனையடுத்து இந்தியா அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதலில் டி20 தொடரும் அதன் பிறகு ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 2-ந் தேதியுடன் முடிகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ல் தொடங்கி பிப்ரவரி 12-ல் முடிகிறது. இந்த ஒருநாள் தொடர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியா 3 வீரர்களுக்கு ஓய்வு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி மாதம் இறுதியில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில் இவர்கள் 3 பேருக்கும் ஓய்வு அளிப்பது அதிர்ச்சியாக உள்ளது. பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ஓவர்களை வீசியுள்ளார். அதற்காக அவருக்கு ஓய்வு அறிவிக்கலாம். ஃபார்மில் இல்லாத ரோகித், விராட் கோலிக்கு ஏன் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற கருத்து வெளியாகி உள்ளது.
- உடல்நலக் குறைவு காரணமாக வினோத் காம்ப்ளி சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மும்பையை அடுத்த தானேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைக்கு பிறகு வினோத் காம்ப்ளி அபாய கட்டத்தை கடந்து விட்டார் எனவும் அவர் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப முடியாது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் காம்ப்ளியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடையும் வரை கிட்டத்தட்ட ஒருமாத காலத்திற்கு அவருக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வினோத் காம்ப்ளி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.
சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
- அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் என்ற வார்த்தை விராட் கோலியால் டிரெண்டானது.
- ரிஷப் பண்ட் கம்பேக் என்ற வார்த்தையும் டிரெண்டானது.
2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 வார்த்தைகள் குறித்தும் எதனால் அந்த வார்த்தை டிரெண்டானது குறித்தும் இந்த செய்தியில் காண்போம்.
1. ஜஸ்பிரிட் பும்ரா (jasprit bumrah)

டி20 உலகக் கோப்பை முதல் பார்டர் கவாஸ்கர் டிராபி வரை பந்து வீச்சில் மிரட்டி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். இந்த ஆண்டில் டெஸ்ட்டில் 71 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். தற்போது நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் மட்டும் 30 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் பட்டியலில் பும்ரா 5-வது இடத்தில் உள்ளார். இதன் மூலம் அதிக அளவில் பேசப்பட்ட வார்த்தைகளில் பும்ரா முதல் இடத்தில் உள்ளார்.
2. ஹர்திக் பாண்ட்யா (hardik pandya)

பாண்ட்யா டிரெண்டாக முக்கிய காரணமாக இருந்தது மும்பை இந்தியன்ஸ். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் மீது ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மைதானத்தில் விளையாடும் போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கோஷங்களை எழுப்பினர். டாஸ் போட வரும் போது ரோகித் ரோகித் என முழங்கினர். இதற்கு மேலாக மைதானத்திற்குள் ஒரு நாய் வந்தது. உடனே அதை பார்த்து ஹர்திக் ஹர்திக் என கூச்சலிட்டனர். இதனால் ஹர்திக் பாண்ட்யா சமூக வலைதளங்கில் டிரெண்டாகினார்.
இதனையடுத்து நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை திசை திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்திய அணி வீரர்கள் கோப்பையுடன் மும்பை மைதானத்திற்கு வந்த போது எந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷமிட்டார்களோ அவர்களே அவருக்கு எதிராக ஆதரவு தெரிவித்தனர்.
3. டி20 உலகக் கோப்பை (t20 world cup)

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
4. சஞ்சு சாம்சன் (sanju samson)

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ரொம்ப காலமாக தவித்த வீரர் சஞ்சு சாம்சன். இவர் இந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் தொடக்க வீரராக களமிறங்கினார். தொடர்ந்து 2 சதங்களை விளாசினார். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 3 சதங்கள் விளாசி சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார்.
தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கான நிறந்தரமான இடத்தை அவர் இந்த ஆண்டு தக்க வைத்து கொண்டார்.
5. கவுதம் கம்பீர் (gambhir era)

இந்த ஆண்டில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை இழந்தது. 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்ததால் கவுதம் கம்பீரின் வீரர்கள் தேர்வு அதிகாரத்தை பிசிசிஐ பரித்தது. தற்போது பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் கவுதம் கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது.
6. இலங்கை & நியூசிலாந்து ஒயிட்வாஷ் (SL&NZ whitewash)

இந்திய அணி இலங்கைக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 27 ஆண்டுக்கு பிறகு தொடரை கைப்பற்றி இலங்கை சாதனை படைத்தது.
இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கிறது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியின் சாதனை முடிவுக்கு வந்துள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
7. ரிஷப் பண்ட் கம்பேக் (rishabh pant comeback)

2022-ம் ஆண்டு ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவரா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதில் விளையாடவில்லை.
அதன் பிறகு பூரண குணமடைந்து டி20 உலகக் கோப்பையில் களமிறங்கினார். இறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவின் ஆட்டத்தை காயம் என கூறி தனது ஐடியா மூலம் சிறிது நேரம் தாமதப்படுத்தினார். இதனால் ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இதுவும் பார்க்கப்பட்டது.
அதன்பிறகு 2025-ம் ஆண்டில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர்-ஐ பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது. இது ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.
8. அஸ் அண்ணா (Ash anna)

பார்டர் கவாஸ்கர் தொடரின் 3-வது போட்டியுடன் தமிழக வீரர் அஸ்வின் ஓய்வை அறிவித்தார். இதனால் அஸ் அண்ணா என்ற வார்த்தை அதிக பேசப்பட்டது. அவர் குறித்த பல முக்கியமான வீடியோக்கள் சிறந்த பந்து வீச்சு பேட்டிங் என அனைத்து டிரெண்டானது.
9. ஓய்வு அறிவிப்பு (retirement)

இந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து அதிக பேர் ஓய்வை அறிவித்தனர். இதனால் Retirement என்ற அதிகமாக பேசப்பட்டது. டீன் எல்கர், டேவிட் வார்னர், கிளாசன், நீல் எல்கர், தினேஷ் கார்திக், கேதர் ஜாதவ், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா, ஜேம்ஸ் ஆண்டர்சன், தவான், டேவிட் மலான், மொயின் அலி, ஷகிப் அல் ஹசன், மேத்வூ வேட், விருத்திமான் சகா, அஸ்வின், சவுத்தி என முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தனர்.
10. அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் (outside the off stump)

outside the off stump என்ற வார்த்தை டிரெண்டாக முக்கிய காரணமாக விளங்கியவர் இந்திய அணியின் விராட் கோலி. இவர் கடந்த சில போட்டிகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்புக்கு சென்ற பந்தை அடிக்க முயற்சித்து அவுட் ஆகி வந்தார். இதனை பல முன்னாள் வீரர்கள் எடுத்து கூறியும் அதனை கண்டுக்கொள்ளாமல் அந்த ஷாட்டை ஆட முயற்சித்து அவுட் ஆனார்.
குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 இன்னிங்சுகளில் அவுட் சைடு தி ஆப் ஸ்டெம்ப் பந்தில் தான் விராட் கோலி அவுட் ஆனார்.
- ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
சிட்னி:
பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகிடா உடன் மோதினார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் கேல் மான்பில்ஸ் உடன் மோதுகிறார்.






