search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kusal Perera"

  • 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
  • இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

  அதன்படி ஆஸ்திரேலிய அணியின் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தே அவுட் என நடுவரிடம் முறையீடப்பட்டது. ஆனால் நடுவர் அதனை நிராகரித்தார். இதனையடுத்து வீசிய 3-வது பந்தில் குசல் பெரேராவை ஸ்டார்க் மன்கட் முறையில் அவுட் செய்ய முயன்றார். இது குறித்து இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டே நகர்ந்தனர்.

  இந்த வீடியோ சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக அளவில் மன்கட் செய்யப்படும் என முன்னாள் வீரர்கள் பலர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்த குசல் பேரேராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. #KusalPerera #SAvSL
  கொழும்பு:

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இலங்கை அணி 304 ரன் இலக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற குசல் பெரேரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 153 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி விக்கெட்டை வைத்து அபாரமாக விளையாடி ஆட்டத்தை மாற்றி குசல் பெரேரா இலங்கையை வெற்றி பெற வைத்தார்.

  கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ். 214 ரன், இங்கிலாந்துக்கு எதிராக, 1984). லாரா (வெஸ்ட் இண்டீஸ். 153 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1999).

  ஜெயவர்த்தனே (இலங்கை. 123 ரன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006), டெண்டுல்கர் (இந்தியா. 103 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2008), வி.வி.எஸ். லட்சுமண் (இந்தியா. 103 ரன் இலங்கைக்கு எதிராக 2010). ஆகியோர் வரிசையில் குசால்பெரைரா இணைந்தார்.

  இதை தொடர்ந்து குசல் பெரேராவுக்கு பாராட்டு குவிகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியதாவது:-

  குசல் பெரேரா மிக சிறந்த வீரர். இதை ஒரு மிக சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். அவரது ஆட்டத்தை மறக்க இயலாது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  மற்றொரு முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறும் போது “குசல் பெரேரா ஒரு அருமையான இன்னிங்சை விளையாடி இருக்கிறார். அவர் நெருக்கடியான நேரத்தில் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை என்றுமே யாராலும் மறக்க முடியாது” என்றார்.

  இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசல் பெரேராவை வெகுவாக பாராட்டினார். #KusalPerera #SAvSL
  பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குசால் பேரேரா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். #WIvSL
  வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. அப்போது இலங்கை வீரர் குசால் பெரேரா லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

  அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் பறந்த சென்றது. இதை பிடிக்க முயன்ற குசால் பெரேரா பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பேனரில் விழுந்தார். இதனால் பலமாக அடிபட்டது. உடனே, ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இலங்கையின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவையுள்ள நிலையில் 5 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் குசால் பெரேரா களம் இறங்குவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பயப்பட வேண்டிய நிலையில் காயம் ஏற்படவில்லை. உடனடியாக மைதானத்திற்கு திரும்பலாம். ஆனால், சற்று ஓய்வு என்ற அறிவிறுத்தப்பட்டுள்ளது. இன்று இலங்கை அணிக்காக கட்டாயம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பெரேரா களம் இறங்குவார்.
  ×