என் மலர்
விளையாட்டு
- மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் ஒரு மறைமுக பதிவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது.
அந்த மெகா ஏலத்தில் அதிகமான வீரர்கள் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணிகள் பலமாக திகழும்? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் பெற்ற குஜராத் டைட்டம்ஸ் அணி கடந்த ஆண்டு சுப்மன் கில்லை அந்த அணியின் கேப்டனாக நீடிக்க வைத்தது.
இந்நிலையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள ஒரு மறைமுக குறிப்பில், எ நியூ ஸ்லேட் (A New Slate), எ நியூ ஸ்டோரி (A New Story) என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்கள் ஏதோ பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிய வந்தது.
அதிலும் குறிப்பாக அந்த பதிவிற்கு கீழ் ரஷீத் கானின் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டுள்ளதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏனெனில் சுப்பன் கில்லை தக்க வைத்த விலையை விட கூடுதல் விலை கொடுத்து அந்த அணி ரஷீத் கானை தக்க வைத்துள்ளது. இதன் காரணமாக ரஷீத் கான் அவர்களிடம் ஏதாவது நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதனால் நிச்சயம் இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு முறை மட்டுமே கேப்டன்சி செய்துள்ள ரஷீத் கான் அந்த இரண்டு போட்டிகளிலுமே கேப்டனாக தோல்வியை சந்தித்துள்ளார். அதேபோன்று அந்த இரண்டு முறையும் அவர் கேப்டனாக இருந்ததும் குஜராத் அணிக்காக மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
ஒட்டுமொத்தமாகவே சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் பிரான்ச்சைசி டி20 கிரிக்கெட்டில் 67 போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள ரஷித் கான் 34 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
- 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சுவாரசியமான போட்டிகளை 2024-ம் ஆண்டில் கொடுத்திருந்தது. குறிப்பாக இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
2024-ம் ஆண்டில் மொத்தம் 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 150 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2024-ம் ஆண்டு அமைந்துள்ளது.
இதில் இங்கிலாந்து 9 வெற்றிகளுடன் கடந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த அணியாக மாறியதோடு, அந்த அணி கடந்த ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 823 ரன்கள் பெற்று, 2024-ல் டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும் சாதனை செய்தது.
இங்கிலாந்தினை அடுத்து அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்தியாக 8 வெற்றிகளுடன் நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் 6 வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.
இதில் தென் ஆப்ரிக்கா ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதியான முதல் அணியாகவும் உள்ளது.
வங்கதேச அணி 2024-ம் ஆண்டிற்கு சிறந்த தருணமாக மாறியது. வங்கதேச வீரர்கள் கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் டெஸ்ட் வெற்றியினைப் பதிவு செய்ததோடு, பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பதிவு செய்தது.
இதேபோல ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்தியாவில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கையில் முதல் முறையாக இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.
2024-ம் ஆண்டு, டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஏமாற்றமாக அமைந்திருந்தது. அவ்வணிகளினால் கடந்த ஆண்டில் எந்த டெஸ்ட் வெற்றிகளையும் பதிவு செய்ய முடியவில்லை.
மறுமுனையில் 2024-ல் இந்திய, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் டெஸ்ட் போட்டிகளில் மிகக் குறைவான இன்னிங்ஸ் ரன்களை பதிவு செய்துள்ளது. இதில் இலங்கை தென் ஆப்பிரிக்காவுடன் 42 ரன்களையும் இந்தியா நியூசிலாந்துடன் 46 ரன்களையும் தென் ஆப்பிரிக்கா இந்தியாவுடன் 55 ரன்களையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டில் பந்து வீச்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக இந்திய அணியின் ஜஸ்பிரிட் பும்ரா (71) உள்ளார். பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் (1556 ரன்கள்) உள்ளார். அதிக சராசரியில் (74.92) இலங்கையின் இளம் நட்சத்திரமான கமிந்து மெண்டிஸ் உள்ளார்.
- புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன.
- ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் முக்கிய கால்பந்து தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக். இந்த லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் ஆர்சனல்- பிரெனட்போர்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புள்ளிகள் பட்டியலில் ஆர்சனல் 3-வது இடத்திலும், பிரென்ட்போர்டு 12-வது இடத்திலும் உள்ளன. ஆர்சனல் இதுவரை 18 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டிகளை டிரா செய்துள்ளது. 2 போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 36 புள்ளிகள் பெற்றுள்ளது.
லிவர்பூல் 18 போட்டிகளில் 14 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி மூலம் 45 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறது. பிரான்ட்போர்டு 18 போட்டிகளில் 7-ல் வெற்றி, 3-ல் டிரா, 8-ல் தோல்வி மூலம் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஆஸ்திரேலியன் ஏ லீக் போட்டியில் மெக்ஆர்தர் எஃப்சி 3-2 என வெஸ்டர்ன் சிட்னி வாண்டரர்ஸ் அணியை வீழ்த்தியது.
இங்கிலீஷ் லீன் ஒன் தொடரில் இன்று 11 போட்டிகளில் நடைபெற இருக்கிறது. இஸ்ரே் பிரீமியர் லீக்கில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
வேல்ஷ் பிரீமியர் லீக்கில் இரணடு போட்டிகள் நடைபெறுகின்றன.
- கோகோ காஃப் முதல் போட்டியில் சீனாவின் ஷாங் சுயாய்-ஐ 7(7)-6(4), 6-2 என வெற்றி பெற்றார்.
- டெய்லர் பிரிட்ஸ் ஷாங் ஜிஷென்னை 6-4, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார்.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் காலிறுதியில் அமெரிக்கா- சீனா அணிகள் மோதின. கோகோ காஃப் முதல் போட்டியில் சீனாவின் ஷாங் சுயாய்-ஐ எதிர்கொண்டார். முதல் செட் டைபிரேக் வரை சென்றது. இறுதியில் கோகோ காஃப் 7(7)-6(4) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-2 எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார்.
