என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.
    • கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

    இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

    • 35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது.
    • இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.

    35-வது தேசிய சீனியர் வாள் வீச்சுப் போட்டிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த டிசம்பர் 31-ந் தேதி தொடங்கி வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கிஷோ நிதி மற்றும் பெண்கள் பிரிவில் பவானி தேதி கலந்து கொண்டனர்.

    சிறப்பாக விளையாடிய கிஷோ நிதி, பவானி தேவி ஆகிய இருவரும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர். 15-5 புள்ளிக் கணக்கில் பவானி தேவியும், 15-11 புள்ளிக் கணக்கில் கிஷோ நிதியும் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    • கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை.

    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது கேப்டன் ரோகித் சர்மா அதில் கலந்து கொள்ளவில்லை. 

    வேகப்பந்து ஸ்லிப் கேட்ச் பயிற்சியின் போது முதல் ஸ்லிபில் விராட் கோலி அடுத்து கேஎல் ராகுல் அதனை தொடர்ந்து நிதிஷ் ரெட்டி ஆகியோர் கேட்ச் பயிற்சியில் ஈடுபட்டனர். 

    மேலும் சுழற்பந்து வீச்சுக்கான ஸ்லிப் கேட்ச் பயிற்சியில் சுப்மன் கில் ஈடுபட்டார். ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டார். பெஞ்சில் இருக்கும் வீரர் கூட பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.


    இதனால் ரோகித் சர்மா கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என தெரிய வந்துள்ளது. கடைசி டெஸ்ட்டில் கேப்டனாக பும்ரா செயல்படவும் சுப்மன் கில் மீண்டும் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த பயிற்சி புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

    முன்னதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிட்ச்சை பார்த்த பிறகு தான் ஆடும் லெவனை அறிவிப்போம் என கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் கிடையாது.
    • ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணிக்கு கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 9-ந் தேதி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அவர் அந்த பொறுப்பை ஏற்றார்.

    காம்பீர் பயிற்சியாளர் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி மோசமான நிலையை சந்தித்து வருகிறது. இலங்கையிடம் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் தொடரை இழந்தது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. தற்போது ஆஸ்திரேலியாவில் 5 போட்டிக் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

    இதற்கிடையே இந்திய வீரர்கள் பேட்டிங் மோசமாக இருப்பதால் ஆஸ்திரேலிய பயணத்துக்கு புஜாரா வேண்டும் என்று காம்பீர் விருப்பம் தெரிவித்தார். அவரது வேண்டுகோளை தேர்வு குழுவினர் நிராகரித்து விட்டனர்.

    இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு காம்பீர் முதல் தேர்வாக இருந்தது கிடையாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகி ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பி.சி.சி.ஐ.யின் முதல் தேர்வாக காம்பீர் (முதல் தேர்வு வி.வி.எஸ்.லட்சுமண்) கிடை யாது. நன்கு அறியப்பட்ட வெளிநாட்டை சேர்ந்த சிலர் 3 வடிவிலான போட்டிகளிலும் பயிற்சியாளராக விரும்பவில்லை. இதனால் அவர் ஒரு சமரசம் செய்தார். வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் வேறு சில நிர்பந்தகளும் இருந்தன.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி நடக்க இருக்கிறது. இதில் காம்பீரின் செயல் திறன் மேம்படவில்லையென்றால் அவரது பயிற்சியாளர் பதவிக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    இதற்கிடையே மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்கு பிறகு வீரர்கள் அறையில் காம்பீர் சத்தம் போட்டதாகவும், இதனால் அவருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. அணியில் பிளவு இருப்பதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது.

    இதை காம்பீர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, 'வீரர்கள் அறையில் நடக்கும் விவாதங்கள் பொதுவெளியில் வரக்கூடாது. வீரர்களுடன் நேர்மையான உரையாடல்கள் நடைபெற்றது. கடுமையான வார்த்தைகள் என்ற தகவல் தவறானது' என்றார்.

    • இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்கள் குவித்தது.
    • நியூசிலாந்து 20 ஓவரில் 211 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

    நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.

    இன்று 3-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை குசால் பெரேரா (101), சரித் அசலங்கா (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது.

    பின்னர் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து களம் இறங்கியது.

    தொடக்க வீரர்களாக டிம் ராபின்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராபின்சன் 21 பந்தில் 37 ரன்கள் விளாசினார். ரச்சின் ரவீந்திரா 39 பந்தில் 69 ரன்கள் குவித்தார். இருவரும் களத்தில் இருக்கும்போது நியூசிலாந்து வெற்றி பெறுவதுபோல் இருந்தது.

    அடுத்து வந்த சாப்மேன் 9 ரன்னிலும், பிளிப்ஸ் 6 ரன்னிலும் ஆட்மிழந்தனர். ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழக்கும்போது 12.2 ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் நியூசிலாந்து அணியால் ரன் குவிக்க இயலவில்லை. டேரில் மிட்செல் மட்டும் 17 பந்தில் 35 ரன்கள் அடித்தார். கடைசி 2 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 14 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து. இதனால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரிலும் 14 ரன்கள் மட்டுமே அடித்தது.

    இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த இலங்கை 218 ரன்கள் அடித்தும் 7 ரன்களில் ஆறுதல் வெற்றியை பெற்றது.

    46 பந்தில் 101 ரன்கள் குவித்த குசால் பெரேரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். நியூசிலாந்து ஜேக்கப் டஃபி தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருக்கும்.
    • தொடரில் நாம் எப்படி விளையாட முடியும் என்பதை பற்றி மட்டுமே விவாதங்கள் இருக்கும்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 4 போட்டிகளில் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

    மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த காரணத்தால் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    வீரர்கள் அறையில் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் வீரர்களை கடுமையாக கடிந்து கொண்டார் எனவும், சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து தூக்கிவிடுவேன் என மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில் நாளை சிட்னி டெஸ்ட் தொடங்க இருக்கும் நிலையில் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான விவாதங்கள் டிரஸ்ஸிங் ரூமிலேயே இருக்க வேண்டும்:

    * முதுகு வலி காரணமாக கடைசி டெஸ்டில் (சிட்னி டெஸ்ட்) இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் விலகியுள்ளார்

    * நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வரை இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருக்கும். உங்களை அங்கேயே வைத்திருக்கும் ஒரே விஷயம் செயல்திறன் மட்டுமே.

    * தொடரில் நாம் எப்படி விளையாட முடியும் என்பதை பற்றி மட்டுமே விவாதங்கள் இருக்கும்.

    * அணிக்குதான் முதலில் முன்னுரிமை. வீரர்கள் அவர்களுடைய இயல்பான விளையாட்டை விளையாட முடியும், ஆனால் அணி விளையாட்டுகளில், தனிநபர் மட்டுமே பங்களிக்க முடியும்.

    * பார்டர்- கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொள்வதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    • 27 பந்தில் அரைசதம் கடந்தார்.
    • 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார்.

    நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டில் நியூசிலாந்தில் உள்ள நெல்சனில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பதும் நிஷாங்கா 14 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து வந்த குசால் பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்சருக்கும பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

    27 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 46 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இலங்கை கேப்டன் சரித் அசலங்கா 26 பந்தில் 46 ரன்கள் விளாசினார்.

    • மெல்போர்ன் டெஸ்டில் முதுகு வலியுடன் பந்து வீசினார்.
    • சிட்னி டெஸ்டில் இடம்பெற வாய்ப்பில்லை எனத் தகவல்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னி டெஸ்ட் நாளை தொடங்குகிறது. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் அணியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் முதுகு வலி காரணமாக சிட்னி டெஸ்டில் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஹர்ஷித் ராணா அவருக்குப் பதிலாக இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறத.

    மெல்போர்ன் டெஸ்டில் பந்து வீசும்போது அடிக்கடி முதுகு வலி காரணமாக முதலுதவி எடுத்துக் கொண்டார். முதுகு வலி இருந்தும் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தினால் அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

    • மிட்செல் மார்ஷ் 7 இன்னிங்சில் 73 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
    • 33 ஓவர்கள் வீசி 3 விக்கெட் எடுத்ததால் அணியில் இருந்து நீக்கம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிவடைந்த 4 போட்டிகளில் ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும், இந்தியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார். அவர் நான்கு டெஸ்டிலும் 73 ரன்கள் (7 இன்னிங்ஸ்) மட்டுமே அடித்துள்ளார். 33 ஓவர்கள் வீசி 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.

    "எங்கள் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பியூ வெப்ஸ்டர் மிட்செல் மார்ஷ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். போதுமான ரன்கள் அடிக்கவில்லை என்பது மிட்செல் மார்ஷ்க்கு தெரியும்" என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.

    வெப்ஸ்டர் கடந்த நவம்பர் மாதம் இந்தியா ஏ அணிக்கு எதிராக விளையாடினால். முதல்தர கிரிக்கெட்டில் 5247 ரன்கள் அடித்துள்ள நிலையில், 148 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
    • இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் துனீசிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் துனீசியாவின் ஒன்ஸ் ஜபேர், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார் .

    இந்த ஆட்டத்தில் ஒன்ஸ் ஜபேர் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று நடைபெறும் அடுத்த சுற்றில் ஒன்ஸ் ஜபேர், அமெரிக்க வீராங்கனை எலீனாவை சந்திக்கிறார்.

    • இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
    • டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார்.

    துபாய்:

    ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

    அதன்படி, டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சக நாட்டவர் ஹாரி புரூக் நீடிக்கிறார்.

    3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார்.

    டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    இந்நிலையில், இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகின்றனர்.

    விராட் கோலி 633 புள்ளிகளுடன் 24-வது இடத்திலும், ரோகித் சர்மா 560 புள்ளிகளுடன் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் அவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்துவருகிறது.
    • இதில் இரட்டையர் பிரிவில் ஜோகோவிச் ஜோடி தோல்வி அடைந்தது.

    பிரிஸ்பேன்:

    பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்-ஆஸ்திரேலியாவின் நிக் கிரியாசு ஜோடி , குரேசிய வீரர் நிகோலா மெக்டிக்-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி உடன் மோதியது .

    பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் ஜோடி 2-6, 6-3, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    ×