என் மலர்
புதுச்சேரி

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் சர்வதேச வலைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவி கமலியை பாகூர் அனைத்து கடை உரிமையாளர் சங்கத்தினர் வாழ்த்திய காட்சி.
சர்வதேச வலைப்பந்து போட்டிக்கு பாகூர் மாணவி தேர்வு
- அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.
- விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
தென்னாப்பிரிக்கா நாட்டில் 5-வது சர்வதேச வலைப்பந்து போட்டி வருகின்ற 30-ந் தேதி முதல் அடுத்த மாதம் 8- ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் அகில இந்திய டெனிகாய்ட் பெடரேஷன் மூலம் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்பொழுது இந்திய அணி வருகிற 28-ந் தேதி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. இப்போட்டிக்கு இந்திய அணி சார்பில் புதுச்சேரியில் இருந்து பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நல சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கமலநாதன் மகள் கமலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரை கவுரவித்து அவருக்கு சங்கத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வழங்கி வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பாகூர் அனைத்து கடை உரிமையாளர் நலச் சங்கத்தின் தலைவர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் சங்க செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் விளையாட்டு வீரங்கனைக்கு ஆசி வழங்கி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள 3-ம் கட்ட பயிற்சி முகாமிற்கு வழி அனுப்பி வைத்தனர்.






