என் மலர்
நீங்கள் தேடியது "Netball Tournament"
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில வலைப்பந்து கழக அனுமதியுடன் உடன் அரியூர் தனசேகரன் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான 31-வது சீனியர் ஆண் பெண் மற்றும் 28-வது சப் ஜூனியர் ஜூனியர் சிறுவர் மற்றும் சிறுமியர் சாம்பியன்ஷிப் வலைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
துணை சபாநாயகர் ராஜவேலு புதுவை அமெச்சூர் வலை பந்து சங்க தலைவர் ராமு நாயக்கர், பொதுச் செயலாளர் தினேஷ்குமார், ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தினார்.
- அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.
- விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
தென்னாப்பிரிக்கா நாட்டில் 5-வது சர்வதேச வலைப்பந்து போட்டி வருகின்ற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்பொழுது இந்திய அணி வருகிற 28-ந் தேதி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் புதுச்சேரியில் இருந்து பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கமலநாதன் மகள் கமலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை கவுரவித்து அவருக்கு சங்கத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நலச் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் சங்க செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
- அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்
- புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அமெச்சூர் நெட்பால் விளையாட்டுக்கழகம் சார்பில் 5-வது சிறுவர், சிறுமிகளுக்கான மாநிலஅளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள் திலாசுப்பேட்டை வீமன் நகர் மந்தைவெளி திடலில் 2 நாட்கள் நடக்கிறது.
இதில் புதுவை பிராந்தியத்தில் உள்ள 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் தொடக்கவிழாவுக்கு நெட்பால் சங்க செயலாளர் அனிதா வரவேற்றார். புதுவை அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
முனுசாமி, நாகரத்தினம், நெட்பால் சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், உழவர்கரை நகராட்சி பொறியாளர்கள் மலைவாசன், முத்தையன், பாலையா, கதிரேசன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
- தமிழக அணிகள் இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
சென்னை:
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பள்ளியில் 30-வது தேசிய சப்-ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 4 நாட்களாக லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய 2 பிரிவிலும் தமிழக அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. இரு பிரிவிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பட்டம் வென்று சாதித்தன.
மகளிர் இறுதிப் போட்டி யில் லக்சனா சாய் எலமஞ்சி தலைமையிலான தமிழக அணி 17-14 என்ற கணக்கில் அசாமை வீழ்த்தி முதலிடத்தை பிடித் தது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட் டார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் அரியா னாவை தோற்கடித்தது.
ஆண்கள் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு கேரள அணிகள் மோதின. 29-26 என்ற கணக்கில் கேரளாவை வீழ்த்தி சாம் பியன் பட்டம் பெற்றது. தெலுங்கானா 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிகளுக்கு ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனி ரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார்.
இந்திய நெட்பால் சம்மேளனத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் துணைத் தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்கா தேவி பிரதீப், செயலாளர் எலமஞ்சி பிரதீப், பொருளாளர் சவுமியா, இயக்குனர் ஆர்.ஜோதி நாயுடு, தமிழ்நாடு நெட்பால் சங்க தலைவர் பி.செல்வராசு, ஆர்.எம்.கே. பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.






