என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப்"

    • ஒரு தோல்வி கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.
    • இதன் மூலம் வைஷாலி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    நியூ யார்க்கில் நடைபெறும் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். 23 வயதான வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றுள்ளார்.

    இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள வைஷாலி, அந்த சுற்றில் ஹூ ஜினர்-ஐ எதிர்கொண்டு விளையாட இருக்கிறார். முதலிடத்திற்கு முன்னேறியது பற்றி கூறிய வைஷாலி அதிர்ஷ்டம் கிடைத்ததாக நினைக்கிறேன் என்று கூறினார்.

    இது குறித்து பேசும் போது, "உண்மையில் நான் என்னை சிறந்த பிலிட்ஸ் வீராங்கனையாக நினைக்கவில்லை. என்னைவிட மிகவும் கடினமானவர்கள் இங்கு விளையாடுகின்றனர். இன்றைய போட்டிகளில் எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாகவே நினைக்கிறேன், அது அப்படியே நடந்துவிட்டது," என்று தெரிவித்தார். 

    • ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.
    • காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் வைஷாலி தோற்கடித்தார்.

    நியூயார்க்கில் உலக பிலிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி 8 சுற்றுகள் முடிவில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 11-க்கு 9.5 புள்ளிகளை பெற்றார்.

    இதன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு வைஷாலி முன்னேறினார். காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்த வைஷாலி, அரையிறுதியில் மற்றொரு சீன வீராங்கனையான ஜூ வென்ஜுனிடம் 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

    இறுதிபோட்டியில் ஜூ வென்ஜுன் 3.5-2.5 என்ற கணக்கில் சகநாட்டவரான லீ டிங்ஜியை தோற்கடித்து உலக பட்டத்தை கைப்பற்றினார்.

    இந்த போட்டியில் வெண்கலபதக்கம் வென்ற வைஷாலிக்கு, ஐந்து முறை உலக சாம்பியனும், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) துணைத் தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த், முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    ×