ஐசிசி தரவரிசை: டெஸ்ட் பேட்டிங்கில் கடும் சரிவைக் கண்ட இந்திய ஜாம்பவான்கள்

இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார்.
ஐசிசி தரவரிசை: டெஸ்ட் பேட்டிங்கில் கடும் சரிவைக் கண்ட இந்திய ஜாம்பவான்கள்
Published on

துபாய்:

ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.

அதன்படி, டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சக நாட்டவர் ஹாரி புரூக் நீடிக்கிறார்.

3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார்.

டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகின்றனர்.

விராட் கோலி 633 புள்ளிகளுடன் 24-வது இடத்திலும், ரோகித் சர்மா 560 புள்ளிகளுடன் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் அவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com