என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20: 44 பந்தில் சதம் விளாசிய குசால் பெரேரா
- 27 பந்தில் அரைசதம் கடந்தார்.
- 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்தார்.
நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டில் நியூசிலாந்தில் உள்ள நெல்சனில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பதும் நிஷாங்கா 14 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த குசால் பெரேரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை சிக்சருக்கும பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
27 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த நிலையில், 44 பந்தில் 13 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய குசால் பெரேரா 46 பந்தில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. இலங்கை கேப்டன் சரித் அசலங்கா 26 பந்தில் 46 ரன்கள் விளாசினார்.






