search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Indies vs Sri Lanka"

    பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குசால் பேரேரா ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பகல்-இரவு டெஸ்டாக பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்தது. அப்போது இலங்கை வீரர் குசால் பெரேரா லாங்-ஆன் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடித்த பந்தை லாங்-ஆன் திசையில் பறந்த சென்றது. இதை பிடிக்க முயன்ற குசால் பெரேரா பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பேனரில் விழுந்தார். இதனால் பலமாக அடிபட்டது. உடனே, ஸ்ட்ரெச்சர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



    இலங்கையின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவையுள்ள நிலையில் 5 விக்கெட் மட்டுமே கைவசம் உள்ளது. இதனால் குசால் பெரேரா களம் இறங்குவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு பயப்பட வேண்டிய நிலையில் காயம் ஏற்படவில்லை. உடனடியாக மைதானத்திற்கு திரும்பலாம். ஆனால், சற்று ஓய்வு என்ற அறிவிறுத்தப்பட்டுள்ளது. இன்று இலங்கை அணிக்காக கட்டாயம் களம் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், பெரேரா களம் இறங்குவார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டெஸ்டில் கைவசம் 5 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில் இலங்கைக்கு 63 ரனகள் தேவை என்பதால் பரபரப்பை அடைந்துள்ளது. #WIvSL
    வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. ஒரு கட்டத்தில் 53 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. அதன்பின் வந்த கேப்டன் ஹோல்டர் 74 ரன்களும், விக்கெட் கீப்பர் டவ்ரிச் 71 ரன்களும் அடித்ததால், 204 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் குமாரா 4 விக்கெட்டும், ரஜிதா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கையும் ரன்குவிக்க திணறியது. ஜேசன் ஹோல்டர், கேப்ரியலின் அபார பந்து வீச்சால் 154 ரன்னில் சுருண்டது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா மட்டும் 42 ரன்கள் சேர்த்தார்.

    முதல் இன்னிங்சில் 50 ரன்கள் முன்னிலைப் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. இலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல் விக்கெட் மளமளவென சரிந்தது. இதனால் 31.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் 93 ரன்னில் சுருண்டது.

    இதனால் இலங்கையின் வெற்றிக்கு 144 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். மிகவும் எளிதான ஸ்கோர் என்ற எண்ணத்தில் இலஙகை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 3-வது நாள் கடைசி நேர ஆட்டத்தில் இலங்கை பேட்ஸ்மேன்களால் தாக்குப்பிடித்து விளையாட முடியவில்லை. இதனால் இலங்கை அணியும் விக்கெட்டை இழந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 81 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்துள்ளது. பெரேரா 1 ரன்னுடனும், மெண்டிஸ் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



    இலங்கை அணியின் வெற்றிக்கு 63 ரன்கள் தேவை. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டை வைத்துக் கொண்டு 63 ரன்கள் எடுப்பது இலங்கை அணிக்கு கடும் சவாலானதாக இருக்கும். ஒருவேளை 63 ரன்கள் எடுத்துவிட்டால் இலங்கை தொடரை 1-1 என சமன் செய்யும். அதேவேளையில் 5 விக்கெட்டுக்களை மளமளவென இழந்தால் வெஸ்ட் இண்டீஸ் 2-0 எனத் தொடரை கைப்பற்றும். இதனால் இன்றைய போட்டி பரபரப்பானதாக இருக்கும்.
    ×