டெய்லர் பிரிட்ஸ் ஷாங் ஜிஷென்னை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தான் ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணியில் காயம் காரணமாக அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இடம் பெறவில்லை.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலேனா ரிபானிகா ஜெர்மனியின் சியோஜ்மண்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ரிபானிகா 6-3, 6-1 என வெற்றி பெற்றார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ஷெவ்சென்கோ- ஜெர்மனியின் டேனியல் மசூரை எதிர்கொண்டார். இதில் ஷெவ்சென்கோ 6-7 (5), 6-2, 6-2 வெற்றி பெற்றார்.
கலப்பு போட்டியில் ஜெர்மனியின் சியேஜ்மண்ட்- பியேட்ஸ் ஜோடி 6-2, 6-2 என கஜகஸ்தானின் குலாம்பயேவா- போப்கோ ஜோடியை வீழ்த்தியது. என்றாலும் கஜகஸ்தான் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
- இறுதிச்சுற்றில் நார்வேயின் கார்ல்சென் , ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டம் சமனில் முடிந்தது.
நியூயார்க்:
நியூயார்க்கில் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிச்சுற்றில் நார்வேயின் கார்ல்சென் , ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் இருவரும் சிறப்பாக செயல்பட்டனர் .
இருவரும் 3.5 புள்ளிகள் பெற்றிருந்த நிலையில் சமனில் முடித்து சாம்பியன் பட்டத்தை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டனர். வரலாற்றில் முதல்முறையாக இருவர் சிங்கிள் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- விக்டோரியா அசரென்கா மற்றும் மாயா ஜாய்ண்ட் ஆகியோர் மோதின.
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
பிரிஸ்பேன்:
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா சக நாட்டவரான அன்னா பிளிங்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா மற்றும் மாயா ஜாய்ண்ட் ஆகியோர் மோதின. இந்த போட்டியில் 6-7 (5), 6-2, 6-4 என்ற கணக்கில் விக்டோரியா வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது.
- 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்தது.

இந்நிலையில் சிட்னியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை நிமித்தமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் ஆண்டனி, இந்திய அணி வீரர் விராட் கோலியிடம் செல்போனில் எதையோ காட்டியப்படி சிரித்து பேசினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின.
- முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிக்பாஸ் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் -மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது.
முன்னதாக இந்த போட்டியில் மேக்ஸ்வெல் ஒரு சிறப்பான கேட்ச் பிடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த வகையில் 16 ஓவரை லாரன்ஸ் வீசினார். அவர் வீசிய முதல் பந்தையே வில் சிக்சர் அடிக்க முயற்சித்தார். அப்போது லாங் ஆனில் இருந்த மேக்ஸ்வெல் அவர் அடித்த பந்தை சாமர்த்தியமாக பிடித்தார்.
கிட்டத்தட்ட அந்த பந்து பவுண்டரி கோட்டை கடந்தது. அந்த பந்தை மேக்ஸ்வெல் பிடித்து மேலே தூக்கி போட்டு மீண்டும் எல்லை கோட்டுக்கு வந்து கேட்ச் பிடித்து அசத்தினார். அவரது கேட்சை சக வீரர்கள் பாராட்டினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் 904 புள்ளிகளே சாதனையாக இருந்தது.
- இந்த சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஆண்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசை வரலாற்றில் அதிக தரவரிசை பெற்ற இந்திய டெஸ்ட் பந்து வீச்சாளராக புதிய சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினின் 904 புள்ளிகளே சாதனையாக இருந்தது. இதனை பும்ரா (907) முறியடித்துள்ளார்.
3-வது இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் உள்ளார். பாக்ஸிங் டே டெஸ்டில் அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் டெஸ்ட் ஆல்- ரவுண்டர் தரவரிசையிலும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பாக்ஸிங் டே டெஸ்டில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன். செஞ்சூரியன் பாக்ஸிங் டே மோதலில் பாகிஸ்தானுக்கு எதிரான புரோட்டியாஸ் வெற்றியில் அவர் எடுத்த ஏழு விக்கெட்டுகள் காரணமாக பந்து வீச்சு தரவரிசையில் ஆறு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளார். ஜான்சன் 800 மதிப்பெண்களைத் தாண்டியது இதுவே முதல் முறை.
- தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.
- விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் தோனி ஈடுபட்டார்.
2024-ம் ஆண்டுக்கு விடைகொடுத்து 2025-ம் ஆண்டை உலகமே இன்று வரவேற்ற நிலையில், எம்.எஸ் தோனி தனது மனைவி சாக்ஷி தோனியுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் வீரருமான தோனி, தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினார்.
அவர் தனது மனைவியுடன் நடனம் ஆடி பாரம்பரிய முறைப்படி விளக்கு பட்டம் அமைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.
- காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் வைஷாலி தோற்கடித்தார்.
நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.
இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு வைஷாலி முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்த வைஷாலி, அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான ஜூ வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.
இறுதிபோட்டியில் ஜூ வென்ஜுன் 3.5-2.5 என்ற கணக்கில் சகநாட்டவரான லீ டிங்ஜியை தோற்கடித்து உலக பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற வைஷாலிக்கு, ஐந்து முறை உலக சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த், முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை.
- ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக டிரா ஆனது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு தயாரான ஆஸ்திரேலிய அணி குழு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. புகைப்படங்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிங்க் டெஸ்ட் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை பிரதிபலிக்கும் வகையில் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்க இருக்கிறது.






