என் மலர்
புதுச்சேரி

வலைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பை வழங்கப்பட்ட காட்சி
அரியூரில் மாநில அளவிலான வலைபந்து போட்டி
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை
- போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில வலைப்பந்து கழக அனுமதியுடன் உடன் அரியூர் தனசேகரன் விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான 31-வது சீனியர் ஆண் பெண் மற்றும் 28-வது சப் ஜூனியர் ஜூனியர் சிறுவர் மற்றும் சிறுமியர் சாம்பியன்ஷிப் வலைப்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பரிசு கோப்பை வழங்கினார்.
துணை சபாநாயகர் ராஜவேலு புதுவை அமெச்சூர் வலை பந்து சங்க தலைவர் ராமு நாயக்கர், பொதுச் செயலாளர் தினேஷ்குமார், ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்தினார்.
Next Story






